பெண்கள் பணி செய்ய பாதுகாப்பான டாப் 10 மாநிலங்கள்.. வெளியான பட்டியல்!
Best States for Working Woman in India | இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான பெண்கள் வேலைக்கு செல்கின்றனர். இந்த நிலையில், இந்தியாவில் பெண்கள் பணி செய்ய பாதுகாப்பான டாப் 10 நகரங்கள் குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது. அது குறித்து பார்க்கலாம்.

மாதிரி புகைப்படம்
பெண்ணாக பிறந்தாள் பெற்றோர்கள் கூறும் ஆணை திருமணம் செய்துக்கொண்டு காலம் முழுவதும் தனது கணவனுக்கும், குடும்பத்துக்காக மட்டுமே உழைக்கும் இயந்திரங்களாக பெண்கள் இருந்த காலம் மாறிவிட்டது. ஆதிகக்கத்தில் இருந்து விடுபட்டு பெண்கள், மெல்ல மெல்ல பல சாதனைகளை படைத்து வருகின்றனர். பெண்கள் வேலைக்கு செல்வது முறையற்றதாக இருந்த இதே சமூதாயத்தில், தற்போது ஏராளமான பெண்கள் படித்து தங்களது கனவுகளை நோக்கி பயணம் செய்கின்றனர். என்னதான் பெண்கள் தங்களது வாழ்வாதரத்தை உயர்த்தினாலும், அவர்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்தபாடில்லை. இதன் காரணமாக பெண்கள் பாதுகாப்பான பகுதிகளில் வேலை செய்ய விரும்புகின்றனர். அந்த வகையில் பெண்கள் வேலை செய்ய பாதுகாப்பான இந்திய மாநிலங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
பெண்கள் வேலை செய்ய பாதுகாப்பான மாநிலங்கள்
இந்தியா ஸ்கில்ஸ் என்ற பெயரில் 2025 ஆம் ஆண்டுக்கான அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அதில் பெண்கள் பணிபுரிய பாதுகாப்பான மற்றும் விரும்ப கூடிய டாப் 10 இந்திய மாநிலங்கள் குறித்த விவரங்கள் அதில் வெளியாகியுள்ளன.
முதல் மூன்று இடங்களை பிடித்த மாநிலங்கள்
இந்த பட்டியலில் ஆந்திர பிரதேசம் முதல் இடம் பிடித்துள்ளது. கேரளா இரண்டாவது இடத்திலும், குஜராத் மூன்றாவது இடத்திலும் உள்ளது. இந்த பட்டியலில் தமிழ்நாடு நான்காவது இடத்தை பிடித்துள்ளது. தமிழ்நாட்டை தொடர்ந்து மராட்டியம், டெல்லி, உத்தர பிரதேசம், கர்நாடகா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்கள் பட்டியலில் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.
இதையும் படிங்க : திருமணமான 4 மாதம்.. மனைவியை கொன்ற கணவன்.. படுக்கைக்கு அடியில் கிடந்த சடலம்
இந்த இடங்களை தேர்வு செய்ய என்ன காரணம்?
பணிபுரியும் இடங்களில் வாழ்வதற்கு ஏற்ற விசயங்கள் எளிமையான முறையில் கிடைப்பது மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெண்கள் இந்த மாநிலங்களை தேர்வு செய்துள்ளனர். இந்த பட்டியலின் படி, பெண் பணியாளர்களுக்கு ஆதரவான சுற்றுசூழலை அதிகம் கொண்டிராத மாநிலங்கள், பெண் பணியாளர்கள் முன்னேற்றத்திற்காக பங்காற்றுவதில் குறைவான வளர்ச்சி விகிதங்களை கொண்டுள்ளவையாக கருதப்படுகின்றன.
இதையும் படிங்க : இரவில் நாகினி பாம்பாக மாறும் மனைவி.. அதிர்ந்த கணவர்.. வினோத சம்பவம்!
உலகளாவிய கல்வி மற்றும் திறன் தொடர்பான தீர்வுகளுக்கான வீல்பாக்ஸ் என்ற அமைப்பு இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.