கோடை விடுமுறை ஸ்பெஷல்: திருநெல்வேலியிலிருந்து கோவாவுக்கு சுற்றுலா ரயில் – IRCTC அறிவிப்பு
Summer Special Tourist Train: IRCTC கோடை விடுமுறையை முன்னிட்டு திருநெல்வேலியிலிருந்து கோவாவுக்கு சுற்றுலா ரயிலை அறிவித்துள்ளது. 2026 மே 1 முதல் 7 வரை 7 நாள் சுற்றுலா திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரூ.26,300 முதல் கட்டணத்தில் ரயில் பயணம், ஹோட்டல் தங்குமிடம் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படும்.

மாதிரி புகைப்படம்
இந்தியாவில் முக்கிய போக்குவரத்துகளில் ஒன்றாக இருப்பது ரயில் சேவை. ரயில்களில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். அவர்களுக்காக பல்வேறு சலுகைகள் திட்டங்களை கொண்டு வருகிறது. குறிப்பாக தொலைதூரம் பயணிப்பவர்களுக்கு, ரயில் சேவை வரப்பிரசாதமாக இருந்து வருகிறது. இந்திய ரயில்வே அமைப்பு உலகின் மிகப்பெரிய போக்குவரத்து வலையமைப்புகளில் ஒன்றாகும். நாட்டின் பல்வேறு பகுதிகளை இணைக்கும் இந்த சேவை, சாதாரண மக்களுக்கு மலிவான மற்றும் வசதியான பயண வாய்ப்பை வழங்கி வருகிறது. நகரங்களையும் கிராமங்களையும் இணைக்கும் முக்கிய போக்குவரத்து முறையாக ரயில்கள் செயல்பட்டு வருகின்றன. இதனால் வேலை, கல்வி, சுற்றுலா போன்ற பல்வேறு தேவைகளுக்காக மக்கள் அதிகமாக ரயில் பயணத்தை தேர்வு செய்கிறார்கள்.
தினசரி இயங்கும் ஆயிரக்கணக்கான ரயில்கள்
இந்திய ரயில்வே நாள்தோறும் 19,000 ரயில்களை இயக்கி வருகிறது. இதில் நாள்தோறும் 4 கோடி மக்கள் பயணிக்கிறார்கள். சாதாரண புறநகர் ரயில்கள், விரைவு ரயில்கள், வந்தே பாரத் ரயில்கள், சரக்கு ரயில்கள் என இதில் ஏராளம். குறிப்பாக குறைந்த கட்டணத்தில் தொலை தூர இடங்களுக்கு களைப்பின்றி செல்ல முடியும் என்பதால் அனைவரும் ரயில் பயணத்தை நாடி வருகின்றனர். பொதுமக்கள் முதல் சுற்றுலா பயணிகள் வரை பலரும் ரயில்களைப் பயன்படுத்துகின்றனர். இதனால் இந்திய ரயில்வே நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும் முக்கிய பங்காற்றி வருகிறது. மேலும் பயணிகளின் வசதிக்காக புதிய ரயில்கள், மேம்பட்ட சேவைகள் போன்றவற்றையும் ரயில்வே நிர்வாகம் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது.
விடுமுறை மற்றும் திருவிழா காலங்களில் சிறப்பு சேவைகள்
ரயில் செல்லும் பயணிகளுக்கு ஏற்றவாறு குறிப்பாக விடுமுறை தினங்கள், திருவிழாக்கால நேரங்களில் ரயில் சேவைகளில் பல்வேறு மாற்றங்களை ரயில்வே நிர்வாகம் செய்து வருகிறது. குறிப்பாக அடுத்து வரவிருக்கக்கூடிய கோடை கால விடுமுறையை கொண்டாட சுற்றுலா பயணிகள் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுலா செல்ல தயாராகி வருகின்றனர். இந்த நேரங்களில் கூடுதல் ரயில்கள், சிறப்பு சுற்றுலா தொகுப்புகள் போன்றவை அறிவிக்கப்படுவது வழக்கமாக உள்ளது. குடும்பத்துடன் பயணம் செய்ய விரும்பும் சுற்றுலாப் பயணிகளுக்கு இது மிகுந்த வசதியாக உள்ளது. இதனால் சுற்றுலா துறையும் அதிகமாக வளர்ச்சி பெற்று வருகிறது.
Also Read: SETC அரசு விரைவு பேருந்தில் சென்னை முதல் குலசேகரப்பட்டினம் வரை பயணம் எப்படி?
திருநெல்வேலியிலிருந்து கோவாவுக்கு சுற்றுலா ரயில்
இந்த நிலையில், கோடை விடுமுறையையொட்டி, திருநெல்வேலியில் இருந்து கோவாவுக்கு சுற்றுலா ரயில் இயக்கப்படவிருப்பதாக IRCTC அறிவித்துள்ளது. 7 நாள்கள் பயணத்துக்கான கட்டணமாக ஒரு நபருக்கு ரூ. 26,300 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக IRCTC வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, இந்த சுற்றுலா ரயில் திருநெல்வேலியில் தொடங்கி மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், தருமபுரி மற்றும் ஓசூர் போன்ற நகரங்கள் வழியாகச் செல்லும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த பயணம் சுற்றுலா பயணிகளுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
சுற்றுலா தொகுப்பின் முக்கிய அம்சங்கள்
இந்திய ரயில்வேயின் சுற்றுலா பிரிவான IRCTC, கோடை விடுமுறையை முன்னிட்டு கோவாவுக்கு சிறப்பு ரயில் சுற்றுலாவை அறிமுகம் செய்துள்ளது. இந்த சிறப்பு சுற்றுலா ரயில் திருநெல்வேலியில் தொடங்கி மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், தருமபுரி, ஓசூர் வழியாகச் செல்கிறது. மேற்கூறிய சுற்றுலாத் தொகுப்பில் பிரபலமான தூத்சாகர் நீர்வீழ்ச்சியைப் பார்வையிடுவதும் அடங்கும்.
மேலும் சுற்றுலா கட்டணம் ஒரு நபருக்கு ரூ. 26,300/- லிருந்து தொடங்குகிறது. 2026 மே 1 ஆம் தேதி புறப்பட்டு மே 7 ஆம் தேதி திரும்பி வரும் வகையில் சுற்றுலா திட்டமிடப்பட்டுள்ளது. இதில் 3-ஏசி வகுப்பில் ரயில் பயணம், மூன்று நட்சத்திர ஹோட்டலில் தங்கும் வசதி, சுற்றுலா தலங்களை பார்வையிட ஏசி பேருந்து போக்குவரத்து உள்ளிட்ட பல வசதிகள் வழங்கப்படுகின்றன. இதனால் கோடை விடுமுறையில் குடும்பத்துடன் கோவாவுக்கு சுற்றுலா செல்ல விரும்புவோருக்கு இந்த திட்டம் சிறந்த வாய்ப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.