Winter Skin Care: குளிர்காலத்தில் சரும பளபளப்பு! வீட்டிலேயே இந்த 5 ஃபேஸ் பேக் ட்ரை பண்ணுங்க..!

Home Made Face Pack For Winter: குளிர்காலத்தில் (Winter) உங்கள் சருமத்தை கவனித்துக்கொள்வது மிகவும் முக்கியம், ஏனெனில் இந்த பருவத்தில் எந்த கிரீம் பயன்படுத்தினாலும் சருமம் எளிதில் வறண்டு, உயிரற்றதாகவும், ஒட்டும் தன்மையுடையதாக மாறும். இதுபோன்ற சூழ்நிலையில், சருமத்தை முறையாகப் பராமரிக்க, இங்கே குறிப்பிடப்பட்டுள்ள ஃபேஸ் பேக்குகளைப் பயன்படுத்தலாம்.

Winter Skin Care: குளிர்காலத்தில் சரும பளபளப்பு! வீட்டிலேயே இந்த 5 ஃபேஸ் பேக் ட்ரை பண்ணுங்க..!

குளிர்கால பேஸ் பேக்

Published: 

10 Jan 2026 16:54 PM

 IST

வானிலை மாறும்போது, ​​நமது சருமம் மந்தமாகவும் வறண்டதாகவும் மாறும். குறிப்பாக குளிர்காலத்தில் (Winter) உங்கள் சருமத்தை கவனித்துக்கொள்வது மிகவும் முக்கியம், ஏனெனில் இந்த பருவத்தில் எந்த கிரீம் பயன்படுத்தினாலும் சருமம் எளிதில் வறண்டு, உயிரற்றதாகவும், ஒட்டும் தன்மையுடையதாக மாறும். இதுபோன்ற சூழ்நிலையில், சருமத்தை முறையாகப் பராமரிக்க, இங்கே குறிப்பிடப்பட்டுள்ள ஃபேஸ் பேக்குகளைப் பயன்படுத்தலாம். இந்த ஃபேஸ் பேக்குகள் (Face Pack), வாரத்திற்கு ஒரு முறை பயன்படுத்தி முழு பலன்களை பெறலாம். இதை பயன்படுத்துவது சருமத்தில் எரிச்சலையும், அரிப்பையும் ஏற்படுத்தாது. அந்தவகையில், குளிர்காலத்திற்கு சரியான ஃபேஸ் பேக்குகளை எப்படி தயாரிப்பது என்று தெரிந்து கொள்வோம்.

ALSO READ: அதீத குளிரால் சருமத்தில் வறட்சியா? எளிதாக நீக்கும் 4 வீட்டு குறிப்புகள்!

தேன் ஃபேஸ் பேக்:

தேன் ஃபேஸ் பேக்கை தயாரிக்க, ஒரு டீஸ்பூன் தேன், சில துளிகள் எலுமிச்சை சாறு மற்றும் போதுமான ரோஸ் வாட்டர் ஆகியவற்றை நன்றாக கலக்கவும். அவ்வளவுதான் உங்கள் தேன் ஃபேஸ் பேக் தயார். இவற்றை உங்கள் முகத்தில் தடவுவதற்கு முன், தடவ எளிதாக இருக்கும் வகையில் லேசாக ஈரப்படுத்தி கொள்ளவும்.

காபி ஃபேஸ் பேக்:

உங்கள் சருமத்தின் பளபளப்பை அதிகரிக்க காபி ஃபேஸ் பேக்கைப் பயன்படுத்தலாம். இதை தயாரிக்க, உங்களுக்கு அரைத்த காபி, தேன் மற்றும் பால் தேவைப்படும். நீங்கள் இரண்டு டீஸ்பூன் காபி, ஒரு டீஸ்பூன் தேன் மற்றும் போதுமான பால் ஆகியவற்றைப் பயன்படுத்தி ஃபேஸ் பேக்கை தயாரித்து கொள்ளலாம். இதை உங்கள் முகத்தில் 20 நிமிடங்கள் விட்டுவிட்டு, பின்னர் கழுவி எடுத்து கொள்ளலாம்.

அரிசி மாவு ஃபேஸ் பேக்:

ஒரு கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் அரிசி மாவை எடுத்து, அதனுடன் சம அளவு அரைத்த ஓட்ஸ் மற்றும் தேனை கலந்து எடுத்து கொள்ளவும். இதை முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து கழுவவும். இது உங்கள் சருமத்திற்கு அழற்சி எதிர்ப்பு பண்புகளை வழங்குகிறது.

கடலை மாவு ஃபேஸ் பேக்:

குளிர்காலத்தில் உங்கள் முகம் பளபளப்பாக இருக்க வேண்டுமெனில், 2 டீஸ்பூன் கடலை மாவுடன் 1 டீஸ்பூன் பால் கிரீம், ஒரு சிட்டிகை மஞ்சள் மற்றும் பால் ஆகியவற்றைக் கலந்து ஒரு பேஸ்ட் தயாரித்து கொள்ளவும். இந்த ஃபேஸ் பேக்கை உங்கள் முகத்தில் தடவி, 15 நிமிடங்கள் அப்படியே விட்டு பின்னர் கழுவவும்.

ALSO READ: பருக்கள் வந்து முகத்தில் வடுக்களா..? சரிசெய்யும் 6 எளிய குறிப்புகள்..!

கற்றாழை ஃபேஸ் பேக்:

கற்றாழை மற்றும் சந்தனப் பொடியை ஒன்றாக கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவவும். இதை பயன்படுத்துவதன்மூலம், குளிர்காலத்தில் முகப்பருவை நீக்கவும், சருமத்தில் உள்ள கறைகளைக் குறைக்கவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

கிரீன்லாந்தை குறிவைக்கும் டிரம்ப்.. என்ன காரணம் தெரியுமா?
இந்த ஆண்டின் சந்திர கிரகணம் எப்போது? இதன் சிறப்புகள் என்ன?
32 விமானங்கள்... 300 விலையுர்ந்த கார்கள்... 52 தங்கப்படகுகள் - உலகின் பணக்கார மன்னர்
சுவிட்சர்லாந்துக்கு இணையான இந்தியாவின் குளிர்பிரதேசம்... டிராஸ் பற்றி தெரியுமா?