இந்தியாவின் நிலைப்பாடு? ஈரான் அதிபருடன் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி
PM Modi Speaks Iran President : பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 21, 2026 அன்று ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியனுடன் தொலைபேசியில் பேசினார். மேற்கு ஆசியாவில் நிலவும் போர் சூழல் குறித்து அவர் அவருடன் விவாதித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் - பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 21, 2026 அன்று ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியனுடன் தொலைபேசியில் பேசினார். மேற்கு ஆசியாவில் நிலவும் போர் சூழல் குறித்து அவர் அவருடன் விவாதித்ததாக கூறப்படுகிறது. மேலும் ஈரான் நாட்டிற்குள் உள்ள முக்கிய கட்டிடங்கள் மீதான தாக்குதல்களை மோடி கண்டித்ததாகவும் அதிகரித்து வரும் போர் பதற்றம் மற்றும் பொதுமக்களின் உயிரிழப்புகள் குறித்து அவர் கவலை தெரிவித்தாகவும் கூறப்படுகிறது. இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், எரிசக்தி விநியோகம் மற்றும் சரக்கு போக்குவரத்தில் எந்தவித இடையூறும் ஏற்படாமல் தடுப்பதற்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
ஈரான் அதிரபருடன் தொலைபேசி வாயிலாக உரையாடிய பிரதமர் மோடி
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஈரான் அதிபர் டாக்டர் மசூத் பெசஷ்கியான் உடன் தொலைபேசி வாயிலாக உரையாடினார். அப்போது அவரிடம் தனது ரமலான் வாழ்த்துகளை தெரிவித்தார். மேலும் இந்த பண்டிகை காலத்தில், மத்திய கிழக்கு நாடுகளுக்கு இடையே அமைதி நிலவும் என்றார். இரு நாட்டு தலைவர்களும், மத்திய கிழக்கு பகுதியில் அதிகரித்து வரும் பதற்றம் குறித்து விரிவாக பேசியதாக கூறப்படுகிறது. மேலும் அந்த ஈரானில் முக்கிய பகுதிகளில் நடைபெற்று தாக்குதல்கள் குறித்து பிரதமர் மோடி கவலை தெரிவித்ததாக கூறப்படுகிறது.
ஈரான் அதிபருடன் பேசியது தொடர்பாக பிரதமரின் எக்ஸ் பதிவு
Spoke with President Dr. Masoud Pezeshkian and conveyed Eid and Nowruz greetings. We expressed hope that this festive season brings peace, stability and prosperity to West Asia.
Condemned attacks on critical infrastructure in the region, which threaten regional stability and…
— Narendra Modi (@narendramodi) March 21, 2026
இந்த தாக்குதல்கள் மக்களிடையே அமைதியை பாதிப்பதுடன், உலக அளவில் வர்த்தகத்தையும், எரிபொருள் போன்ற முக்கிய பொருட்களின் விநியோகமும் பாதிப்பதாகவும் என அவர் தெரிவித்திருக்கிறார். மேலும் உலக அளவில் பொருளாதாரம் மேம்பட கடல் வழி பாதைகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதை அவர் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து மத்திய கிழக்கு நாடுகள் உலகின் முக்கிய எண்ணெய் மற்றும் வர்த்தக போக்குவரத்து மையமாக இருக்கும் நிலையில் இந்த பாதைகள் முன்பு போல அனைத்து நாடுகளும் பயணிக்க ஏதுவாக திறக்கப்பட்டு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தகாவும் கூறப்படுகிறது.
இந்தியாவின் நிலைப்பாடு?
ஈரான் அதிபருடன் உரையாடலில் ஈரானில் வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தொடர்ந்து உதவும் ஈரான் அரசுக்கும் பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார். இந்த உரையாடலின்போது மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் கவலையளிப்பதாகவும், அங்கு அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடு ன்றும். அதே நேரத்தில் வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களிந் நலனில் இந்தியா கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.