ஆபாசா வீடியோவை வைத்து முதியவரை ஏமாற்றி பணம் பறித்த பெண்.. ஷாக் சம்பவம்!

Young Woman Threatened Old Man For Money | பெங்களூரில் 78 வயது முதியவரிடம் பேசி, அவரை தனது வலையில் விழ வைத்த இளம் பெண், முதியவரின் ஆபாச வீடியோவை வைத்து மிரட்டி பணம் பறித்த அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.

Updated On: 

10 Mar 2026 00:45 AM

 IST

பெங்களூரு, மார்ச் 09 : கர்நாடகா மாநிலம், பெங்களூரு நகரில் வசித்து வருபவர் 78 வயது முதியவர். இந்த முதியவரிடம் முகநூல் பக்கத்தில் இளம் பெண் ஒருவர் பழகியுள்ளார். இந்த நிலையில், முதியவருக்கும் அந்த இளம் பெண்ணுக்கும் இடையே நாளுக்கு நாள் பழக்கம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், அந்த இளம் பெண் முதியருக்கு தனது வாட்ஸ்அப் எண்ணை கொடுத்து அதன் மூலம் வீடியோ கால் பேசி வந்துள்ளார். அப்போது இருவரும் தனிப்பட்ட தகவல்களை பரிமாறிக்கொண்டுள்ளனர்.

வீடியோவை வைத்து முதியவரை மிரட்டி பணம் பறித்த பெண்

முதியவர் தன்னுடன் நிர்வாணமாக பேசியதை வீடியோ பதிவு செய்த அந்த பெண், அதனை வைத்து முதியவரை மிரட்ட தொடங்கியுள்ளார். இதனால் பயந்துப்போன அந்த இளைஞர் முதற்கட்டமாக ரூ.2 லட்சம் பணத்தை அந்த பெண்ணுக்கு அனுப்பியுள்ளார். ஆனால், அதனுடன் நிறுத்தாமல் அந்த பெண் தொடர்ந்து பணம் கேட்டு முதியவரை மிரட்டியுள்ளார். அப்போது முதியவர் தன்னிடம் பணம் இல்லை என்று கூறியுள்ளார். இதனால் அத்திரமடைந்த அந்த பெண் முதியவரின் ஆபாச வீடியோவை முதியவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பியுள்ளார்.

இதையும் படிங்க : மனைவியுடன் சண்டை.. மாமியாரின் மூக்கை அறுத்து எடுத்துச் சென்ற மருமகன்!

அந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அது குறித்து முதியவரிடம் விசாரித்துள்ளனர். அப்போது முதியவர் இளம் பெண்ணிடன் பணத்தை இழந்ததை குறித்து குடும்பத்தினர் கூறியுள்ளார். இந்த நிலையில், முதியவரின் மருமகள் தனது மாமாவிடம் இளம் பெண் ஒருவர் தவறாக பழகி பணம் பறித்ததாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் இளம் பெண்ணின் செல்போன் எண், வங்கி கணக்கு ஆகியவற்றை அய்வு செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க : உலகளவில் நிலவும் பதற்றங்கள்.. எரிசக்தி துறையில் இந்தியாவின் வலிமையும்.. பல்வழி இறக்குமதியும்.. முழு விவரம்

முதியவரை ஏமாற்றிய அந்த பெண்ணை விரைந்து கைது செய்வதாகவும் அவர்கள் உறுதி அளித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us
ஹார்முஸ் கடல் வழியை மூடுவதாக ஈரான் அறிவிப்பு - பரபரப்பு தகவல்
இந்திய பெருங்கடலில் அமெரிக்காவின் தாக்குதலில் நீரில் மூழ்கிய ஈரானின் போர் கப்பல் - 87 பேர் பலி
மத்திய கிழக்கில் நீடிக்கும் பதற்றம் - பெட்ரோல், டீல் விலை அதிகரிக்குமா?
குவைத் துறைமுகத்தில் எண்ணெய் டேங்கர் அருகில் வெடிப்பு