’என்னால் கண்ணீரை அடக்க முடியல’ பிறந்தநாளில் உணர்ச்சிவசப்பட்ட ஜனாதிபதி!

President Droupadi Murmu Birthday : பார்வை மாற்றுத்திறன் மாணவர்களின் பிறந்தநாள் வாழ்த்துப் பாடலை கேட்டு உணர்ச்சிவசப்பட்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கண்ணீர் சிந்தியுள்ளார். மாணவர்கள் பிறந்தநாள் வாழ்த்து பாடிக் கொண்டிருக்கும்போதே, திரௌபதி முர்மு மேடையிலேயே கண்ணீர் விட்டு அழுதுள்ளார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

’என்னால் கண்ணீரை அடக்க முடியல’ பிறந்தநாளில் உணர்ச்சிவசப்பட்ட ஜனாதிபதி!

திரௌபதி முர்மு

Updated On: 

20 Jun 2025 16:24 PM

டெல்லி, ஜூன் 20 : உத்தரகாண்டில் பார்வை மாற்றுத்திறன் மாணவர்களின் பிறந்தநாள் வாழ்த்துப் பாடலை கேட்டு உணர்ச்சிவசப்பட்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு (President Droupadi Murmu) கண்ணீர் சிந்தியுள்ளார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு 2025 ஜூன் 20ஆம் தேதியான இன்று தனது 67வது பிறந்தநாளை (President Droupadi Murmu Birthday) கொண்டாடுகிறார். அவருக்கு பிரதமர் மோடி, அனைத்து மாநில முதல்வர்கள் உள்ளிட்டோர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையில், உத்தரகாண்டிற்கு மூன்று நாள் பயணமாகச் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சென்றிருக்கிறார்.

கண்கலங்கிய திரௌபதி முர்மு

டேராடூனுக்கு வந்தடைந்த திரௌபதி முர்முவுக்கு ஆளுநர் மற்றும் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி ஆகியோர் வரவேற்றனர்.   அதைத் தொடர்ந்து, ராஜ்பூர் சாலையில் புதிதாக கட்டப்பட்ட விடுதிகளை திறந்து வைத்தார். இதனை அடுத்து, பார்வை மாற்றுத்திறனாளி மாணவர்கள் திரௌபதி முர்மு சந்தித்தார்.

அப்போது, பார்வை மாற்றத்திறனாளி மாணவர்கள் திரௌபதி முர்முவுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்தனர். அதனை ஒரு பாடலாகவும் பார்வை மாற்றுத்திறனாளி மாணவர்கள் பாடினர். இதனை கேட்ட திரௌபதி முர்மு  மேடையிலேயே உணர்ச்சிவசப்பட்டார்.  மாணவர்கள் பாடும்போது, அவர் கண்கலங்கி உள்ளார்.

திரௌபதி முர்மு வீடியோ

”என்னால் கண்ணீரை அடக்க முடியவில்லை”


இதனை தொடர்ந்து, பார்வை மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மத்தியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ” என்னால் கண்ணீரை அடக்க முடியவில்லை. அவர்கள் மிகவும் அழகாகப் பாடிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் தங்கள் இதயத்திலிருந்து பாடினார்கள்.

பார்வை மாற்றுத்திறனாளி குழந்தைகளுடன் நான் இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரம் அளிப்பதற்கும், அவர்கள் வளர சம வாய்ப்புகளை வழங்குவதற்கும் அரசு கொள்கைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஒரு நாட்டின் உண்மையான முன்னேற்றத்தை, அந்நாட்டு மாற்றுத்திறனாளிகளை அந்நாடு எவ்வாறு நடத்துகிறது என்பதைப் பொறுத்து அளவிட முடியும்” என்று கூறினார்.

தொடர்ந்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு குறித்து பேசிய முதல்வர் புஷ்கர் சிங் தாமி, “குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் வாழ்க்கை வாழ்க்கை போராட்டங்கள் நிறைந்தது. மிகவும் எளிமையான பின்னணியில் இருந்து வந்த அவர், உயர்ந்த பதவிகளுக்கு சென்றார். எப்போதும் தாழ்த்தப்பட்ட பிரிவினரின் மேம்பாட்டிற்காக பாடுபட்டார்” என்று கூறினார்.

Related Stories
மகனுக்கு பிறந்தநாள் பரிசு வழங்குவதில் வாக்குவாதம்.. மனைவி, மாமியாரை கத்தரிக்கோலால் குத்தி கொலை செய்த நபர்!
பாஜகவுடன் ரகசிய உறவில் துணை முதல்வர் டி.கே சிவகுமார்.. போட்டுடைத்த எம்.எல்.ஏ பசங்கவுடா பாட்டீல் யட்னல்
செப்டமர் மாதத்தில் 109% அதிக மழைப்பதிவு இருக்கும்.. எச்சரிக்கும் வானிலை ஆய்வு மைய தலைவர்..
FASTag Annual Pass 2025: FASTag வருடாந்திர பாஸை யார் பயன்படுத்தலாம்..? நிபந்தனைகள் என்னென்ன..?
திருப்பி அடிக்குமா இந்தியா? பதற்றத்தில் அமெரிக்க நிறுவனங்கள்.. வரியால் நடக்கும் குழப்பங்கள்!
வாட்ஸ்அப்பில் இரங்கல் செய்தி.. அடுத்த நாள் மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவர்.. அதிர்ச்சி சம்பவம்!