சாலையோர கடையில் உணவு சாப்பிட்ட பிரதமர் மோடி – 100 மில்லியன் பார்வைகளை கடந்த வீடியோ

மேற்கு வங்க மாநிலத்தின் ஜார்கிராம் பகுதியில் அமைந்திருந்த ஒரு சிறிய கடையில் எளிமையாக உணவு சாப்பிட்ட வீடியோவை பிரதமர் நரேந்திர மோடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ கடந்த 24 மணி நேரத்தில் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.

சாலையோர கடையில் உணவு சாப்பிட்ட பிரதமர் மோடி - 100 மில்லியன் பார்வைகளை கடந்த வீடியோ

பிரதமர் நரேந்திர மோடி

Published: 

20 Apr 2026 19:07 PM

 IST

மேற்கு வங்க மாநிலத்தின் ஜார்கிராம் பகுதியில் அமைந்திருந்த ஒரு சிறிய கடை தற்போது தேசிய அளவில் பிரபலமாக மாறியுள்ளது. காரணம் பிரதமர் நரேந்திர மோடி எதிர்பாராத விதமாக அந்த கடைக்கு வந்து ஜால்முரி என்ற அந்த பகுதியின் பிரபல உணவை சாப்பிட்டது அந்த பகுதி மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்கத்தில் நடைபெற்று வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பரப்புரைக்காக வந்திருந்த பிரதமர் நரேந்திர மோடி, ஜார்கிராமில் உள்ள ஒரு சிறிய தெரு உணவுக் கடையில் திடீரென நின்றார். அங்கு ஜால்முரி விற்பனை செய்த விக்ரம் ஷா என்ற கடையின் உரிமையாளரிடம் இருந்து உணவு வாங்கி சாப்பிட்டார்.

100 மில்லியன் பார்வைகளை கடந்த பிரமர் மோடியின் வீடியோ

இது தொடர்பான வீடியோவை பிரதமர் மோடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிட்டார். அவர் கடைக்காரரிடம் தனது பையில் இருந்து பணம் கொடுத்து ஜால்முரி வாங்கி சாப்பிட்டார். இந்த வீடியோ நாடு முழுவதும் டிரெண்டானது. பிரதமர் மோடி தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த அந்த வீடியோவை ஒரே நாளில் 100 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது.

பிரதமர் மோடியின் இன்ஸ்டாகிராம் வீடியோ

 

வீடியோவில் பிரதமர் மோடி, முதலில் கடை உரிமையாளரின் பெயர் மற்றும் அவரது நலன் குறித்து கேட்டறிந்தார். பின்னர் ஜால்முரி என்ற உணவை தயாரிக்கச் சொன்னார். ஜால்முரி தயாரித்த பிறகு அதன் விலையை கேட்டார். கடையின் உரிமையாளர் பணம் வாங்க மறுக்கவே, அவரை பிரதமர் மோடி வற்புறுத்தி பணம் வாங்க சொன்னார. இதற்காக அவர் தனது பையில் இருந்து பணம் கொடுத்தார். பின்னர் கடை உரிமையாளரின் குடும்ப பின்னணி, பெற்றோர்களின் பெயர்கள் உள்ளிட்ட விவரங்களை கேட்டறிந்தார். பிரதமர் மோடியின் இந்த எளிமையான அணுகுமுறை அனைவரையும் கவர்ந்தது. அதன் காரணமாகவே இந்த வீடியோ 100 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.

இது குறித்து கடையின் உரிமையாளர் விக்ரம் ஷா தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக ஊடகங்களுக்கு பேட்டியளித்த அவர், நாட்டின் பிரதமர் என் கடைக்கு வந்து ஜால்முரி சாப்பிட்டது எனக்கு பெரிய விஷயம். இது நான் கனவிலும் நினைக்காத ஒன்று” என்று அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

 

Follow Us
Related Stories
பஹல்காமில் பாதுகாப்பை உறுதிப்படுத்த QR கோடு உடன் அடையாள அட்டை.. முக்கிய நடவடிக்கை!
பஹல்காம் தாக்குதல் நடந்து ஓராண்டு நிறைவு – சுற்றுலா பயணிகளின் வருகை எப்படி இருக்கிறது?
ஒடிசாவில் செமிகண்டக்டர் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டு விழா – தொழில்நுட்ப துறையில் மாபெரும் முன்னேற்றம்
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா.. பிரதமர் மோடியின் கருத்துக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு
டெல்லியில் ஒரு வீட்டில் ரூ.1 கோடி மதிப்பிலான நகை, பணம் கொள்ளை.. கில்லாடி கொள்ளையர்கள் சிக்கியது எப்படி?
மசோதா நிறைவேற்றப்படாததற்கு நாட்டு பெண்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் – பிரதமர் மோடி உரை..
எங்கள் விமானம் தாக்கப்படும் அபாயம் - பாகிஸ்தான் சென்ற ஈரான் குழுவினர் அச்சம்
போரைப் போல மோதிக்கொள்ளும் சிம்பான்சிகள் - காரணம் என்ன?
UPI-ல் ரூ.10,000-க்கு மேல் பணம் அனுப்ப ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டுமா?.. ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
சீனா தயாரித்த செயற்கைக்கோள் மூலம் கண்காணிப்பு? எழுந்த புதிய பாதுகாப்பு கவலை..