வைரலாகும் கோவை ஸ்டைல் சிக்கன் சிந்தாமணி ரெசிபி

Chicken Chinthamani Recipe: கோவை ஸ்டைல் சிக்கன் சிந்தாமணி வைரலாகி வருகிறது. குறைந்த மசாலாவுடன், சின்ன வெங்காயம் மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து சுவையான உணவாக இது தயாரிக்கப்படுகிறது. வீட்டிலேயே எளிதாக செய்யக்கூடிய இந்த பாரம்பரிய உணவு, சாதத்துடன் சேர்த்து சாப்பிட மிகுந்த ருசி தருகிறது.

வைரலாகும் கோவை ஸ்டைல் சிக்கன் சிந்தாமணி ரெசிபி

சிக்கன் சிந்தாமணி ரெசிபி

Published: 

17 Mar 2026 20:10 PM

 IST

இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப்பின் தாக்கம் சமையலறையில் மிகப்பெரிய அளவில் உள்ளது என்பதில் சந்தேகமில்லை. எச்சி ஊறவைக்கும் விதத்தில், விதவிதமான உணவுகளை பலரும் செய்து அசத்தும் வீடியோக்களை பார்க்கும்போது, நாமும் சும்மா இருக்க முடியாமல், வீட்டில் அதை செய்து பார்க்க நினைப்போம். அப்படி ஒரு ரீல்ஸ் ட்ரெண்டில் புகழ்பெற்ற உணவுதான் சிக்கன் சிந்தாமணி. சமீப காலங்களில் சமூக வலைத்தளங்களில் வைரலாகும் உணவுகள், பாரம்பரிய சமையலை புதிய தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் ஒரு பாலமாக மாறியுள்ளது. அந்த வகையில், எளிமையான பொருட்களுடன் அசத்தலான சுவையை தரும் இந்த உணவு, பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

கோவை சிறப்பு சிக்கன் சிந்தாமணி – பெரும் வரவேற்பு

கோவை மாவட்டத்தின் தனிச்சிறப்புமிக்க இந்தச் சிந்தாமணி சிக்கன், சமீபகாலமாகச் சமூக வலைத்தள ரீல்ஸ்கள் மூலம் வெகுஜன கவனத்தைப் பெற்றுள்ளது. நீங்களும் இந்த காரசாரமான சிக்கன் சிந்தாமணியை நீண்ட நாட்களாக சாப்பிட ஆசைப்பட்டு, இன்னும் செய்யாமல் இருக்கிறீர்களா? அப்ப, இந்த பதிவு உங்களுக்கு தான். வீட்டிலேயே சுலபமாக, அதேசமயம் அசத்தலான சுவையில் சிந்தாமணி சிக்கன் எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க. இந்த உணவு, மிகக் குறைந்த மசாலாவிலேயே அதிக சுவையை அளிப்பதனால், பாரம்பரிய சமையல் ரசிகர்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது.

தேவையான பொருட்கள் – எளிமையான பட்டியல்

இந்த உணவை தயாரிக்க அதிக சிக்கலான பொருட்கள் தேவையில்லை என்பதே அதன் முக்கிய சிறப்பு. நாட்டுக்கோழி – 1/2 கிலோ, சின்ன வெங்காயம் – 200 கிராம், விதை நீக்கிய காய்ந்த மிளகாய் – 15, கடுகு – 1/4 டீஸ்பூன், வெந்தயம் – 1/4 டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி – 1 கைப்பிடி, நல்லெண்ணெய் – 2 குழி கரண்டி, தண்ணீர் – 2 கப், உப்பு – தேவையான அளவு ஆகியவை போதுமானவை. மிக எளிமையான இந்த பொருட்கள் சேர்க்கை, சுவையில் எந்த குறையும் இல்லாமல் உணவை ருசியாக மாற்றுகிறது.

செய்முறை – வீட்டிலேயே சுலபமாக தயாரிக்கலாம்

  • முதலில் சிக்கனை சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி மஞ்சள், உப்பு சேர்த்து கழுவி எடுத்துக்கொள்ளவும்.
  • இப்போது ஒரு அடி கனமான கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
  • பின்னர், கடுகு, வெந்தயம் சேர்த்து பொரிந்ததும் சின்ன வெங்காயத்தை சேர்க்கவும்.
  • அதன் கூடவே, விதை நீக்கி வைத்த காய்ந்த மிளகாயை கிள்ளி சேர்த்து நன்கு வதக்கவும்.
  • சின்ன வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
  • இப்போது சிக்கனை சேர்த்து கலந்து விடவும். கூடவே 2 கப் தண்ணீர், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து வேக விடவும்.
  • சிக்கனில் உள்ள தண்ணீர் அவியாகி சிக்கன் வெந்ததும் கொத்தமல்லி தூவி கலந்து அடுப்பை அணைத்தால் சுவையான சிக்கன் சிந்தாமணி தயார்.
  • சுட சுட சாதத்தில் சிக்கன் சிந்தாமணியை சேர்த்து பினைந்து சாப்பிட்டால் சுவை அட்டகாசமாக இருக்கும்.
  • அதிக மசாலா எதுவும் இல்லாமல், வெறும் மஞ்சள் மற்றும் உப்பு சேர்த்து செய்யக்கூடிய இந்த சிக்கன் சிந்தாமணியை அடுத்த முறை வீட்டில் செய்து பாருங்க.

சிறப்பு டிப்ஸ் – சுவையை உயர்த்தும் ரகசியங்கள்

காய்ந்த மிளகாயை விதை நீக்கி சின்ன சின்னதாக நறுக்கி சேர்த்தால் சாதத்துடன் பினைந்து சாப்பிடுவதற்கு சூப்பராக இருக்கும். சிக்கன் சிந்தாமணியை நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய்யில் மட்டும் தான் செய்ய வேண்டும். சிக்கன் சிந்தாமணியின் சுவையை முழுமையாக அனுபவிக்க நாட்டு கோழியில் அதுவும் மண் சட்டியில் செய்து சாப்பிடுங்கள். இத்தகைய சிறிய குறிப்புகளை பின்பற்றினால், வீட்டிலேயே ஹோட்டல் தரமான சுவையை எளிதாக பெற முடியும்.

Follow Us
வங்கி லாக்கரில் வைக்கப்படும் நகைகளுக்கு பாதுகாப்பு இல்லையா? உண்மை என்ன?
ஹார்முஸ் கடல் பகுதியில் சிக்கிய இந்திய கேப்டன் பயணித்த கப்பல் - குடும்பத்தினர் கவலை
போர் பதற்றம் - வெறிச்சோடி காணப்படும் துபாய் நகரங்கள்
இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு என்பது உண்மையா? மத்திய அரசு விளக்கம்