Food Recipe: மழைக்காலத்தில் உடலுக்கு தரும் மகத்துவம்.. நெல்லிக்காய் ரசம் செய்வது எப்படி..?

Amla Rasam Recipe: மழைக்காலத்தில் பழமான நெல்லிக்காயை தினமும் நேரடியாக சாப்பிட முடியாது என்பதால் அதை பலவகைகளில் வித்தியாசமான முறையில் சமைத்து எடுத்துகொள்ளலாம். இவை உடலுக்கு மிகவும் நல்லது. அந்தவகையில், நெல்லிக்காயை கொண்டு எப்படி ரசம் செய்வது என்று தெரிந்து கொள்வோம்.

Food Recipe: மழைக்காலத்தில் உடலுக்கு தரும் மகத்துவம்.. நெல்லிக்காய் ரசம் செய்வது எப்படி..?

நெல்லிக்காய் ரசம்

Published: 

13 Sep 2025 19:49 PM

 IST

நெல்லிக்காயில் (Amla) ஆயுர்வேதத்தின்படி பல மருத்துவ குணங்கள் உள்ளன. இதில் வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளன. இந்த ஊட்டச்சத்துகள் நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும். மழைக்காலத்தில் நெல்லிக்காய் சாப்பிடுவது மிகவும் நல்லது. வைட்டமின் சி (Vitamin C) நிறைந்த நெல்லிக்காயை உணவில் சேர்த்து கொள்வது பல ஆரோக்கிய நன்மைகளை உடலுக்கு தருகிறது. இருப்பினும், மழைக்காலத்தில் பழமான நெல்லிக்காயை தினமும் நேரடியாக சாப்பிட முடியாது என்பதால் அதை பலவகைகளில் வித்தியாசமான முறையில் சமைத்து எடுத்துகொள்ளலாம். இவை உடலுக்கு மிகவும் நல்லது. அந்தவகையில், நெல்லிக்காயை கொண்டு எப்படி ரசம் செய்வது என்று தெரிந்து கொள்வோம்.

ALSO READ: கொங்கு நாடு ஸ்டைலில் காரசார ரெசிபி.. படிப்படியான சிக்கன் சிந்தாமணி செய்முறை!

நெல்லிக்காய் ரசம்:

தேவையான பொருட்கள்:

  • நெல்லிக்காய் துண்டுகள் – 5 முதல் 6
  • மிளகு – 2 ஸ்பூன்
  • சீரகம் – அரை ஸ்பூன்
  • மிளகாய் – 2
  • உப்பு – தேவையான அளவு
  • பூண்டு – 4 பற்கள்
  • சுவைக்கேற்ப வெல்லம்
  • புளி சாறு – 2 ஸ்பூன்
  • தக்காளி – 1
  • கறிவேப்பிலை – ஒரு கொத்து
  • பெருங்காயம் – ஒரு சிட்டிகை
  • எண்ணெய் – 2 ஸ்பூன்

நெல்லிக்காய் ரசம் எப்படி..?

  1. முதலில் பூண்டு, மிளகு, பச்சை மிளகாய், சீரகம் ஆகியவற்றை மிக்ஸியில் அரைகுறையாக அரைத்து எடுத்துக்கொள்ளவும். இப்போது, அடுப்பை ஆன் செய்து வாணலியை வைத்து சூடானதும், எண்ணெய் சேர்த்து காய்ந்த மிளகாய் போட்டு வறுத்தபின், தக்காளியை பிசைந்து கொள்ளவும்.
  2. தொடர்ந்து, அதில் அரைத்து எடுத்த சீரகம், மிளகு, பூண்டு கலவையை சேர்த்து வதக்கவும். அடுத்ததாக, விதை நீக்கிய நெல்லிக்காய் துண்டுகளை அரைத்து சாறு எடுத்துக்கொள்ளவும்.
  3. இப்போது, அந்த வாணலியில் கடுகு, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். பின்னர், நெல்லிக்காய் சாறு, மஞ்சள், ரசம் பொடி ஆகியவற்றை சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
  4. ரசத்திற்கு தேவையான தண்ணீர், புளி சாறு, வெல்லம், கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து கொதிக்கவிட்டால் நெல்லிக்காய் ரசம் தயார்.

ALSO READ: காரசாரமான டாம் யம் பிரான் சூப்.. இந்த சுவையான தாய் ரெசிபியை ருசித்து பாருங்க..!

நெல்லிக்காயின் நன்மைகள்:

  • நெல்லிகாயின் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
  • நெல்லிக்காய் செரிமான நொதிகளின் உற்பத்தியை அதிகரிக்கிறது. இது செரிமான பிரச்சனைகளை குறைக்கிறது.
  • நெல்லிக்காயில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் சருமத்தை பளபளப்பாக்குகின்றன.
  • நெல்லிக்காய் முடி உதிர்வை தடுத்து முடியை மென்மையாக்குகிறது.
  • நெல்லிக்காய் கண் பார்வையை மேம்படுத்துகிறது.
  • நெல்லிக்காய் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.
  • காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாறு அல்லது ஜூஸ் குடிப்பது சிறந்தது. ஒரு நாளைக்கு ஒரு கிளாஸ் நெல்லிக்காய் சாறு போதுமானது.