Skin Care: மழைக்காலத்தில் பளபளப்பை இழக்கும் சருமம்.. வறட்சி பிரச்சனையை இப்படி மீட்டெடுக்கலாம்!
Beauty Tips for Rainy Season: மழைக்காலத்தில் பெரும்பாலானோர் தங்கள் அழகை பராமரிக்க அதிக செலவுகளை மேற்கொண்டு மேக் அப் மற்றும் அழகு சாதனப்பொருட்களை பயன்படுத்துகிறார்கள். இருப்பினும், வீட்டிலேயே சில எளிய குறிப்புகளை பின்பற்றுவதன்மூலம் மேக் அப் இல்லாமல் மென்மையான மற்றும் பளபளப்பான சருமத்தை பெற முடியும்.

மழைக்கால சரும பராமரிப்பு..!
குளிர் மற்றும் மழைக்காலத்தில் (Rainy Season) உங்கள் சருமம் வறட்சி, தோல் உரிதல் மற்றும் பளபளப்பு இல்லாமை போன்ற பிரச்சனைகளை சந்திக்கும். இதுபோன்ற சூழ்நிலையில், பெரும்பாலானோர் தங்கள் அழகை பராமரிக்க அதிக செலவுகளை மேற்கொண்டு மேக் அப் மற்றும் அழகு சாதனப்பொருட்களை பயன்படுத்துகிறார்கள். இருப்பினும், வீட்டிலேயே சில எளிய குறிப்புகளை பின்பற்றுவதன்மூலம் மேக் அப் இல்லாமல் மென்மையான மற்றும் பளபளப்பான சருமத்தை (Skin Care) பெற முடியும். இதற்கு, நாங்கள் சொல்லும் இந்த எளிய வாழ்க்கை முறை மாற்றங்களை பின்பற்றினாலே போதுமானது.
அதிகளவில் தண்ணீர் குடித்தல்:
மழை மற்றும் குளிர்காலத்தில் நமக்கு தாகம் குறைவாகவே எடுக்கும். இதன்காரணமாக, தாகம் எடுக்கும்போது மட்டும் தண்ணீர் குடிப்போம். அதேவேளையில், நீரேற்றத்தில் அதிக கவனம் செலுத்துவது முக்கியம். சரும வறட்சியை சரி செய்யவும், சரும ஈரப்பதத்தை பராமரிக்கவும் ஒரு நாளைக்கு குறைந்தது 8-10 கிளாஸ் தண்ணீர் குடிப்பது நல்லது.
ALSO READ: எந்த வைட்டமின் குறைபாட்டால் சருமம் கருமையாகிறது..? இதனை சரிசெய்வது எப்படி?
மாய்ஸ்சரைசர்:
மழை மற்றும் குளிர்காலம் பெரும்பாலும் உங்கள் சருமத்தை வெளிர் நிறமாக மாற்றும். இதை சரிசெய்ய உங்கள் சருமத்தில் லேசான மாய்ஸ்சரைசரை பயன்படுத்தலாம். இருப்பினும், சரியான மாய்ஸ்சரைசரை பயன்படுத்துவது முக்கியம். அதன்படி, குளித்த உடனேயே மாய்ஸ்சரைசரை பயன்படுத்துவது சரும வறட்சியை தடுக்கும்.
ஃபேஸ் பேக்:
குளிர்காலத்தில் கற்றாழை ஜெல், தேன் மற்றும் பச்சை பால் ஆகியவற்றால் ஆன ஃபேஸ் பேக்கை உங்கள் சருமத்திற்கு பயன்படுத்தலாம். இந்த ஃபேஸ் பேக்குகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இவற்றை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்துவது சரும பொலிவையும் தரும். இதுமட்டுமின்றி, தூங்க செல்வதற்கு முன் பாதாம் அல்லது தேங்காய் என்ணெயை உங்கள் முகத்திற்கு மசாஜ் செய்யலாம். இது சருமத்தில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, உங்கள் சருமத்திற்கு இயற்கையான பளபளப்பை தரும்.
உதடு வெடிப்பு:
குளிர்காலத்தில் குளிர்ந்த காற்று மற்றும் தூசியிலிருந்து உங்கள் முகத்தை பாதுகாக்க, வெளியே செல்லும்போது ஸ்கார்ஃப் அல்லது சால் அணியுக்கள். இதுமட்டுமின்றி, உதடுகள் வெடிப்பதை தடுக்க அடிக்கடி லிப் பாமை பயன்படுத்தலாம்.
ALSO READ: பெண்களின் இந்த 5 பழக்கவழக்கங்கள்.. உங்கள் சருமத்தை முன்கூட்டியே வயதாக்காகும்..!
முகத்தை கழுவுதல்:
மழைக்காலத்தில், உங்கள் சருமம் மிகவும் பிசுப்பிசுப்புடன் கூடிய ஒட்டும் தன்மை கொண்டதாக மாறும். எனவே, ஒரு நாளைக்கு 2 முறையாவது உங்கள் முகத்தை சுத்தம் செய்யுங்கள். அதிக ஒட்டும் தன்மை கொண்டதாக இருந்தால், காலை மற்றும் மாலையில் கூடுதலாக உங்கள் ஃபேஸ் வாஷைப் பயன்படுத்தலாம். இது உங்கள் சருமத்தில் உள்ள அழுக்கு மற்றும் அழுக்குகளை நீக்கும். இதற்கு நல்ல ஃபேஸ் வாஷைப் பயன்படுத்தவும்.