இந்தியா முழுவதும் தாக்குதல் திட்டம் – 3 பேரை கைது செய்த குஜராத் போலீஸ் – பரபரப்பு தகவல்
Terror plot foiled in Gujarat : இந்தியா முழுவதும் தீவிரவாதத் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியதாக குஜராத் தீவிரவாத தடுப்பு பிரிவு காவல்துறை மூவரை அகமதாபாதில் கைது செய்துள்ளனர். அவர்களை ஆயுதங்கள் வழங்கும் போது பிடிபட்டதாக போலீஸ் தெரிவித்துள்ளது. இந்த தகவல் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மாதிரி புகைப்படம்
குஜராத் (Gujarat) மாநிலத்தில் தீவிரவாதத் தாக்குதலை நடத்த சதித்திட்டம் தீட்டியதாக கூறப்படும் மூவரை குஜராத் தீவிரவாத தடுப்பு பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதன் மூலம் பெரிய அளவிலான தீவிரவாத அச்சுறுத்தல் தடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. குஜராத் தீவிரவாத தடுப்பு பிரிவினர் போலீசார் (Police) வழங்கிய தகவலின்படி, கடந்த ஒரு வருடமாக இந்த மூவரும் காவல்துறையினரின் தீவிர கண்காணிப்பில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள், இந்தியாவின் பல பகுதிகளில் தீவிரவாதத் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாகவும், அதற்காக ஆயுதங்களை வழங்கிக் கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தியா முழுவதும் தாக்குதல் நடத்த திட்டமிட்ட 3 பேர் கைது
நாடு முழுவதும் தீவிரவாத தாக்குதலை திட்டமிட்ட 3 பேரை தீவிரவாத தடுப்பு காவல்துறையினர் கடந்த ஒருவருடமாக கண்காணித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் குஜராத் மாநிலம் அகமதாபாத் பகுதியில் நடந்த மறைமுக நடவடிக்கையின் போது, இந்த மூவரும் ஆயுதங்கள் வழங்கும் போதே கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இதையும் படிக்க : ‘எறும்புகளுடன் என்னால் வாழ முடியாது… குழந்தையைப் பார்த்துக்கோங்க..’ – தற்கொலை செய்துகொண்ட பெண்
இந்த 3 பேரின் கைது நடவடிக்கை குறித்து குஜராத் மாநில தீவிரவாத தடுப்பு காவல்துறையினர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, சந்தேகத்துக்குரிய மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் கடந்த ஒரு வருடமாக ஏடிஎஸ் கண்காணிப்பில் இருந்தவர்கள். இந்தியாவின் பல பகுதிகளில் தாக்குதல் நடத்தும் நோக்கத்தில் ஆயுதங்களை வழங்கியபோது அவர்கள் கைது செய்யப்பட்டனர்,” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணை தீவிரம்
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் பல்வேறு ஆயுதங்கள், செல்போன்கள், மற்றும் ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளனர். அவர்கள் எந்த அமைப்புடன் தொடர்புடையவர்கள் மற்றும், யார் இவர்களுக்கு நிதி உதவி வழங்கினர், மேலும் எந்த நகரங்களில் தாக்குதல் திட்டம் தீட்டப்பட்டது என்பதற்கான விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதையும் படிக்க : அடுத்தடுத்து 17 வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளான லாரி.. 12 பேர் பரிதாப பலி!
இந்த நடவடிக்கை, இந்திய உள்நாட்டு பாதுகாப்பு அமைப்புகளின் எச்சரிக்கையுடனான ஒருங்கிணைந்த நடவடிக்கையாகும். இதனையடுத்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவிப்பதாவது, குஜராத் தீவிரவாத தடுப்பு பிரிவு தற்காலிகமாக பெரிய அளவிலான தீவிரவாத தாக்குதலை தடுத்து நிறுத்தியிருக்கலாம் என கூறப்படுகிறது. மூன்று பேரின் அடையாளம் மற்றும் அவர்கள் சார்ந்த வட்டாரங்கள் குறித்து ஏடிஎஸ் விரைவில் விரிவான தகவலை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவல் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.