Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

உலகிலேயே யாருக்கும் இல்லாத அரிய வகை ரத்தம் கண்டுபிடிப்பு.. ஷாக் கொடுத்த கர்நாடகா பெண்!

World's First Rare Blood Group | பொதுவாக ரத்த வகைகளில் ஏ, பி, ஓ என சில வகைகள் உள்ளன. இந்த ரத்த வகைகள் தான் பெரும்பாலான மனிதர்களுக்கு இருக்கும். இந்த நிலையில், பெங்களூரை சேர்ந்த பெண் ஒருவருக்கு மிகவும் வித்தியாசமான மற்றும் அரிய வகை ரத்தம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

உலகிலேயே யாருக்கும் இல்லாத அரிய வகை ரத்தம் கண்டுபிடிப்பு.. ஷாக் கொடுத்த கர்நாடகா பெண்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 31 Jul 2025 08:10 AM

பெங்களூரு, ஜூலை 31 : பெங்களூரில் (Bengaluru) ஒரு பெண்ணுக்கு உலகிலேயே யாருக்கும் இல்லாத புதிய வகை ரத்தம் (Rare Blood Group in the World) இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அந்த பெண் தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரின் ரத்த மாதிரியை பரிசோதனை செய்தபோது அதில் மற்ற ரத்த வகைகளை விட வித்தியாசம் இருப்பது கண்டறியப்பட்டது. அதனை தொடர்ந்து நடத்தப்பட்ட பல கட்ட ஆய்வுகளின் அடிப்படையில் அந்த ரத்தம் உலகிலேயே யாருக்கும் இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.

அறுவை சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட பெண் – ஷாக் கொடுத்த ரத்த மாதிரி

பெங்களூரில் உள்ள கோலார் மாவட்டத்தை சேர்ந்த 38 வயது பெண் ஒருவர் இதைய அறுவை சிகிச்சை செய்வதற்காக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சைக்கு முன்னதாக அவரது ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அவரது ரத்தம் ஓஆர்எச் பாசிட்டிவ் (ORH Positive) வகையை சேர்ந்தது என்பது கண்டறியப்பட்டது. அத ரத்தத்தில் வழக்கத்திற்கு மாறாக சிவப்பு அணுக்களும் வினை புரியும் நிலையில் இருந்துள்ளது. பொதுவாக எந்த ரத்த வகையிலும் சிவப்பு அணுக்கள் வினை புரியும் நிலையில் இருக்காது. ஆனால் இந்த பெண்ணின் ரத்த வகையில் மட்டும் அது மாறுபட்டு இருந்தது.

இதையும் படிங்க : பேட்மிண்டன் விளையாடும்போது சரிந்து விழுந்து உயிரிழந்த இளைஞர்.. இணையத்தில் வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

ரத்த மாதிரியை லண்டனுக்கு அனுப்பி சோதனை செய்த மருத்துவர்கள்

இதன் காரணமாக மருத்துவர்கள் அந்தப் பெண்ணின் ரத்தத்தை பெங்களூரில் உள்ள ஒரு அதிநவீன ரத்த பரிசோதனை மையத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவரது ரத்தத்தை பரிசோதனை செய்த போது, அவரது ரத்தத்தில் உள்ள சிவப்பு அணிகள் வினைபுரிவது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை உறுதி செய்த அந்த மருத்துவமனை மருத்துவர் அந்த ரத்த மாதிரியை இங்கிலாந்தில் உள்ள ஒரு சர்வதேச ரத்த வகை கண்டறியும் மையத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். அங்கு சுமார் பத்து மாதங்களாக நடைபெற்ற சோதனையில் அந்த பெண்ணுக்கு இருப்பது உலகிலேயே யாருக்கும் இல்லாத புதிய வகை ரத்தம் என்பது கண்டறியப்பட்டுள்ளது. அந்த ரத்த வகைக்கு சிஆர்ஐபி (CRIP – Comar India Bengaluru) என பெயரிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : பேருந்து நிலையத்தில் குழந்தையை தவிக்க விட்டு காதலனுடன் சென்ற தாய்.. காட்டி கொடுத்த சிசிடிவி!

இதன் மூலம் உலகில் வேறு யாருக்கும் இல்லாத அரிய வகை ரத்தம் கோமர் பெண்ணுக்கு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.