PM Modi On Operation Sindoor : பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்!
Narendra Modi on India Pakistan Ceasefire in Tamil : நான்கு நாட்கள் பதற்றத்திற்குப் பிறகு சனிக்கிழமை இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதன் பின்னர், எல்லையில் பதற்றம் தணிந்தது. இந்நிலையில் இன்று இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி உரையாற்றவுள்ளார்.

இந்தியா-பாகிஸ்தான் பதற்றம் நிலவி வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு பிரதமர் மோடி உரையாற்றும் முதல் நிகழ்ச்சி இதுவாகும். பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிரான பதற்றம் தொடங்கியதிலிருந்து பிரதமர் மோடி தொடர்ந்து தீவிரமாக செயல்பட்டு வருகிறார். சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு, அவர் தொடர்ந்து ஆலோசனை கூட்டங்களை நடத்தி வந்தார். அவர் தொடர்ந்து இராணுவத் தலைவர்கள், CDS, NSA ஆகியோரிடமிருந்து நடவடிக்கைகளை கேட்டறிந்து வருகிறார். நான்கு நாட்கள் பதற்றத்திற்குப் பிறகு, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் சனிக்கிழமை போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதன் பின்னர் எல்லையில் பதற்றம் தணிந்தது. இந்நிலையில் பிரதமர் மோடியின் இன்றைய உரையில் பல விஷயங்கள் பேசப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது
LIVE NEWS & UPDATES
-
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றியே
பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தினால் அது பயங்கரவாதம் குறித்துதான் இருக்கும் என்று பிரதமர் மோடி கூறினார். பாகிஸ்தானுடன்r பேச்சுவார்த்தை நடந்தால், அது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றித்தான் இருக்கும். நாட்டின் ஆயுதப் படைகளுக்கு மீண்டும் ஒருமுறை வணக்கம் செலுத்துகிறேன். நாட்டின் ஒற்றுமைக்கு நான் தலை வணங்குகிறேன்.
-
தண்ணீரும் இரத்தமும் கூட ஒன்றாகப் பாய முடியாது.
பாகிஸ்தான் ராணுவமும் அரசாங்கமும் பயங்கரவாதத்தை வளர்த்து வருகின்றன, அது ஒரு நாள் பாகிஸ்தானையே அழித்துவிடும். பாகிஸ்தான் உயிர்வாழ விரும்பினால், அது பயங்கரவாத உள்கட்டமைப்பை அழிக்க வேண்டும். இதைத் தவிர அமைதிக்கு வேறு வழியில்லை. பயங்கரவாதமும் பேச்சும் ஒன்றாகச் செல்ல முடியாது. பயங்கரவாதமும் வர்த்தகமும் ஒன்றாகச் செல்ல முடியாது. தண்ணீரும் இரத்தமும் கூட ஒன்றாகப் பாய முடியாது.
-
இந்தியாவின் பதிலடி மிக உக்கிரமாக இருக்கும்
இனி இந்தியாவுக்கு எதிராக தாக்குதல் நடத்தும் என்றால் இந்தியாவின் பதிலடி மிக உக்கிரமாக இருக்கும் – பிரதமர் மோடி
-
தற்காலிகமாகவே நிறுத்தப்பட்டுள்ளன
பாகிஸ்தானுக்கு எதிராக தாக்குதல்கள் தற்காலிகமாகவே நிறுத்தப்பட்டுள்ளன முடிவுக்கு வந்துவிடவில்லை – பிரதமர் மோடி
-
பாகிஸ்தானில் பெரிய பாதிப்பு
இந்தியாவின் ஏவுகணைகள் பாகிஸ்தானில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தின. நமது விமானப்படை ராணுவம் கடற்படை எல்லை பாதுகாப்பு படையினர் ஒருங்கிணைந்து தாக்குதல் செய்தனர்
-
பாகிஸ்தான் ராணுவம் முறையிட்டது
இந்தியா தாக்குதலை நிறுத்த வேண்டுமென பாகிஸ்தான் ராணுவம் முறையிட்டது.
-
பாகிஸ்தானில் சுதந்திரம்
பயங்கரவாதத்தின் மூளையாக செயல்பட்டவர்கள் பாகிஸ்தானில் சுதந்திரமாக உலாவினார்கள். நமது நாட்டு கோவில்கள் குருத்துவாரர்கள் மசூதிகள் மீது கூட பாகிஸ்தான் தாக்குதல் நடத்த போராடியது
-
சீட்டுக்கட்டுகளை போல
பாகிஸ்தானின் ட்ரோன்களை சீட்டுக்கட்டுகளை போல இந்தியா பாதுகாப்புப்படை வீழ்த்தியது
-
இந்தியா மீது தாக்குதல்
பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய பாகிஸ்தான். மாறாக இந்தியா மீது தாக்குதல் நடத்தியது – பிரதமர்
-
பயங்கரவாதிகளின் பல்கலைக்கழகம்
இந்த வெற்றி நாட்டின் மகளிருக்கு சமர்ப்பிக்கப்படுகிறது. பாகிஸ்தானின் பகவல்பூர் பயங்கரவாதிகளின் பல்கலைக்கழகமாக உள்ளது.
Published On - May 12,2025 7:22 PM