நிமிஷா பிரியா வழக்கு.. அரசாங்க – மத்தியஸ்தக் குழுவை நியமிக்கக் கோரி மனு.. உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை..

Nimisha Priya Case: நிமிஷா பிரியாவுக்கு மன்னிப்பு வழங்கவும், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தவும் ஒரு அரசாங்க - மத்தியஸ்தக் குழுவை நியமிக்கக் கோரி வழக்கை உச்ச நீதிமன்றம் இன்று, அதாவது ஜூலை 18, 2025 பரிசீலிக்கும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிமிஷா பிரியா வழக்கு.. அரசாங்க - மத்தியஸ்தக் குழுவை நியமிக்கக் கோரி மனு.. உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை..

கோப்பு புகைப்படம்

Updated On: 

18 Jul 2025 11:35 AM

நிமிஷா பிரியா வழக்கு: ஏமனில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கேரளா செவிலியரான நிமிஷா பிரியாவுக்கு மன்னிப்பு வழங்கவும், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தவும் ஒரு அரசாங்க – மத்தியஸ்தக் குழுவை நியமிக்கக் கோரி சேவ் நிமிஷா பிரியா சர்வதேச நடவடிக்கை கவுன்சில் தாக்கல் செய்த வழக்கை உச்ச நீதிமன்றம் இன்று, ஜூலை 18, 2025 அன்று பரிசீலிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. “கேரளாவில் உள்ள நிமிஷா பிரியாவின் மகளையும், வயதான தாயின் நிலையையும் கருத்தில் கொண்டு, அவரது உயிரைக் காப்பாற்றும் மனிதாபிமான முயற்சியில் அனைவரும் இணையுமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்” என்று சேவ் நிமிஷா பிரியா சர்வதேச நடவடிக்கை கவுன்சிலின் மையக் குழு உறுப்பினர் தினேஷ் நாயர் தெரிவித்துள்ளார்.

வழக்கு பின்னணி என்ன?

கேரளா மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர் நிமிஷா பிரியா. இவர் ஏமனுக்கு செவிலியராக பணியாற்ற சென்றார். அங்க இருக்கக்கூடிய பல்வேறு மருத்துவமனைகளில் இவர் செவிலியராக பணியாற்றி வந்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவர் சொந்தமாக ஒரு கிளினிக்கை வைக்க முடிவு செய்துள்ளார். ஆனால் ஏமன் நாட்டின் சட்டப்படி சொந்தமாக கிளினிக் வைப்பதற்கு உள்ளூர் நபர் பங்குதாரராக இருக்க வேண்டும். அதன்படி 2014 ஆம் ஆண்டில் தலால் அப்த மாஹதியுடன் தொடர்பு கொண்டார்.

பின்னர் இருவரும் இணைந்து கிளினிக்கை திறந்து உள்ளனர். ஆனால் அதனைத் தொடர்ந்து பாஸ்போர்ட் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்களை தன்னிடம் வைத்துக் கொண்டு துன்புறுத்தியதாக நிமிஷா தெரிவித்துள்ளார். எனவே 2017 ஆம் ஆண்டு அவருக்கு நிமிஷா மயக்க மருந்து கொடுத்து அவரிடம் வைத்திருந்த பாஸ்போர்ட் மற்றும் பிற ஆதாரங்களை எடுக்க முயற்சி செய்தார். அப்போது மயக்க மருந்து அதிகப்படியாக கொடுத்ததன் காரணமாக அவர் உயிர் இழந்தார். இதனைத் தொடர்ந்து நிமிஷா மீது வழக்கு பதிவு செய்து போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

மேலும் படிக்க: மரண தண்டனை ரத்தாகுமா? போராடும் நிமிஷா பிரியா குடும்பத்தினர்… பின்னணி என்ன?

கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நிமிஷாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதனை 2024 ஆம் ஆண்டு உறுதி செய்யப்பட்டது. இவருக்கு 2026 ஜூலை 16ஆம் தேதி மரண தண்டனை நிறைவேற்றப்பட இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள்:

இதனைத் தொடர்ந்து இந்திய அரசாங்கம் தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நிமிஷா குடும்பத்திற்கு உதவ ஒரு வழக்கறிஞரை நியமத்துள்ளதாக இந்திய அரசாங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வழக்கமான தூதரக ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளதாகவும், பிரச்சனையை தீர்க்க உள்ளூர் அதிகாரிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்ந்து தொடர்புகள் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் விசாரணை:

இந்நிலையில் ஏமனில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கேரளா செவிலியரான நிமிஷா பிரியாவுக்கு மன்னிப்பு வழங்கவும், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தவும் ஒரு அரசாங்க – மத்தியஸ்தக் குழுவை நியமிக்கக் கோரி வழக்கை உச்ச நீதிமன்றம் இன்று, ஜூலை 18, 2025 அன்று பரிசீலிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மெஹ்தியின் குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்த 6 பேர் கொண்ட இராஜதந்திர-மத்தியஸ்தக் குழுவை சேவ் நிமிஷா பிரியா சர்வதேச நடவடிக்கை கவுன்சில் முன்மொழிந்துள்ளது.

மேலும் படிக்க: பறவைகள் விலங்குகள் மோதி 2000 விமான விபத்துகள்.. டெல்லிக்கு முதலிடம்.. கட்டுப்படுத்துவது எப்படி?

இது தொடர்பாக பேசிய தினேஷ் நாயர், “இன்று, உச்ச நீதிமன்றம் சாதகமான முடிவை எடுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம், இது பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தவும், நிமிஷா பிரியாவுக்கு மன்னிப்பு வழங்கவும் ஒரு தூதரக குழுவை நியமிக்க வழி வகுக்கும்” என்று தெரிவித்துள்ளார்.