மந்திரவாதியுடன் கள்ளக்காதல்.. காதலனுடன் திட்டமிட்டு கணவனை கொலை செய்த மனைவி!

Wife Killed Husband with the Help of Lover | தெலங்கானாவின் மானசா என்ற பெண்ணுக்கு மந்திரவாதி ஒருவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. அதற்கு தடையாக தனது கணவன் இருந்த நிலையில், காதலனின் உதவியுடன் அந்த பெண் தனது கணவனை கொலை செய்துள்ளார்.

மந்திரவாதியுடன் கள்ளக்காதல்.. காதலனுடன் திட்டமிட்டு கணவனை கொலை செய்த மனைவி!

மாதிரி புகைப்படம்

Updated On: 

17 Oct 2025 19:12 PM

 IST

திருப்பதி, அக்டோபர் 17 : தெலங்கானா (Telangana) மாநிலம், நாகர் கர்னூல் மாவட்டத்தை சேர்ந்தவர் ராமலு. 35 வயதான இவர் பிளம்பர் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு 35 வயதில் மானசி என்ற மனைவியும் உள்ளார். இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராமலு வீட்டில் நகை திருடு போயுள்ளது. இந்த நிலையில், தனது வீட்டில் இருந்து நகையை திருடியது யார் என்பதை கண்டு பிடிப்பதற்காக ராமலு மந்திரவாதியான சுரேஷ் என்ற 27 வயது இளைஞரிடம் உதவி கேட்டு தனது மனைவியுடன் சென்றுள்ளார்.

மந்திரவாதிக்கும், பெண்ணுக்கு இடையே ஏற்பட்ட திருமணத்தை மீறிய உறவு

ராமலு தனது மனைவியுடன் மந்திரவாதியை சந்திக்க சென்ற நிலையில், அந்த மந்திரவாதிக்கும் மானசாவுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இருவரும் அடிக்கடி தனியாக சந்தித்து உள்ளாசத்தில் இருந்து வந்துள்ளனர். இது நாளடைவில் மானசாவின் கணவருக்கு தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக ராமலு, மானசாவிடம் கள்ளக்காதலை கைவிடுமாறு கூறியுள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதையும் படிங்க : Crime: மக்களே உஷார்.. சைபர் மோசடியில் ரூ.7 கோடியை இழந்த மருத்துவர்!

கணவனை தீர்த்துக்கட்ட முடிவு செய்த மனைவி

கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த கணவரை கொலை செய்ய மானசா முடிவு செய்து அது குறித்து சுரேஷிடம் கூறியுள்ளார். இதற்கிடையே, மானசா தனது உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்றுள்ளார். தான் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து தனது கணவரை கொலை செய்தால் தான் தன் மீது சந்தேகம் எழாது என்று மானசா சுரேஷிடம் கூறியுள்ளார். அதன்படி, சுரேஷ் தனது உறவினர் மற்றும் பணியாளருக்கு தலா ரூ.2.80 லட்சம் பணம் கொடுத்து ராமலுவை கொலை செய்ய கூறியுள்ளார்.

இதையும் படிங்க : Rajasthan: சாலையில் தீப்பிடித்த பேருந்து… 20 பேர் உயிரோடு எரிந்த பரிதாபம்

திட்டத்தின்படி சுரேஷ் ராமலுவை வரவழைத்துள்ளார். அப்போது அவருக்கு அளவுக்கு அதிகமாக மது கொடுத்துள்ளார். போதை தலைக்கேறி ராமலு மயங்கிய நிலையில் தனது கூட்டாளிகளுடன் இணைந்து சுரேஷ் அவரது வாய், மூக்கு ஆகிய பகுதிகளில் ஸ்டிக்கர் ஒட்டி மூச்சு திணற செய்து கொலை செய்துள்ளார். பிறகு அவர் சாலை விபத்தில் உயிரிழந்ததை போல உடலில் காயங்களை ஏற்படுத்தி சாலையின் ஓரம் வீசி சென்றுள்ளனர்.

அந்த வழியாக சென்றவர்கள் ராமலு சாலை விபத்தில் உயிரிழந்து கிடந்ததாக போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன்படி, வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டதில் ராமலுவின் மனைவி மானசா தனது காதலனின் உதவியுடன் அவரை கொலை செய்தது தெரிய வந்துள்ளது.