மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வீட்டில் பொங்கல் விழா.. பிரதமர் மோடி பங்கேற்கிறார்!

Pongal Celebration At Union Minsiter L Murugan House | மத்திய இணை அமைச்சர் எல்.முருகனின் டெல்லி இல்லத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்படும். அந்த வகையில் இந்த ஆண்டும் அவரது இல்லத்தில் பொங்கல் விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிற்து.

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வீட்டில் பொங்கல் விழா.. பிரதமர் மோடி பங்கேற்கிறார்!

கோப்பு புகைப்படம்

Updated On: 

12 Jan 2026 08:15 AM

 IST

புதுடெல்லி, ஜனவரி 12 : தமிழகத்தில் (Tamil Nadu) இன்னும் சில நாட்களில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதன் காரணமாக கட்சிகள், அரசியல் கட்சி தலைவர்கள் சார்பில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் மீன்வளத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் வீட்டில் பொங்கல் பண்டிகை விழாவுக்கான சிறப்பு ஏற்பாடுகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி (Indian Prime Minister Narendra Modi) உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள் என பலர் பங்கேற்றனர். இந்த நிலையில். எல்.முருகன் வீட்டு பொங்கல் விழா குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஆண்டுதோறும் டெல்லியில் பொங்கல் பண்டிகை கொண்டாடும் எல்.முருகன்

பாரதிய ஜனதா கட்சியின் (BJP – Bharatiya Janata Party) முக்கிய தலைவர்களில் ஒருவரான எல்.முருகன் ஒவ்வொரு ஆண்டும் டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் பண்டிகையை வெகு சிறப்பாக கொண்டாடி வருகிறார். அந்த வகையில் இந்த ஆண்டு ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற தலைப்பில் பொங்கல் பண்டிகை கொண்டாட உள்ளார். ஒவ்வொரு ஆண்டும் எல்.முருகன் வீட்டு பொங்கல் விழாவில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் கலந்துக்கொள்வது வழக்கம். அந்த வகையில் இந்த பொங்கல் விழா கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி சிபி ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க : 11 மாத குழந்தையை விஷம் கொடுத்து கொலை செய்த தாய்.. கணவரின் துன்புறுத்ததால் பெண் விபரீத முடிவு!

வெகு சிறப்பாக கொண்டாடப்பட உள்ள பொங்கல் பண்டிகை

ஜனவரி 14, 2026 அன்று நடைபெற உள்ள இந்த பொங்கல் கொண்டாட்டத்தில் மத்திய அமைச்சர் எல்.முருகனின் வீடு கரும்பு, மஞ்சள், வாழை மற்றும் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு தமிழக கிராமிய மணம் கமழும் வகையில் தயார் செய்யப்பட்டு வருகிறது. இந்த விழாவில் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து பொங்கலிட உள்ள நிகழ்வை பிரதமர் மோடி பார்வையிட உள்ளார். இந்த விழாவில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், மத்திய மந்திரிகள் மற்றும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த முக்கிய பாஜக தலைவர்கள் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

புதியதாக வாகனம் வாங்குபவர்கள் RTO செல்ல வேண்டிய அவசியம் இல்லை.. மத்திய அரசின் சூப்பர் அறிவிப்பு..
எதிர் காலத்தை கணிக்கும் சீன கோயில்…அதுவும் இந்தியாவில் எங்கு உள்ளது தெரியுமா!
ஜனவரி 12ஆம் தேதி விண்ணில் ஏவப்படும் PSLV C62.. சிறப்புகள் என்ன?
ரூ.1 லட்சத்தில் மின்சார ஜீப்…100 கி.மீட்டர் பயணம்..பீகார் இளைஞரின் புதுமை!