இளைஞரை காதல் வலையில் விழ வைக்க மாந்திரீகம்.. இளம் பெண்ணிடம் சாமியார் ரூ.2 லட்சம் மோசடி!
Woman Lost 2 Lakhs In Pooja Scam | பெங்களூரை சேர்ந்த இளம் பெண் இளைஞர் ஒருவரை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில், மாந்திரீகத்தின் மூலம் தனது காதலனை வசியம் செய்ய நினைத்து அந்த பெண் ரூ.2 லட்சம் பணத்தை இழந்துள்ளார்.

மாதிரி புகைப்படம்
பெங்களூரு, ஜனவரி 05 : பெங்களூரு (Bengaluru) ஆடுகோடி காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் இளம் பெண். இவர் அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் தான், குடும்ப பிரச்னைகள் உள்ளிட்ட சிக்கல்களுக்கு மாந்திரீகம் மூலம் தீர்வு காணலாம் என்ற விளம்பரத்தை அவர் இன்ஸ்டாகிராமில் (Instagram) பார்த்துள்ளார். அதனை பார்த்ததும் அவருக்கு இந்த மாந்திரீகத்தின் மூலம் தனது காதலனை தனது வலையில் விழ வைத்துவிடலாம் என நினைத்துள்ளார்.
மாந்திரீகம் செய்து காதலனை வசியம் செய்ய முயன்ற பெண்
இந்த நிலையில், அந்த பெண் மாந்திரீகம் செய்வது குறித்து தெரிந்துக்கொள்வதற்காக அந்த விளம்பரத்தில் கொடுக்கப்பட்டு இருந்த மொபைல் எண்ணை தொடர்புக்கொண்டு பேசியுள்ளார். அப்போது அந்த பெண்ணிடம் சந்திரசேகர் குரு என்ற நபர் பேசியுள்ளார். அவர் தன்னை ஒரு சாமியார் என இளம் பெண்ணிடம் அறிமுகம் செய்துக்கொண்டுள்ளார். அப்போது அவரிடம் இளம் பெண், தனது காதலனை மாந்திரீகம் மூலம் வசியம் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க : பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற நபர்.. கோடாரியால் வெட்டி கொலை செய்த இளம் பெண்
இளம் பெண் கூறியதை கேட்ட அந்த சாமியார் அதற்காக சிறப்பு பூஜைகள் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். பூஜைக்கு தேவையான பொருட்களை வாங்க பணம் அனுப்ப வேண்டும் என்று அந்த சாமியார் கூறிய நிலையில், அவர் கேட்டபோதெல்லாம் அந்த இளம் பெண் பணத்தை அனுப்பி வந்துள்ளார். அதன்படி, அவர் கூறிய வங்கி கணக்கிற்கு ரூ.2.5 லட்சம் வரை அவர் பணத்தை அனுப்பியுள்ளார்.
சிறப்பு பூஜைக்கு மீண்டும் பணம் கேட்ட சாமியார்
இந்த நிலையில், ஜனவரி 03, 2026 அன்று இளம் பெண்ணை தொடர்ப்புக்கொண்டுள்ள அந்த சாமியார், அவரது காதலனை மயக்க சிறப்பு பூஜை செய்ய வேண்டும் என்றும் அதற்கு ரூ.4 லட்சம் பணம் அனுப்ப வேண்டும் என்றும் கூறியுள்ளார். அந்த சாமியார் தன்னை ஏமாற்றி வந்தது குறித்து அந்த பெண் அப்போது உணர்ந்துள்ளார். அப்போது அந்த இளம் பெண் சாமியாரிடம் தான் அனுப்பிய பணத்தை திரும்ப கேட்டுள்ளார். ஆனால், அவர் பணத்தை திரும்ப கொடுக்க மறுத்துள்ளார்.
இதையும் படிங்க : ஹெல்மெட்டுக்குள் பதுங்கியிருந்த நல்ல பாம்பு.. நடுங்கிப்போன குடும்பம்.. வெளியான ஷாக்கிங் வீடியோ
அதுமட்டுமன்றி அந்த சாமியார் இளம் பெண்ணை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து இளம் பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.