Glasses Scratches: கண் கண்ணாடி லென்ஸ்களில் கீறல்களா..? இதை செய்தால் உடனடியாக மறையும்!

How to Fix Scratches on Eyeglasses: நம் அணியும் கண் கண்ணாடிகளில் சிறிய கீறல்கள் உங்கள் பார்வையின் தன்மையை தெளிவு இல்லாமல் ஆக்கலாம். இது மாதிரியான தவிர்க்க முடியாத சூழ்நிலையில், புதிய கண் கண்ணாடிகளை வாங்கவே அதிக முயற்சிகளை மேற்கொள்வோம்.

Glasses Scratches: கண் கண்ணாடி லென்ஸ்களில் கீறல்களா..? இதை செய்தால் உடனடியாக மறையும்!

கண்ணாடி கீறல்கள்

Published: 

27 Sep 2025 22:32 PM

 IST

கண் கண்ணாடி அணியும் ஒவ்வொருவருக்கும் நிச்சயமாகத் தெரிந்த ஒரு விஷயம் என்னவென்றால், அவர்களின் கண்ணாடியின் (Eye Glasses) லென்ஸ்களில் (Lens) எவ்வளவு விரைவாக கீறல்கள் விழும் என்பதுதான். இந்த சிறிய கீறல்கள் உங்கள் பார்வையின் தன்மையை தெளிவு இல்லாமல் ஆக்கலாம். இது மாதிரியான தவிர்க்க முடியாத சூழ்நிலையில், புதிய கண் கண்ணாடிகளை வாங்கவே அதிக முயற்சிகளை மேற்கொள்வோம். இப்படியான சூழ்நிலையில், புதிய கண்ணாடிகளை வாங்குவதற்கு முன் அல்லது அதிக செலவுகளை செய்து கண்ணாடிகளை பழுதுபார்ப்பு செய்வதற்கு முன், நீங்கள் நிச்சயமாக சில எளிய மற்றும் பயனுள்ள வீட்டு குறிப்புகளை முயற்சி செய்யலாம். இந்த குறிப்புகள் உங்கள் கண்ணாடி லென்ஸ்களில் சிறிய கீறல்களின் தோற்றத்தைக் குறைக்க உதவும்.

பல் துலக்கும் பேஸ்ட்:

பல் துலக்கும் பேஸ்ட் ஒரு எளிதான மற்றும் மிகவும் பிரபலமான தீர்வுகளில் ஒன்றாகும். இதற்கு, சுத்தமான பருத்தி பஞ்சில் சிறிதளவு பல் துலக்கும் பேஸ்டை எடுத்து, கீறப்பட்ட பகுதியை வட்ட இயக்கத்தில் மெதுவாக தேய்க்கவும். எக்காரணத்தை கொண்டும் அதிக அழுத்தத்தை கொடுக்க வேண்டாம். ஏனெனில் இது அதிக கீறல்களை ஏற்படுத்தும். சுமார் 15 முதல் 20 வினாடிகள் தேய்த்த பிறகு, கண்ணாடிகளை தண்ணீரில் கழுவி, உலர்ந்த மைக்ரோஃபைபர் துணியால் துடைக்கவும்.

ALSO READ: கிட்சன் டைல்ஸின் அழகை கெடுக்கும் எண்ணெய் கறைகள்.. 2 நிமிடத்தில் பளபளக்க செய்யும் ட்ரிக்ஸ் இதோ!

பேக்கிங் சோடா பேஸ்ட்:

பேக்கிங் சோடா மற்றும் தண்ணீரின் பேஸ்ட் கீறல்களை நீக்குவதில் பயனுள்ளதாக இருக்கும். ஒரு சிறிய கிண்ணத்தில் ஒரு டீஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் சில துளிகள் தண்ணீரை கலந்து ஒரு கெட்டியான பேஸ்ட்டை ரெடி செய்யவூம். இந்த பேஸ்ட்டை கீறல்களில் தடவி மேலே குறிப்பிட்டபடி மெதுவாக தேய்க்கவும். அதன் பிறகு, கண்ணாடிகளை சுத்தமான தண்ணீரில் கழுவி, உலர்ந்த துணியால் துடைக்கவும்.

கார் மெழுகு அல்லது பெட்ரோலியம் ஜெல்லி :

கார் மெழுகு அல்லது பெட்ரோலியம் ஜெல்லி என 2 பொருட்களும் கீறல்களை முழுமையாக அகற்றாது. ஆனால், தற்காலிகமாக அவற்றை மறைக்க உதவுகின்றன. கீறலில் கார் மெழுகு அல்லது பெட்ரோலியம் ஜெல்லியின் மெல்லிய அடுக்கைப் பயன்படுத்துங்கள். பின்னர், அதிகப்படியான மெழுகு அல்லது ஜெல்லியை சுத்தமான, மென்மையான துணியால் துடைக்கவும். ஆழமான கீறல்களுக்கு இந்த தீர்வு பயனுள்ளதாக இல்லாவிட்டாலும், சிறிய கீறல்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும்.

ALSO READ: வாழைப்பழத்தில் ஹேர் மாஸ்க்.. தலை முடிக்கு வலு சேர்க்கும் அற்புதம்!

தேங்காய் எண்ணெய் :

உங்கள் கண்ணாடிகளில் பிளாஸ்டிக் லென்ஸ்கள் இருந்தால், தேங்காய் எண்ணெய் ஒரு நல்ல தேர்வாக இருக்கும். கீறலில் சில துளிகள் தேங்காய் எண்ணெயைத் தடவி, ஒரு பருத்தி பந்தைப் பயன்படுத்தி மெதுவாகத் தேய்க்கவும். இது கீறல்களைக் குறைவாகக் காணவும், லென்ஸ்களையும் சுத்தம் செய்யவும் உதவும்.