கோழிக்கோடு மருத்துவமனையில் புகை மூட்டம்.. மூச்சு திணறி 5 பேர் பலி.. கேரளாவில் ஷாக்!

kozhikode medical college : கேரளா மாநிலம் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் நோயாளிகள் 5 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. யுபிஎஸ் பொருத்தப்பட்டிருந்த அறையில் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து, கிளம்பிய புகையால் நோயாளிகள் மூச்சு திணறி உயிரிழந்தனர்.

கோழிக்கோடு மருத்துவமனையில் புகை மூட்டம்.. மூச்சு திணறி 5 பேர் பலி.. கேரளாவில் ஷாக்!

கோழிக்கோடு மருத்துவமனை

Updated On: 

03 May 2025 11:07 AM

கேரளா, மே 03 :  கேரளா மாநிலம் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி (kozhikode Medical College Accident) மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் (Fire Accident kozhikode Hospital)  நோயாளிகள் 5 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. யுபிஎஸ் பொருத்தப்பட்டிருந்த அறையில் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டு இருக்கிறது. அதை தொடர்ந்து, கிளம்பிய புகையால் அங்கிருக்கும் நோயாளிகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதில் 4 நோயாளிகள் உயிரிழந்த நிலையில், பலருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கேரள மாநிலம் கோழிக்கோட்டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் பலரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கோழிக்கோடு மருத்துவமனையில் புகை மூட்டம்

இந்த நிலையில், 2025 மே 2ஆம் தேதியான நேற்று இரவு அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது. அதாவது, 2025 மே 2ஆம் தேதி இரவு 8 மணியளிவில் மருத்தவமனையில் தீ விபத்து நடந்துள்ளது. மருத்துவமனையில் உள்ள யுபிஎஸ் அறையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு, புகை மூட்டமாக இருந்தது.

மருத்துவமனையில் முழுவதும் புகை மூட்டம் ஏற்பட்டதால், நோயாளிகள் மூச்சு திணற சிரமப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து அறிந்ததும் காவல்துறையும், தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டாலும், புகை மூட்டம் மருத்துவமனை முழுவதும் பரவியது.

இதற்கிடையில், நோயாளிகளை வெளியேற்றவும் செய்தனர். மேலும், ஆம்புலன்ஸ் மூலம் 30 பேர் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். மற்ற நோயாளிகள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள வெவ்வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்து 200க்கும் மேற்பட்ட நோயாளிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

மூச்சு திணறி நோயாளிகள் 4 பேர் பலி

கிட்டதட்ட மூன்று மணி நேரத்திற்கு பிறகு புகை மூட்டம் நின்றது. இந்த தீ விபத்தில் 5 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். மற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் புகை கிளம்பி இருக்கலாம் என கூறப்படுகிறது. இருப்பினும், இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

விசாரணைக்கு பிறகே விபத்துக்கான காரணம் தெரியவரும். அதைத் தொடர்ந்து, கேரள சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ், என்ன தவறு நடந்தது என்பதைக் கண்டறியவும், எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நிகழாமல் தடுக்கவும் சம்பவம் குறித்து விசாரணை நடத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த சம்பவம் தொடர்பாக கோழிக்கோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு மருத்துவமனையில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.