Kitchen Tips: ரசாயனங்கள் இல்லாமல் வாழைப்பழங்களை எப்படி பழுக்க வைப்பது..? வீட்டிலேயே எளிதாக இதை செய்யலாம்!
Homemade Way to Ripen Bananas: ரசாயனங்களால் பழுக்க வைக்கப்பட்டு நாம் சாப்பிடும் வாழைப்பழங்கள் மெதுமெதுவாக நம்மை நோய்வாய்ப்படுத்த தொடங்கும். ரசாயனம் கலந்த வாழைப்பழங்களை தவிர்க்க, பல கிடைகளில் இருந்து வாழைக்காய்களை வாங்கி வீட்டிலேயே பழுக்க வைக்கிறார்கள். இப்படியான வாழைக்காய்கள் பழுக்க நீண்ட நாட்கள் எடுக்கும்.

வாழைப்பழம் (Banana) சாப்பிடுவது உடல் நலத்திற்கு பல வகைகளில் நன்மை தரும். இவை உங்கள் உடலை மேம்படுத்தும் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இருப்பினும், கடைகளில் இப்போதெல்லாம் கிடைக்கும் பழுத்த வாழைப்பழங்கள் பெரும்பாலும் ஏதாவது ஒரு ரசாயனத்தால் பழுக்க வைக்கப்படுகின்றன. இதுபோன்ற சூழ்நிலைகளில், ரசாயனங்களால் பழுக்க வைக்கப்பட்டு நாம் சாப்பிடும் வாழைப்பழங்கள் மெதுமெதுவாக நம்மை நோய்வாய்ப்படுத்த தொடங்கும். ரசாயனம் (Chemical) கலந்த வாழைப்பழங்களை தவிர்க்க, பல கிடைகளில் இருந்து வாழைக்காய்களை வாங்கி வீட்டிலேயே பழுக்க வைக்கிறார்கள். இப்படியான வாழைக்காய்கள் பழுக்க நீண்ட நாட்கள் எடுக்கும். இருப்பினும், சில குறிப்புகள் மூலம் ரசாயனங்கள் இல்லாமல் வீட்டிலேயே இந்த வாழைக்காய்களை, எளிதாக வாழைப்பழங்களாக எப்படி பழுக்க வைக்கலாம் என்பதௌ தெரிந்து கொள்வோம்.
ALSO READ: சமைக்கும் இரும்பு கடாயில் விடாப்பிடி துருக்களா..? பெரிதும் உதவும் படிகார ட்ரிக்ஸ்!
ரசாயனங்கள் இல்லாமல் வாழைப்பழங்களை எப்படி பழுக்க வைப்பது..?
காகிதத்தில் சுற்றுதல்:
வாழைப்பழமாக பழுக்க வைக்க, இதை ஒரு காகிதப் பை அல்லது செய்தித்தாளில் சுற்றி வைக்கவும். வாழைப்பழத்தின் தண்டு எத்திலீன் வாயுவை வெளியிடுகிறது. இதுவே, வாழைப்பழத்தை பழுக்க வைக்க உதவுகிறது. இதை ஒரு காகிதப் பை அல்லது செய்தித்தாளில் சுற்றி வைப்பது பழுக்க உதவுகிறது. காகித பைக்களுக்குள் இருக்கும்போது வாயுவை உள்ளே இருக்க செய்து வாழைப்பழங்களை வேகமாக பழுக்க வைக்கும்.
ஆப்பிள்கள் உதவியுடன்:
ரசாயனங்கள் இல்லாமல் வீட்டிலேயே எளிதாக பழுக்க வைக்கலாம். இதை செய்ய ஆப்பிள்களுடன் ஒன்றாக வைக்கவும். இவை இரண்டும் ஒன்றாக எத்திலீன் வாயுவை வெளியிடுகின்றன. இது வாழைப்பழங்களை வேகமாக பழுக்க உதவி செய்யும்.
அரிசியுடன்:
வாழைப்பழங்களை பழுக்க இந்த முறை பல தலைமுறைகளாக பயன்படுத்தப்படுகிறது. அதன்படி, வாழைப்பழங்களை பழுக்க வைக்க, நீங்கள் அவற்றை ஒரு அரிசி பாத்திரத்தின் வைக்கலாம். இருப்பினும், அவற்றை அரிசி இருக்கும் பாத்திரத்தில் வைப்பதற்கு முன் காகிதத்தில் சுற்றி வைக்கவும். இது பழுக்காத வாழைப்பழங்களை சில நாட்களுக்குள் பழுக்க வைக்கும். இது அவற்றின் சுவையை கெடுப்பதை தடுக்கும்.
ALSO READ: சப்பாத்தி கட்டைகளில் பூஞ்சை வளரும் ஆபத்து.. இப்படி சுத்தம் செய்வது ஏன் முக்கியம்?
புல்:
காய்ந்த புல் அல்லது காய்ந்த வைக்கோலை பயன்படுத்தி ஒன்று முதல் இரண்டு நாட்களுக்குள் வாழைக்காய்களை எளிதாகப் பழுக்க வைக்கலாம். இதைச் செய்ய, உங்கள் தோட்டத்தில் உள்ள எந்தப் புல்லையும் வெட்டி சூரிய ஒளியில் வைக்கவும். புல் காய்ந்த பிறகு, அதை ஒரு காகித அட்டைப்பெட்டியில் வைக்கவும், பச்சை வாழைப்பழங்களை அதில் வைக்கவும். இதன் மூலம், வாழைக்காய்கள் 2 முதல் 3 நாட்களுக்குள் தானாகவே பழுக்க வைக்கும். அருகில் உலர்ந்த புல் கிடைத்தால், உங்கள் பணி இன்னும் எளிதாக முடியும்.