Maha Kumbh Mela : மகா கும்பமேளா வருமானம் மூலம் கார் வாங்கிய பாபா.. சுவாரஸ்ய சம்பவம்!
Baba Buys Car After Maha Kumbh Mela | உத்தர பிரதேச மாநில பிரயாக்ராஜ் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மகா கும்பமேளா நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் பலர் பிரபலமான நிலையில், மகா கும்பமேளாவில் சம்பாதித்ததன் மூலம் கார் வாங்கிய பாபாவின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஒரு கை பாபா
டெல்லி, மே 06 : உத்தர பிரதேச (Uttar Pradesh) மாநில பிரயாக்ராஜ் (Prayagraj) பகுதியில் நடைபெற்ற மகா கும்பமேளா (Maha Kumbh Mela) நிகழ்வு உலகம் முழுவதும் கவணத்தை ஈர்த்தது. இந்தியா மட்டுமன்றி, உலகம் முழுவதிலும் இருந்து கோடிக்கணகான பக்தர்கள் மகா கும்பமேளா நிகழ்வில் பங்கேற்றனர். மகா கும்பமேளா 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் புனித நிகழ்வாக உள்ள நிலையில், பலரும் பக்தியுடன் பங்கேற்றனர். இந்த நிகழ்வில் பல சம்பவங்கள் மற்றும் மனிதர்கள் பிரபலமாகினர். அந்த வகையில், மகா கும்பமேளாவில் சம்பாதிததன் மூலம் பாபா ஒருவர் கார் வாங்கியுள்ளார். தற்போது இவர் தான் இணையத்தில் பேசுபொருளாக உள்ளார். இந்த நிலையில் இந்த பாபா யார், மகா கும்பமேளா மூலம் கார் வாங்கியது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்த மகா கும்பமேளா
உத்தர பிரதேச மாநில பிரயாக்ராஜ் பகுதியில் ஜனவரி 13, 2025 முதல் பிப்ரவரி 26, 2025 வரை மகா கும்பமேளா நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் என்பதால் உலகம் முழுவதிலும் இருந்து கோடிக்கணக்கான மக்கள் இதில் பங்கேற்றனர். இதில் பலர் தங்களது வித்தியாசமன தோன்றங்கள், வியாபாரங்கள், செயல்கள் ஆகியவற்றுக்கு மிகவும் பிரபலமானர். அந்த வகையில், மகா கும்பமேளாவில் சம்பாதித்த பணத்தை வைத்து ஒரு பாபா கார் வாங்கியதன் மூலம் பிரபலமாகியுள்ளார். அவர் கார் வாங்கும் வீடியோதான் தற்போது இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.
இணையத்தில் வைரலாகும் வீடியோ
Remember that baba ji who cliams has not put his hand down for 20 years , With the earning collected from the #mahakhubh , Baba ji purchased a SUV .. Bestu business ever..pic.twitter.com/Gng5RpGsUK
— Mukesh (@mikejava85) May 1, 2025
இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், ஒத்த கை பாபா என்பவர் புதியதாக கார் ஒன்றை வாங்குகிறார். இவர் கடந்த 20 ஆண்டுகளாக தனது ஒரு கையை கீழே இறக்காமல் உள்ளதால் மிகவும் பிரபலமாக கருதப்படுகிறார். மகா கும்பமேளாவில் பங்கேற்ற பாபாக்களில் இவரும் ஒருவர் ஆவார். தற்போது, மகா கும்பமேளாவில் சம்பாதித்த பணம் மூலமாக கார் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து இணையத்தில் வைரலாகும் வீடியோவில், அந்த பாபா கார் ஷோரூமில் நின்று கொண்டிருக்கிறார். பிறகு சில ஆவணங்களில் கையெழுத்திடும் அவர், தான் புதியதாக வாங்கிய காரில் ஏறி பயணம் செய்கிறார். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.