அதிவேக வந்தே பாரத் ரயில்…ரீல்ஸ்காக இளைஞர்கள் செய்த விபரீத செயல்…சமூக வலைதளங்களில் கண்டன குரல்!
Viral Video : தண்டவாளத்தில் அதிவேகமாக வந்த வந்தே பாரத்தை நிறுத்தி ரீல்ஸ் எடுப்பதற்காக இளைஞர்கள் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். தற்போது, இந்த வீடியோ சமூக வலைதங்களில் பரவி வருவதுடன், கண்டன குரலும் எழுந்து வருகிறது .

வந்தே பாரத் ரயிலை நிறுத்தி ரீல்ஸ்காக இளைஞர்கள் செய்த செயல்
கடந்ச சில நாள்களாக சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில் சுமார் 5 இளைஞர்கள் செய்யும் காரியம் பொதுமக்களை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் உள்ளது. அதில், ரயில் தண்டவாளத்தில் அதிவேகமாக வரக்கூடிய வந்தே பாரத் ரயிலை மறிப்பதற்காக கான்கிரீட்டால் செய்யப்பட்ட பில்லர் மற்றும் இரும்பு கம்பிகள், மரக்கட்டைகளை தண்டவாளத்தின் நடுவே வைக்கின்றனர். இந்த வீடியோவை ஆக்சோமியா ஜியோரி என்பவர் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து கண்டனத்தை தெரிவித்துள்ளார். அதில், வந்தே பாரத் ரயிலை நிறுத்தி ரீல்ஸ்கள் எடுப்பதற்காக அந்த இளைஞர்கள் தண்டவாளத்தின் நடுவில் மரக்கட்டைகள் உள்ளிட்டவற்றை வைக்கின்றனர். இது, அந்த ரயிலின் உள்ளே பயணிக்கும் பல்வேறு நபர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் பயங்கரவாத செயலாக கருத வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இளைஞர் கைது செய்யப்பட்டு உரிய நடவடிக்கை
மேலும், இந்த செயலில் ஈடுபட்ட நபர்கள் அனைவரும் கைது செய்யப்பட வேண்டும். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவில் உள்ள இளைஞர்கள் இது போன்ற ஏராளமான ரீல்ஸ்களை எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது எடுக்கப்பட்ட வீடியோ அவர்களின் 22- ஆவது வீடியோவாகும். இந்த வீடியோவில் தங்கள் வீடியோவை பார்த்தவர்களுக்கும், ஆதரவளித்தவர்களுக்கும் நன்றி. 18-ஆவது வீடியோவை பார்த்தது போல இந்த வீடியோ 907 பார்வையாளர்களை பெற்றுள்ளது என்று அந்த இளைஞர்கள் கருத்து பதிவு செய்துள்ளனர்.
மேலும் படிக்க: “காலாவதி மருந்து கொடுத்ததாக அவதூறு வீடியோ”.. மருத்துவர் எடுத்த விபரீத முடிவு!!
இளைஞர்கள் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ
அந்த வீடியோவில் வேகமாக வந்த வந்தே பாரத் ரயிலானது மெதுவாக வேகம் குறைக்கப்பட்டு நின்றது வரை அந்த இளைஞர்கள் பேசுகின்றனர். அதில், ரயில் நின்றதும், ரயில் ஓட்டுநர் வெளியே வந்து எட்டிப் பார்த்தது என்பன உள்ளிட்ட காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்தியாவில் ஏராளமானவர் சமூக வலைதளங்களை பயன்படுத்தி வருகின்றனர். சிலர் நல்ல காரியங்களுக்காகவும், சிலர் இது போன்ற ஆபத்தான சாகசங்களுக்காகவும் சமூக வலைதளங்களை பயன்படுத்துகின்றனர். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது பாவி மக்களின் உயிருடன் விளையாடுவது போல் உள்ளது.
இளைஞர்கள் செய்த செயலின் வைரல் வீடியோ
இந்த செயலுக்கு என்ன தண்டனை கிடைக்கும்
எனவே, இந்த இளைஞர்களின் மீது சட்ட பிரிவு 150- இன் கீழ் சட்டவிரோதமாகவும், தீங்கிழைக்கும் நோக்கத்துடன் மரம், கற்கள் அல்லது பிற பொருள்களை தண்டவாளத்தின் குறுக்கே வைப்பது அல்லது எறிவது குற்றமாகும். இதில், அவர்களுக்கு ஆயுள் தண்டனை அல்லது 10 ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை வழங்கப்படலாம். மரணத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் வகையில் செயல் பட்டிருந்தால் மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை கூட வழங்க வாய்ப்பு உள்ளது.
மேலும் படிக்க: ஜம்மு & காஷ்மீரில் கொட்டித் தீர்க்கும் கடும் பனி.. தேசிய நெடுஞ்சாலைகள் மூடல்!