Electric Shock First Aid: ஒருவருக்கு ஷாக் அடித்தால் என்ன செய்யலாம்..? இதை செய்தால் உயிரை காப்பாற்றலாம்..!
Electrical Safety: மின்சார அதிர்ச்சி ஏற்பட்டால், முதலில் பாதுகாப்பாக மின்சாரத்தை துண்டிக்கவும். பின்னர், 108 அல்லது 112 ஐ அழைக்கவும். நாடித்துடிப்பு மற்றும் சுவாசத்தை சரிபார்க்கவும். CPR தேவைப்பட்டால் செய்யுங்கள். தீக்காயங்களுக்கு குளிர்ந்த நீர் பயன்படுத்தவும். பாதிக்கப்பட்டவரை நகர்த்தாமல், உடனடி மருத்துவ உதவி அளிக்கலாம்.

மின்சார தாக்குதல்
மழைக்காலம் (Monsoon) நமது உடலுக்கு எவ்வளவோ குளிர்ச்சியை தருமோ, அதே அளவிற்கு சுகாதார பிரச்சனைகளும் ஏற்படும். மழைக்காலத்தின்போது ஈரத்துடன் ஸ்விட்ச் போன்றவற்றை தொடும்போது மின்சாரம் (Shock Attack) தாக்குதல் ஏற்படலாம். இப்படி எதிர்பாராதவிதமாக ஏற்படும் மின்சார தாக்குதல் ஒருவரது உயிரையும் பறிக்க செய்யும். இதுபோன்ற சூழ்நிலையில், பாதிக்கப்பட்டவரின் உயிரை காப்பாற்ற சரியான நேரத்தில் சரியான நடவடிக்கைகளை எடுப்பது மிகவும் முக்கியம். அப்போது பயப்படாமல் அமைதியாக இந்த விஷயங்களை மேற்கொள்ளலாம்.
என்னென்ன செய்யலாம்..?
முதலில் நம் பாதுகாப்பு:
- ஒருவருக்கு மின்சார தாக்குதல் ஏற்படும்போது நம் பாதுக்காப்பில் கவனம் செலுத்துவது முக்கியம். அதன்படி, மின்சாரம் முழுவதும் அணைக்கப்படும் வரை பாதிக்கப்பட்டவரை தொட முயற்சி செய்யாதீர்கள். மின்சாரம் அணைக்காமல் பாதிக்கப்பட்டவரை தொட்டால், உங்களுக்கு மின்சார தாக்குதல் ஏற்படலாம்.
- முடிந்தால் வீடு அல்லது இடத்தின் மெயின் போர்டை உடனடியாக அணைக்கவும். இதுவே பாதுகாப்பான வழியாகும்.
- ஸ்விட்ச் போர்ட்டில் பிளக் சொறுகப்பட்டிருந்தால், சாக்கெட்டிலிருந்து பிளக்கை குச்சி போன்றவற்றை கொண்டு கவனமாக அகற்றவும்.
- உங்களால் உடனடியாக மின்சாரத்தை அணைக்க முடியாவிட்டால், பாதிக்கப்பட்டவரை மின்சாரத்தில் இருந்து வெளியேற்ற மரம், பிளாஸ்டிக், ரப்பர் கையுறை அல்லது உலர்ந்த துணி போன்ற மின்சாரம் பரவாத பொருளை கொண்டு காப்பாற்றவும். கவனம் எக்காரணத்தை கொண்டும் உலோகம் அல்லது ஈரமான பொருட்களை பயன்படுத்த வேண்டாம். பாதிக்கப்பட்டவறை தூரத்தில் தள்ளுவதன்மூலமோ, இழுப்பதன் மூலமோ மின்சார தாக்குதலில் இருந்து பாதுக்காக்கலாம்.
மின்சாரத்தை அணைத்தபிறகு என்ன செய்யலாம்..?
பாதிக்கப்பட்டவரை மின் தாக்குதலில் இருந்து காப்பற்றபட்டவுடன், தாமதிக்காமல் 108 (ஆம்புலன்ஸ்) அல்லது 112 (காவல்துறை/அவசர சேவை) எண்ணை அழைக்கவும். அதில், மின்சார தாக்குதல் ஏற்பட்டுள்ளதாகவும், உங்களுக்கு உதவி தேவை என்றும் கூறுங்கள்.
ALSO READ: ஃபிரிட்ஜில் உணவுப் பொருளை சேமிக்கிறீர்களா ? காத்திருக்கும் ஆபத்து!
பாதிக்கப்பட்டவரை எவ்வாறு பரிசோதிப்பது?
நாடித்துடிப்பு:
மின்சார தாக்குதலில் பாதிக்கப்பட்ட நபரை முதலில் கழுத்து அல்லது மணிக்கட்டில் நாடித்துடிப்பு இருக்கிறதா என்பதை சோதனை செய்யுங்கள்.
சுவாக பரிசோதனை:
பாதிக்கப்பட்டவர் சுவாசிக்கிறாரா என்று சோதனை செய்யுங்கள். அவருக்கு சுவாசம் இல்லை என்றால், நெஞ்சை அழுத்தி அவருக்கு CPR செய்ய முயற்சி செய்யுங்கள்.
காயங்கள் சோதனை:
மின்சார தாக்குதல் ஏற்பட்டவருக்கு தீக்காயங்கள் ஏதேனும் உள்ளதா என்பதை சோதிக்கவும். பாதிக்கப்பட்டவரின் உடலில், குறிப்பாக மின்சார அதிர்ச்சி ஏற்பட்ட இடத்தில் தீக்காயங்கள் உள்ளதா என்று பாருங்கள். பெரும்பாலும், மின்சார தாக்குதல் வெளியில் இருந்து தெரியும் காயங்களை ஏற்படுத்தாவிட்டாலும், உள் உறுப்புகளை சேதப்படுத்தலாம்.
ALSO READ: மழைக்காலத்தில் எந்த காய்கறிகளை வாங்கக் கூடாது..? எதை வாங்குவது, எப்படி சுத்தம் செய்வது?
முதலுதவியாக என்ன செய்யலாம்..?
- மின்சார தாக்குதலால் தோலில் தீக்காயம் ஏற்பட்டால் குளிர்ந்த தண்ணீரை ஊற்றவும். எக்காரணத்தையும் கொண்டு ஐஸ் கட்டிகளை நேரடியாக வைக்க வேண்டும். அப்படி, இல்லையென்றால் தீக்காயம் ஏற்பட்ட இடங்களில் குளிந்த ஈரமான துணிகளை கொண்டு தொட்டு தொட்டு எடுக்கலாம்.
- தீக்காயம் பட்ட இடங்களில் சுத்தமான துணியால் மூடவும். தீக்காயங்கள் மூலம் கொப்புளங்கள் ஏற்பட்டால் அதை உடைக்காதீர்கள்.
- பாதிக்கப்பட்டவர் குளிராக உணர்ந்தாலோ அல்லது அதிர்ச்சியில் இருந்தாலோ, போர்வைகள் அல்லது துணிகளால் மூடி அவரை சூடாக வைத்திருக்க முயற்சி செய்யுங்கள்.
- பாதிக்கப்பட்டவரை நகர்த்த வேண்டாம் பாதிக்கப்பட்டவருக்கு உள் காயம் இருப்பதாகவோ அல்லது எலும்பு முறிந்திருக்கலாம் என்று நீங்கள் நினைத்தால், மருத்துவ உதவி வரும் வரை பாதிக்கப்பட்டவரை நகர்த்த வேண்டாம்.