கள்ளக்காதலனுடன் வாழ தடையாக இருந்த கணவரை தீர்த்துக்கட்டிய மனைவி.. கொடூர சம்பவம்!

Woman Killed Husband With The Help Of Lover | கர்நாடகாவில் தனது கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த கணவரை, மனைவியே தனது கள்ளக்காதலனின் உதவியுடன் கொலை செய்து விபத்து போல சித்தரித்து நாடகமாடிய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்காதலனுடன் வாழ தடையாக இருந்த கணவரை தீர்த்துக்கட்டிய மனைவி.. கொடூர சம்பவம்!

பூஜா மற்றும் அவரது காதலன் பிரிதம் ரெட்டி

Updated On: 

29 Mar 2026 22:25 PM

 IST

பெங்களூரு, மார்ச் 29 : கர்நாடகா (Karnataka) மாநிலம், யாதகிரி டவுன் பகுதியில் உள்ள சமனஹள்ளி பகுதியை சேந்தவர் 35 வயதான சாகர். இவர் ஆட்டோ ஓட்டுநராக இருந்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி பூஜா என்ற மனைவி உள்ளார். பூஜாவுக்கும் அதே பகுதியில் வசிக்கும் பிரிதம் ரெட்டி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.

கள்ளக்காதல் உறவில் இருந்த சாகரின் மனைவி

பிரிதம் உடன் கள்ளகாதல் உறவில் இருந்த பூஜா, அவரருடன் இணைந்து பல்வேறு இடங்களை சுற்றியுள்ளார். யாரும் இல்லாத நேரம் பார்த்து அடிக்கடி தனிமையில் சந்தித்து இருவரும் உல்லாசமாகவும் இருந்து வந்துள்ளனர். ஒருகட்டத்தில் இருவரும் பலமுறை வீட்டை விட்டு வெளியேறி தனியாக வாழ முயற்சி செய்துள்ளனர். ஆனால், ஊர் பெரியவர்களும், கிராம பஞ்சாயத்து தலைவர்களும் அவர்களை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க : மேற்கு ஆசியாவில் பதற்றம் – மக்கள் பாதிக்காத வகையில் நடவடிக்கை – பிரதமர் மோடி உறுதி

கணவனை தீர்த்துக்கட்ட முடிவு செய்த மனைவி

சாகர் உயிருடன் இருக்கும் வரை தனது கள்ளக்காதலனுடன் மகிழ்ச்சியாக வாழ முடியாது என நினைத்த பூஜா, தனது கணவரை கொலை செய்ய முடிவு செய்துள்ளார். அதன்படி மகேஷ் என்பருக்கு பிரிதம் ரெட்டி ரூ.1 லட்சம் பணத்தை கொடுத்து சாகரை கொலை செய்யும்படி கூறியுள்ளார். இதற்கு பூஜாவும் உடந்தையாக இருந்துள்ளார். இவர்களின் திட்டத்தின்படி, மகேஷ் சாகரை தொடர்ப்புக்கொண்டு வாடகைக்கு கார் ஓட்ட அழைத்துள்ளார். அதனை நம்பி சென்ற சாகரை அவர் சுத்தியால் தாக்கி கொடூரமாக கொலை செய்துள்ளார்.

இதையும் படிங்க : ஹோர்முஸ் நீரிணையை கடந்து இந்தியா நோக்கி வரும் இரண்டு கப்பல்கள்!

பிறகு சாகரின் உடலை காரில் எடுத்துச் சென்ற அவர், ஏற்கனவே ஏற்பாடு செய்து வைத்திருந்த ஆட்டோவில் வைத்து விபத்து போல சித்தரித்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அப்போது அது விபத்து இல்லை என்பதை போலீசார் கண்டறிந்துள்ளனர்.

அந்த இடத்தில் இருந்து சாகரின் போனை கைப்பற்றிய போலீசார், அதன் மூலம் மகேஷை கைது செய்துள்ளனர். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் மூலம் பூஜா தனது கள்ளக்காதலனுடன் இணைந்து சாகரை கொலை செய்தது தெரிய வந்துள்ளது. இந்த நிலையில், அவர்கள் இருவரையும் கைது செய்துள்ள போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow Us
தன்னை கடித்த பாம்பை தைரியமாக பிடித்த முதியவர்
கேர்ள் ஃபிரெண்டுடன் லூட்டி அடிக்கும் குரங்கு - வைரல் வீடியோ
தன் உயிரையும் பொருட்படுத்தாமல் நாயை காப்பாற்றிய பெண்.. இணையத்தில் வைரல்..
தாயின் பக்கெட் லிஸ்டை நிறைவேற்றிய மகன்... இணையத்தில் வைரல்..