ராகுல் காந்தியுடன் கைகோர்க்கும் முதல்வர் ஸ்டாலின்.. பீகாரில் ஒன்று கூடும் இந்தியா கூட்டணி தலைவர்கள்!

Rahul Gandhi Vote Chori Campaign : எதிர்க்ட்சி தலைவர் ராகுல் காந்தி தலைமையில் பீகாரில் நடந்து வரும் வாக்காளர் உரிமை யாத்திரையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்கிறார். இவரோடு, கர்நாடக முதல்வர் சித்தராமையா, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட முக்கிய இந்தியா கூட்டணி தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

ராகுல் காந்தியுடன் கைகோர்க்கும் முதல்வர் ஸ்டாலின்.. பீகாரில் ஒன்று கூடும் இந்தியா கூட்டணி தலைவர்கள்!

ராகுல் காந்தி - முதல்வர் ஸ்டாலின்

Published: 

23 Aug 2025 06:15 AM

பீகார், ஆகஸ்ட் 23 : பீகாரில் வாக்காளர் உரிமை யாத்திரை எனும் பெயரில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி (Rahul Gandhi Voter Rights Yatra) யாத்திரை நடத்தி வருகிறார். இந்த யாத்திரையில் இந்தியா கூட்டணி தலைவர்களும் கலந்து கொள்ள உள்ளார். குறிப்பாக, முதல்வர் ஸ்டாலினும்  (CM MK Stalin) ராகுல் காந்தியுடன் பீகாரில் நடைபயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2025 ஆகஸ்ட் 27ஆம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் ராகுல் காந்தியுடன் பீகார் வாக்காளர் உரிமை யாத்திரை மேற்கொள்ள உள்ளார். வடமாநிலத்தில் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது பீகார் மாநிலம். பீகார் மாநிலம் ஆளும் என்டிஏ கூட்டணி பக்க பலமாக இருந்து வருகிறது. அவர்களது வெற்றியில் 80 சீட்டுகளை பீகார் தருகிறது. இதற்கிடையில், பீகார் மாநிலத்தில் 2025 அக்டோபர் மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.

இதனையொட்டி, வாக்காளர் பட்டியலில் சிறப்பு திருத்தத்தை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. அதன்பின்பு, தேர்தல் ஆணையம் வெளியிட்ட வரைவு வாக்காளர் பட்டியலில், 65 லட்சம் போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டது தெரியவந்தது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கு இந்தியா கூட்டணியும் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். தொடர்ந்து, வாக்காளர் பட்டியலில் முறைகேடு, வாக்கு திருட்டு நடைபெறுவதால் ராகுல் காந்தி பகீரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார். இது தொடர்பான வழக்கும் உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதற்கு தேர்தல் ஆணையமும் பதில் கொடுத்தது.

Also Read : பிரதமர், முதலமைச்சர்களை பதவி நீக்கம் செய்யும் மசோதாக்கள்.. நாடாளுமன்றத்தில் கடும் அமளியில் எதிர்க்கட்சியினர்..

ராகுல் காந்தியுடன் முதல்வர் ஸ்டாலின் யாத்திரை

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு 7 நாட்களில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் அல்லது நாட்டு மக்களிடம் மன்னிட்டு கேட்க வேண்டும் என கூறியது. இதற்கிடையில், வாக்காளர் அதிகார யாத்திரை என்பது எதிர்க்கட்சி தலைவர் ராகுல் ந்தி 2025 ஆகஸ்ட் 17ஆம் தேதி தொடங்கினார். இந்த யாத்திரை பாட்னாவில் 2025 செப்டம்பர் 1ஆம் தேதி முடிவடைகிறது.

இந்த நிலையில், வாக்காளர் அதிகார யாத்திரையில் இந்தியா கூட்டணி தலைவர்களும் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, 2025 ஆகஸ்ட் 27ஆம் தேதி தர்பங்காவில் நடைபெறும் யாத்திரையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் ராகுல் காந்தயுடன் யாத்திரை மேற்கொள்ள உள்ளார். தொடர்ந்து, 2025 ஆகஸ்ட் 26,27ஆம் தேதிகளில் பிரியங்கா காந்தியும் எம்.பி, 2025 ஆகஸ்ட் 29ஆம் தேதி கர்நாடா முதல்வர் சித்தராமையா ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

Also Read : துணை ஜனாதிபதி தேர்தல்.. சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்புமனு தாக்கல்.. உடனிருந்த பிரதமர் மோடி!

2025 ஆகஸ்ட் 30ஆம் தேதி உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் கலந்து கொள்ள உள்ளார். மேலும், வரும் நாட்களில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, இமாச்சல பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் மற்றும் முக்கிய எதிர்க்கட்சி தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.