Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

PM Narendra Modi Fitness Secret: 75 வயதிலும் சுறுசுறுப்பு.. போகும் இடமெல்லாம் உற்சாகம்.. பிரதமர் மோடியின் உடற்தகுதி ரகசியம் என்ன..?

Prime Minister Narendra Modi's fitness: தொடர்ந்து 3வது முறையாக இந்தியாவின் பிரதமராகியுள்ள நரேந்திர மோடி, இந்த வயதிலும் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கிறார். அவரது ஆற்றல், சுறுசுறுப்பு மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை இளைஞர்கள் உள்பட அனைவரையும் ஆச்சரியப்படுத்துகிறது. அதனை பற்றி முழுமையாக தெரிந்து கொள்வோம்.

PM Narendra Modi Fitness Secret: 75 வயதிலும் சுறுசுறுப்பு.. போகும் இடமெல்லாம் உற்சாகம்.. பிரதமர் மோடியின் உடற்தகுதி ரகசியம் என்ன..?
பிரதமர் நரேந்திர மோடிImage Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 17 Sep 2025 18:22 PM IST

உலகளவில் மிகவும் பிரபலமான பட்டியலில் எப்போதும் இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி பெயர் இடம்பெற்றிருக்கும். பல்வேறு உலக தலைவர்களும் பிரதமர் மோடியின் உடற்தகுதி குறித்தும், அர்ப்பணிப்பும் குறித்து ஆச்சர்யம் கொள்கின்றனர். பிரதமர் மோடியின் தாயார் இறந்தபோது கூட, தனது தாய்க்கு இறுதி மரியாதை செய்துவிட்டு நாட்டு பணிகளை மேற்கொண்டு அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார். இந்தநிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi) இன்று 2025 செப்டம்பர் 17ம் தேதி தனது 75 வயது நிறைவடைந்தது. தொடர்ந்து 3வது முறையாக இந்தியாவின் பிரதமராகியுள்ள நரேந்திர மோடி, இந்த வயதிலும் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கிறார். அவரது ஆற்றல், சுறுசுறுப்பு மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை இளைஞர்கள் உள்பட அனைவரையும் ஆச்சரியப்படுத்துகிறது. இந்தநிலையில், பிரதமர் மோடி 75 வயதிலும் எப்படி இவ்வளவு (Fitness)  உடற்தகுதியுடனும், சுறுசுறுப்புடனும் இருக்கிறார் என்பதை தெரிந்து கொள்வோம்.

பிரதமர் நரேந்திர மோடியின் உடற்தகுதி ரகசியம்

அதிகாலையில் விழித்தல்:

பிரதமர் மோடி தினமும் எவ்வளவு தாமதமாக படுத்தாலும், அதிகாலை 4 மணிக்கே விழிக்கும் பழக்கம் கொண்டவர் என்று கூறப்படுகிறது. அதிகாலையில் எழுந்ததும், தியானம் மற்றும் சூரிய நமஸ்காரம், பிராணயாமம் மற்றும் பல்வேறு ஆசனங்களுடன் அன்றைய நாளை தொடங்குகிறார். இது அவருக்கு மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் உற்சாகத்தை தருகிறது. அதிகாலையில் எழுந்திருப்பது உடலுக்கும் மனதுக்கும் நன்மை பயக்கும். மேலும், இது நாள்முழுவதும் போதுமான உற்சாகத்தை கொடுக்கிறது.

ALSO READ: 40 வயதிற்குப் பிறகு பெண்கள் செய்யும் மிகப்பெரிய சருமப் பராமரிப்பு தவறுகள் – டாக்டர் எச்சரிக்கை!

எளிய உணவு:

பிரதமர் நரேந்திர மோடியின் உணவு முறை என்பது மிகவும் எளிமையானது, ஆரோக்கியமானது. பிரதமர் மோடி எப்போதும் எண்ணெய் மற்றும் காரமான உணவுகளை எடுத்துக்கொள்ள மாட்டார் என்று கூறப்படுகிறது. கிச்சடி, பருப்பு வகைகள், காய்கறிகள் மற்றும் மோர் போன்ற பாரம்பரிய இந்திய உணவுகள், அவரது தினசரி உணவு பட்டியலில் இடம் பெற்றிருக்கும். மேலும், முருங்கைக்காய் பிரதமர் மோடிக்கு மிகவும் பிடித்த காய்கறி வகையாகும். இதனுடன், தினமும் பிரஷான பழங்கள், முளைத்த தானியங்கள் மற்றும் தயிர் அவரது உணவில் ஒரு முக்கிய பகுதியாகவும் உள்ளது.

வெதுவெதுப்பான நீர் அருந்துதல்:

கோடைக்காலமாக இருந்தாலும் சரி, குளிர்காலமாக இருந்தாலும் சரி பிரதமர் மோடி எப்போதும் வெதுவெதுப்பான நீரை மட்டுமே அருந்துகிறார். இது சரியான செரிமானத்தைப் பராமரிக்கவும், உடல்நல பிரச்சனையை தவிர்க்கவும் உதவுகிறது. இதன் ஒரு நன்மை என்னவென்றால், உரைகள், பேரணிகள் மற்றும் பொதுக் கூட்டங்களில் பிரதமர் மோடி உரத்த குரல்களில் பேசும்போது, தொண்டைப் பிரச்சினைகள் எதுவும் ஏற்படாமல் தடுக்கிறது.

ALSO READ: என்னோட ஃபிட்னஸ்க்கு காரணம் இதுதான் – சீக்ரெட் பகிர்ந்த ஹர்திக் பாண்ட்யா!

வழக்கமான நடைப்பயிற்சி:

பிரதமர் மோடி தனது அன்றாட வழக்கத்தில் நடைப்பயிற்சி மற்றும் லேசான உடற்பயிற்சியை இதனுடன் சேர்த்து கொள்கிறார். நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதை விரும்பாத பிரதமர் மோடி, அவ்வபோது சிறு நடை போடுவார். மேலும், பிரதமர் மோடியின் மிகப்பெரிய உடற்பயிற்சி மந்திரம் ஒழுக்கம் என்று கூறப்படுகிறது. பிரதமர் மோடி சரியான நேரத்தில் தூங்கி எழுந்திருப்பது, அவரது உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்கிறது.