டெல்லி குண்டுவெடிப்பு வழக்கில் திடீர் திருப்பம் – வழக்கை கையிலெடுத்த என்ஐஏ – விசாரணை தீவிரம்

NIA Takes Charge: டெல்லி குண்டு வெடிப்பு வழக்கை என்ஐஏ எனப்படும் தேசிய விசாரணை ஆணையம் விசாரிக்க உள்ளது. மேலும் இந்த வழக்கு தொடர்பான அறிக்கையை விசாரணை ஆணையம் விரைவில் சமரப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்த வழக்கின் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.

டெல்லி குண்டுவெடிப்பு வழக்கில் திடீர் திருப்பம் - வழக்கை கையிலெடுத்த என்ஐஏ - விசாரணை தீவிரம்

மாதிரி புகைப்படம்

Published: 

11 Nov 2025 16:38 PM

 IST

புது டெல்லி, நவம்பர் 11 : பயங்கரவாத தாக்குதல் என சந்தேகிக்கப்படும் டெல்லி குண்டுவெடிப்பில் இதுவரை 12 பேர் இறந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இரண்டு பெண்கள் உட்பட 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இது தற்கொலைப்படை தாக்குதல் என சந்தேகிக்கப்படுகிறது.  இந்த நிலையில் நாடு முழுவதையும் உலுக்கிய இந்த டெல்லி  (Delhi) குண்டுவெடிப்பு வழக்கு விசாரணை NIA எனப்படும் தேசிய விசாரணை ஆணையத்திடம் (National Investigation Agency) ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான அறிக்கையை  தேசிய விசாரணை ஆணையம் விரைவில் சமர்ப்பிக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வழக்கில் முதற்கட்டமாக இது தற்கொலைப்படை தாக்குதலாக சந்தேகிக்கப்பட்டு வருகின்றன.

குண்டுவெடிப்பு வழக்கை கையிலெடுத்த தேசிய விாரணை ஆணையம்

குண்டுவெடிப்புக்கு சற்று முன்பு வெடித்த வெள்ளை ஹூண்டாய் ஐ20 காரின் சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன. செங்கோட்டை அருகே உள்ள ஒரு வாகன நிறுத்துமிடத்தில் வாகனம் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நிறுத்தப்பட்டிருந்தது, மேலும் குண்டுவெடிப்புக்கு சற்று முன்பு வாகனம் மெதுவாக சென்றது வீடியோவில் பதிவாகியுள்ளது. காரை ஓட்டிச் சென்ற சந்தேக நபர் ஃபரிதாபாத் பயங்கரவாதக் குழுவைச் சேர்ந்த டாக்டர் உமர் முகமதுவாக இருக்கலாம் என இன்னும் சந்தேகிக்கப்படுகிறது.

இதையும் படிக்க : டெல்லியில் நடந்தது தற்கொலை படை தாக்குதலா? புல்வாமா வரை சென்ற விசாரணை.. கைதான கார் உரிமையாளர் சொன்ன திடுக் தகவல்..

டெல்லி குண்டுவெடிப்பு குறித்த ஏஎன்ஐயின் பதிவு


இதை நிரூபிக்க உமர் முகமதுவின் குடும்பத்தாரிடம் டிஎன்ஏ பரிசோதனை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் இதுவரை 13 பேர் விசாரிக்கப்பட்டுள்ளனர். டாக்டர் உமரின் நண்பரை டெல்லி காவல்துறை விசாரணை எடுத்துள்ளது. புல்வாமாவைச் சேர்ந்த டாக்டர் சஜ்ஜாத் காவலில் உள்ளார். செங்கோட்டையில் நடந்த குண்டுவெடிப்பு தற்கொலைத் தாக்குதல் என்பதை டெல்லி போலீஸ் வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

இதையும் படிக்க : நாட்டையே உலுக்கிய டெல்லி வெடிகுண்டு விபத்து.. இதுவரை இல்லாத புதிய முறை.. காவல்துறை விசாரணையில் வெளியான பகீர் தகவல்..

குடும்பத்தாரிடம் தீவிர விசாரணை

கடந்த நவம்பர் 10, 2025 அன்று மாலை 6.50 மணியளவில் குண்டுவெடிப்பு நடந்தது. காஷ்மீரில் உள்ள டாக்டர் உமர் முகமதுவின் வீட்டிற்குச் சென்ற போலீசார் அவரது தாயார் மற்றும் சகோதரரைக் கைது செய்துள்ளனர். இருப்பினும், உமர் ஒரு பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர் என்பது தங்களுக்குத் தெரியாது என்று குடும்பத்தினர் கூறுகின்றனர். விசாரணைக்கு பிறகே தீவிரவாதிகளின் நோக்கம் என்ன ? நாட்டில் வேறு எங்கும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா போன்ற விவரங்கள் தெரியவரும்.