Food Recipes: ரெஸ்டாரண்ட் ஸ்டைல் மீன் வறுவல்.. வீட்டிலேயே சூப்பரா இப்படி செய்து பாருங்க..!

Restaurant Style Fish Fry Recipe: ஹோட்டல் ஸ்டைலில் மீன் வறுவலை எப்படி எளிதாக செய்வது என்பதை விளக்குகிறோம். சுத்தம் செய்யப்பட்ட மீனை, மசாலா கலவையில் ஊறவைத்து, பின்னர் பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். மிளகாய், மஞ்சள், இஞ்சி-பூண்டு விழுது போன்ற மசாலா பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.

Food Recipes: ரெஸ்டாரண்ட் ஸ்டைல் மீன் வறுவல்.. வீட்டிலேயே சூப்பரா இப்படி செய்து பாருங்க..!

மீன் வறுவல்

Published: 

20 Jul 2025 17:08 PM

அசைவ பிரியர்களுக்கு சிக்கன், மட்டன் (Mutton) மிகவும் பிடித்த அசைவ உணவுகளில் ஒன்றாக இருக்கலாம். அதேநேரத்தில், மீனின் சுவையை யாரும் விட்டுகொடுக்க மாட்டார்கள். மீன் வறுவல் என்றாலும் பலருக்கும் அதீத பிரியம் இருக்கும். இதை பற்றி பேசும் நேரம் நமக்கு பசியை தூண்டு. இதை ஒரு மாலை நேர ஸ்நாக்ஸை சிற்றுண்டியாகவோ அல்லது விருந்திலோ ஸ்டாட்டராகவோ சாப்பிடலாம். பெரிய பெரிய ரெஸ்டாரண்ட்டில் மீன் வறுவல் (Fish Fry) அதிகம் ஆர்டர் செய்யப்படும் மீன் சார்ந்த உணவுகளில் ஒன்றாகும் என்று சொன்னால் அது மிகையாகாது. அதன்படி, ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் மீன் வறுவல் எப்படி செய்வது என்று பார்ப்போம்.

ALSO READ: ஹாட் அண்ட் டேஸ்ட்! கிரிஸ்பி சிக்கன் லெக் பிரை ரெசிபி இதோ..!

ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் மீன் வறுவல்:

  • மீன் துண்டுகள் – 4 முதல் 5
  • உப்பு – தேவையான அளவு
  • எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன்
  • இஞ்சி பூண்டு விழுது – 1 1/2 ஸ்பூன்
  • பச்சை மிளகாய் – 2
  • மிளகாய் தூள் – 2 ஸ்பூன்
  • கரம் மசாலா – 1 ஸ்பூன்
  • மஞ்சள் – சிறிதளவு
  • எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு

ALSO READ: மழைக்காலத்தில் காரசாரமா ஏதாச்சும் ருசிக்கணுமா..? செட்டிநாடு சிக்கன் ட்ரை பண்ணுங்க!

மீன் வறுவல் தயாரிக்கும் முறை:

  1. முதலில் மார்க்கெட்டில் வாங்கி வந்த மீனை நன்றாக சுத்தம் செய்ய ஒரு பாத்திரத்தில் தயிர் மற்றும் மஞ்சள் தூள் தூவி தண்ணீரில் அலசி சுத்தம் செய்து கொள்ளவும்.
  2. சுத்தம் செய்த மீனை எடுத்து ஒரு தட்டில் பரப்பி வைக்கவும். மீன் வறுக்க, அவற்றை மெல்லிய துண்டுகளாக வெட்டவும். இப்போது மற்றொரு தட்டில் மிளகாய் தூள், மஞ்சள், உப்பு, கரம் மசாலா, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு கலக்கவும்.
  3. இப்போது இந்தக் கலவையை மீனில் நன்றாக தடவி அரை மணி நேரம் சூரிய ஒளியிலோ அல்லது பிரிட்ஜிலோ வைக்கவும்.
  4. அரை மணி நேரம் கழித்து, ஒரு தோசை கல்லை எடுக்கவும். அது நான் ஸ்டிக்காக இருந்தாலும் பரவாயில்லை. இது இல்லையெனில், ஒரு வட சட்டியில் போதுமான எண்ணெயை ஊற்றி சூடாக்கவும்.
  5. முதலில் எண்ணெய் சேர்த்து, வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும். பின்னர் அதில் மீன் துண்டுகளைச் சேர்த்து, இருபுறமும் மிதமான தீயில் வறுக்கவும். இறுதியாக, கொத்தமல்லி தூவி பரிமாறவும். அவ்வளவுதான், உங்கள் சுவையான மீன் வறுவல் தயார்.