பிரதமர் மோடியின் ஆந்திரா பயணம்.. ஸ்ரீசைலத்தில் சிறப்பு வழிபாடு.. பயணத்திட்டம் என்ன?

PM Modi Visit To Srisailam: ஆந்திரா சென்ற பிரதமர் மோடிக்கு, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஆளுநர் மற்றும் துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோர் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர். பிரதமர் மோடியின் வருகையை ஒட்டி அங்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் மோடியின் ஆந்திரா பயணம்.. ஸ்ரீசைலத்தில் சிறப்பு வழிபாடு.. பயணத்திட்டம் என்ன?

கோப்பு புகைப்படம்

Published: 

16 Oct 2025 12:35 PM

 IST

ஆந்திரா, அக்டோபர் 16, 2025: பிரதமர் நரேந்திர மோடி தனது ஆந்திரப் பிரதேச சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக கர்னூலில் உள்ள ஓர்வக்கல் விமான நிலையத்திற்கு வந்தார். பிரதமர் மோடிக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஆளுநர் மற்றும் துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோர் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர். அங்கிருந்து பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர் ஸ்ரீசைலம் சென்றடைந்தது. பிரதமர் மோடியுடன், முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோரும் ஸ்ரீசைலம் சென்றடைந்தனர்.

ஸ்ரீசைலம் செல்லும் பிரதமர் மோடி:


ஸ்ரீசைலம் பிரம்மராம்ப மல்லிகார்ஜுன சுவாமி கோயிலுக்கு வந்த பிரதமர் மோடி, முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் பவன் கல்யாண் ஆகியோருக்கு கோயில் அதிகாரிகள் மற்றும் பூசாரிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். பிரதமர் மோடி ஸ்ரீ பிரம்மராம்ப மல்லிகார்ஜுன சுவாமி தேவஸ்தானத்தில் சிறப்பு பூஜைகள் மேற்கொள்கிறார். பிரதமர் மோடி மதியம் 12:05 மணி வரை ஸ்ரீ பிரம்மராம்ப மல்லிகார்ஜுன சுவாமி கோயிலில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவாஜி உத்வேக மையத்தைப் பார்வையிடும் பிரதமர் மோடி:

பின்னர், பிரதமர் மோடி சிவாஜி உத்வேக மையத்தைப் பார்வையிடுவார். பிரதமர் சிவாஜி உத்வேக மையத்தில் 15 நிமிடங்கள் தியானம் செய்வார். ஸ்ரீசைலத்தில் உள்ள சக்தி பீடம் நாடு முழுவதும் உள்ள 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றாகும். பிரமரம்பா தேவி சத்ரபதி சிவாஜிக்கு சண்டையிட ஒரு வாளைக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. அந்த வாளால் அவர் ராஜ்ஜியங்களை தோற்கடித்தார் என்றும், அந்த உத்வேகத்தை எதிர்கால சந்ததியினருக்குக் கடத்துவதற்காக ஸ்ரீசைலத்தில் சிவாஜி உத்வேக மையம் கட்டப்பட்டது என்றும் கூறப்படுகிறது.

போக்குவரத்து மாற்றம்:

பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை முன்னிட்டு, ஸ்ரீசைலத்தில் உள்ள ஸ்ரீ பிரம்மராம்பா மல்லிகார்ஜுன சுவாமி கோயிலுக்குச் செல்லும் சாலைகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை போக்குவரத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். தெலுங்கானா மற்றும் ஆந்திராவின் டோர்னாலா பகுதியிலிருந்து கோயிலுக்கு வரும் பக்தர்கள் அதற்கேற்ப தங்கள் திட்டங்களை மாற்றிக்கொள்ளுமாறு அறிவ்வுறுத்தப்பட்டுள்ளனர்.

அதைத்தொடர்ந்து, கர்னூலுக்கு செல்லும் அவர், தொழில், மின்சாரம், சாலை, ரயில்வே, பாதுகாப்பு உற்பத்தி, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு உள்ளிட்ட பல்வேறு துறைகளை உள்ளடக்கிய, ரூ. 13,430 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார்.