AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Rajya Sabha Election 2025: 6 இடங்கள் காலி! தமிழ்நாட்டில் ஜூன் 19ம் தேதி மாநிலங்களவை தேர்தல் என அறிவிப்பு!

Tamil Nadu Rajya Sabha Election: தமிழ்நாட்டில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை தொகுதிகளுக்கான தேர்தல் வருகின்ற 2025 ஜூன் 19ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின்படி, வேட்புமனு பரிசீலனை, வேட்புமனுவை திரும்ப பெறுதல் ஆகிய செயல்முறைகள் திட்டமிட்டப்படி முடிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Rajya Sabha Election 2025: 6 இடங்கள் காலி! தமிழ்நாட்டில் ஜூன் 19ம் தேதி மாநிலங்களவை தேர்தல் என அறிவிப்பு!
மாநிலங்களவை தேர்தல் 2025Image Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 26 May 2025 14:27 PM IST

டெல்லி, மே 26: தமிழ்நாட்டில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை தொகுதிகளுக்கான தேர்தல் வருகின்ற 2025 ஜூன் 19ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் (Election Commission Of India) அறிவித்துள்ளது. வைகோ, சண்முகம், வில்சன், எம்.எம்.அப்துல்லா, அன்புமணி ராமதாஸ் (Anbumani Ramadoss) , சந்திரசேகரன் ஆகிய 6 உறுப்பினர்களின் பதவிக்காலம் வருகின்ற 2025 ஜூலை 24ம் தேதியுடன் நிறைவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தல் ஆணையத்தின்படி, வேட்புமனு பரிசீலனை, வேட்புமனுவை திரும்ப பெறுதல் ஆகிய செயல்முறைகள் திட்டமிட்டப்படி முடிக்கப்பட வேண்டும் என்றும், விரைவில் தேர்தல் செயல்முறையின் முழுமையான விவரங்களும் பகிரங்கப்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

முடிவடையும் பதவிக்காலம்:


தமிழ்நாட்டைச் சேர்ந்த அன்புமணி ராமதாஸ், எம். சண்முகம், என். சந்திரசேகரன், எம். முகமது அப்துல்லா, பி. வில்சன், மற்றும் வைகோ ஆகிய 6 எம்.பி.க்களின் பதவிக்காலம் வருகின்ற 2025 ஜூலை 25ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, மாநிலங்களவைக்கு (RS) தமிழ்நாட்டிலிருந்து 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படும் என்று ஆணையத்தின் துணைச் செயலாளர் தனுஜ் குமாரி தெரிவித்தார்.

தேர்தல் அறிவிப்பு:

இதையடுத்து, காலியாக உள்ள 6 மாநிலங்களவை இடங்களுக்கான வேட்புமனு தாக்கல் வருகின்ற 2025 ஜூன் 2ம் தேதி முதல் தொடங்குகிறது. இதனையடுத்து, வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி 2025 ஜூன் 9ம் தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  தொடர்ந்து, வேட்புமனுக்கள் 2025 ஜூன் 10ம் தேதி பரிசீலனை செய்யப்படும் என்றும்,  வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசி தேதி 2025 ஜூன் 12ம் தேதி எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் தற்போதைய எம்.எல்.ஏ.க்களின் பலத்தைக் கொண்டு, தி.மு.க.வுக்கு 4 எம்.பி.க்களும், அ.தி.மு.க.வுக்கு 2 எம்.பி.க்களும் கிடைக்க வாய்ப்புள்ளது.

 

Follow Us