லிஃப்ட் கொடுப்பதாக கூறி இளம்பெண் பாலியல் வன்கொடுமை – இருவர் கைது
கர்நாடகாவில் வேலை தேடிச் சென்ற பி.காம் பட்டதாரி பெண்ணுக்கு உதவுவதாகக் கூறி, இருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிக்பள்ளாப்பூர் அருகே நடந்த இச்சம்பவம் அப்பகுதியில் மக்களிடையே கொந்தளிப்பை உண்டாக்கியுள்ளது. சம்பந்தப்பட்ட இருவரும் கைது செய்யப்பட்டனர்.

இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை
கர்நாடகா, அக்டோபர் 14: கர்நாடகா மாநிலத்தில் வேலை தேடி சென்ற பெண்ணுக்கு உதவுவதாக கூறி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் சிக்பள்ளாப்பூர் மாவட்டத்தின் மஞ்சேனஹள்ளியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பி.காம் பட்டதாரியாக உள்ளார். இவர் வேலை தேடி சிக்பள்ளாப்பூர் நகரப் பகுதிக்கு வந்துள்ளார். பல இடங்களில் அலைந்தும் தனக்கு வேலை கிடைக்காத நிலையில், விரக்தியடைந்த அந்த பெண் சொந்த ஊருக்கு நடந்தே சென்றுள்ளார். இதனிடையே தனியாக சாலையில் ஒரு பெண் கடந்து செல்வதை கண்ட பைக்கில் சென்று கொண்டிருந்த ஒரு இளைஞர் அந்தப் பெண்ணின் அருகில் வண்டியை நிறுத்தி எங்கே செல்கிறீர்கள்? என விசாரித்துள்ளார்.
அப்பெண் விவரத்தை சொன்னதும் நான் உங்களை என்னுடைய பைக்கில் அழைத்து சென்று நீங்கள் இறங்கும் இடத்தில் விடுவதாகவும் தெரிவித்துள்ளார். நீண்ட தூரம் நடந்ததால் மிகவும் களைப்படைந்த அந்தப் பெண் உதவி செய்யும் மனப்பான்மையோடு கேட்டுள்ளார் என்ற நம்பிக்கையில் அவருடன் பைக்கில் ஏறி சென்றுள்ளார். ஆனால் கௌரிபித்தனூர் என்ற பகுதி அருகே பைக் சென்றபோது ஆள் நடமாட்டம் இல்லாத இடமாக பார்த்து அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று அந்த இளைஞர் பாலில் வன்கொடுமை செய்ய முயற்சித்துள்ளார்.
இதையும் படிங்க: பாலியல் துன்புறுத்தல்; ஐடி ஊழியர் தற்கொலை ; வெளியான இன்ஸ்டாகிராம் பதிவு
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண் அந்த இளைஞரிடம் இருந்து தப்பிக்க முயன்றுள்ளார். ஆனால் அவரின் ஆடையை கிழித்தார். மேலும் அப்பெண்ணை தாக்கி வலுக்கட்டமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதன்பிறகு புதிய ஆடை வாங்கி தருவதாக கூறி அந்த பெண் அணிந்திருந்த கம்மலை பறித்துக் கொண்டு அங்கிருந்து சென்றுள்ளார்.
நேராக சிக்பள்ளாப்பூர் சென்ற அவர் ஆடை வாங்கி விட்டு மீண்டும் தனது நண்பரை அழைத்துக் கொண்டு அந்த பெண் இருந்த இடத்திற்கு வந்துள்ளார். இருவரும் சேர்ந்து இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதனால் அவரின் உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதன் பின்னர் அந்த பெண்ணை மீண்டும் பைக்கில் வைத்து அழைத்துக்கொண்டு அந்த பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே விட்டு விட்டு இருவரும் தப்பி சென்று விட்டனர்.
இந்த நிலையில் நடக்க முடியாமல் மிகவும் சோர்வடைந்த நிலையில் இருந்த அந்த பெண்ணை பெட்ரோல் பங்க் அருகே பார்த்த ஷில்பா கவுடா என்ற பெண் என்ன நடந்தது? என விசாரித்துள்ளார். அதற்கு லிஃப்ட் கொடுப்பதாக கூறி ஒரு இளைஞரும், அவரது நண்பரும் தன்னை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததை அந்த பெண் அழுது கொண்டே சொல்லியுள்ளார்.
இதையும் படிங்க: அதிர்ந்த டெல்லி.. 17 பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல்.. கைதான சாமியார்!
இதனை தொடர்ந்து உடனடியாக ஷில்பா கவுடா அந்த பெண்ணை சிக்பள்ளாப்பூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். மேலும் இது தொடர்பாக மகளிர் காவல் நிலையத்திலும் புகார் அளித்தார். அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். இதில் அந்த பெண்ணுக்கு லிஃப்ட் கொடுப்பதாக கூறி பைக்கில் அழைத்து செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.
இதில் பைக்கை ஓட்டி வந்தவரின் உருவம் தெளிவாக பதிவாகிய அடிப்படையில் சிக்பள்ளாப்பூர் டவுன் பகுதியைச் சேர்ந்த சிக்கந்தர் பாஷா மற்றும் அவருக்கு நண்பர் ஜனார்த்தனச்சாரி அங்கு இருவரையும் கைது செய்தனர். இதில் சிக்கந்தர் பாஷா தான் லிஃப்ட் எடுத்துக் கொடுப்பதாக கூறி அந்த பெண்ணை முதலில் பாலியல் கொடுமை செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.