காதலனுடன் திருமணம் செய்துக்கொண்ட இளம் பெண்.. உருவ பொம்மைக்கு இறுதி சடங்கு செய்த குடும்பத்தினர்!
Parents Did Funeral To Daughters Effigy | இந்தியாவில் இன்றளவும் கூட பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், மத்திய பிரதேசத்தில் வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்துக்கொண்ட இளம் பெண்ணுக்கு அவரது குடும்பத்தினர் இறுதி சடங்கு செய்துள்ளனர்.

இறுதி சடங்கு செய்யப்பட்ட இளம் பெண்
போபால், டிசம்பர் 23 : மத்திய பிரதேச (MP – Madhya Pradesh) மாநிலம், விதிஷா பகுதியை சேர்ந்தவர் 23 வயது இளம் பெண் கவிதா. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு காணாமல் போய்விட்டதாக அவரது குடும்பத்தினர் அருகில் உள்ள பகுதிகளில் தேடியுள்ளனர். இந்த நிலையில் தான், கவிதா தனது வீட்டை விட்டு வெளியேறி, காதலனுடன் ரகசிய திருமணம் செய்துக்கொண்டது குடும்பத்தினர் மற்றும் ஊர் மக்களுக்கு தெரிய வந்துள்ளது. இந்த தகவலை கேட்டு அந்த பெண்ணின் குடும்பத்தினர் கடும் அதிர்ச்சியூட்டும் செயலை செய்துள்ளனர்.
இளம் பெண் இறந்துவிட்டதாக அறிவித்த குடும்பம்
இளம் பெண் தனது காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துக்கொண்ட செய்தி அறிந்து அவரின் குடும்பத்தினர் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். இதன் காரணமாக அவர்கள் அந்த இளம் பெண் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். அதுமட்டுமன்றி, இறந்தவர்களுக்கு இறுதி சடங்கு செய்வதை போலவே அந்த பெண்ணின் உருவ பொம்மைக்கு இறுதி சடங்குகளை செய்துள்ளனர்.
இதையும் படிங்க : கணவனை துண்டு துண்டாக வெட்டி பாலிதீன் பையில் வைத்த மனைவி.. அதிர்ச்சி சம்பவம்!
உருவ பொம்மைக்கு இறுதி சடங்கு செய்த குடும்பம்
இறந்த உடல்களுக்கு இறுதி சடங்கு செய்வதை போலவே அவர்கள் இளம் பெண்ணுக்கு இறுதி சடங்குகளை செய்துள்ளனர். அதற்காக கவிதாவின் உருவத்தில் மாவு பொம்மை ஒன்றை செய்துள்ளனர். அந்த பொம்மையை பாடையில் வைத்து ஊர் முழுவதும் ஊர்வலமாக சென்றுள்ளனர். பின்னர் மயானத்திற்கு சென்ற அவர்கள் அங்கு வைத்தும் அனைத்து சடங்குகளையும் செய்துள்ளனர். பின்னர் கவிதாவின் உருவ பொம்மைக்கு அவர்கள் தீ வைத்து எரித்துள்ளனர்.
இதையும் படிங்க : மாமாவின் கொலைக்கு 18 ஆண்டுகளுக்கு பிறகு பழி தீர்த்த சிறுவன்.. பகீர் சம்பவம்!
கண்ணீருடன் பேசிய கவிதாவின் தந்தை
இது குறித்து கண்ணீருடன் பேசிய கவிதாவின் தந்தை ராம்பாபு குஷ்வாஹா, தனது மகளின் முடிவால் குடும்பம் முற்றிலும் உடைந்துவிட்டது என்றும், இது தனது வாழ்வில் மிக மோசமான மிகவும் வேதனையான தருணம் என்றும் அவர் கூறியுள்ளார். கவிதாவின் குடும்பத்தினர் செய்த இந்த செயலுக்கு பல்வேறு தரப்பிணரும் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.