Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பாகிஸ்தான் 26 இடங்களில் டிரோன் தாக்குதல் – இந்தியா பதிலடி

Pakistani Drones Target 26 Locations : பாகிஸ்தான், மே 9, 2025 அன்று, இந்தியாவின் மேற்குப் பகுதியில் உள்ள 26 இடங்களில் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது. இந்த தாக்குதல்களில் ஜம்மு, பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்கள் பாதிக்கப்பட்டன.

பாகிஸ்தான் 26 இடங்களில் டிரோன் தாக்குதல் – இந்தியா பதிலடி
26 இடங்களில் டிரோன் தாக்குதல்
karthikeyan-s
Karthikeyan S | Updated On: 10 May 2025 00:11 AM

பாகிஸ்தான் மீண்டும் இந்திய எல்லைப் பகுதிகளில் ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளது. ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் உள்ள 26 இடங்களில் ட்ரோன் தாக்குதல்கள் நடந்துள்ளன. இந்த தாக்குதல்களில் சில முக்கிய இடங்களில் இந்திய பாதுகாப்பு படைகள் தாக்குதலை தடுத்து நிறுத்தியுள்ளனர். ஸ்ரீநகர் விமான நிலையம் மற்றும் அவன்டிபோரா விமானப்படை தளத்தில் ட்ரோன் தாக்குதல் முயற்சி நடைபெற்றது. இந்திய பாதுகாப்பு படைகள் இந்த தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுத்தனர். இதனால், பல பகுதிகளில் மின்தடை ஏற்படுத்தப்பட்டு, மக்கள் பாதுகாப்புக்காக வீட்டில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

டிரோன் தாக்குதலில் 3 பேர் காயம்

பாரமுல்லா மாவட்டத்தில் இந்திய படைகள் பாகிஸ்தான் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தினர். ஜம்மு, சம்பா, பாதான்கோட் உள்ளிட்ட பகுதிகளில் ட்ரோன் தாக்குதல் முயற்சிகள் நடைபெற்றுள்ளன. பாதுகாப்பு படைகள் இந்த தாக்குதல்களை தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். பஞ்சாப் மாநிலத்தின் ஃபிரோஸ்பூர் பகுதியில் ஒரு ட்ரோன் தாக்குதலில் ஒரு குடும்பத்தின் மூன்று பேர் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவ சிகிச்சை பெறுகின்றனர். இந்திய பாதுகாப்பு படைகள் எல்லைப் பகுதிகளில் உயர் பாதுகாப்பு நிலையை பராமரித்து வருகின்றனர்.

இந்த தாக்குதல்கள் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான பதற்றத்தை மேலும் அதிகரிக்கின்றன. மக்கள் பாதுகாப்புக்காக வீட்டில் இருக்குமாறு, அவசர நிலை அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.  முன்னதாக ஜம்மு காஷ்மீர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள அனைவரும் அடுத்த சில மணி நேரங்களுக்கு தெருக்களில் நடமாடுவதை தவிர்த்து வீட்டிலேயே இருக்குமாறும், வதந்திகளை தவிர்க்குமாறும் அம்மாநில முதல்வர் ஓமர் அப்துல்லா தெரிவித்தார். 

ஆபரேஷன் சிந்தூர் குறித்து ராணுவ கர்ணல் விளக்கம்

ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் வெளியுறவு அமைச்சக செயலாளர் மற்றும் ராணுவ கர்னல் சோபியா குரேஷி, விமானப்படை விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் கலந்துகொண்டு விளக்கம் அளித்தனர். அப்போது பேசிய கர்னல் சோபியா குரேஷி, போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்தியாவின் 26 ராணுவ நிலைகள் மீது நேற்று பாகிஸ்தான், துருக்கியின் ட்ரோன்களை ஏவி தாக்குதல் நடத்த முயற்சித்தது. இந்தியா வழிமறித்து அவற்றை அழித்தது தனது விமான நிலைகளை பாதுகாக்க, பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்துகிறது பாகிஸ்தான் என்று தெரிவித்திருந்தார்.

பாகிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - பரபரப்பு தகவல்
பாகிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - பரபரப்பு தகவல்...
பாகிஸ்தானுக்கு 1 மில்லியன் டாலர் கடன் வழங்கிய ஐஎம்எஃப்
பாகிஸ்தானுக்கு 1 மில்லியன் டாலர் கடன் வழங்கிய ஐஎம்எஃப்...
பாகிஸ்தான் 26 இடங்களில் டிரோன் தாக்குதல் - இந்தியா பதிலடி
பாகிஸ்தான் 26 இடங்களில் டிரோன் தாக்குதல் - இந்தியா பதிலடி...
ஸ்ரீநகர் விமான நிலையத்திற்கு அருகில் டிரோன் தாக்குதல்
ஸ்ரீநகர் விமான நிலையத்திற்கு அருகில் டிரோன் தாக்குதல்...
விஜய் சேதுபதியின் ஏஸ் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது தெரியுமா?
விஜய் சேதுபதியின் ஏஸ் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது தெரியுமா?...
ஜி.வி. பிரகாஷ்- கயாடு லோஹரின் இம்மோர்டெல் படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக்
ஜி.வி. பிரகாஷ்- கயாடு லோஹரின் இம்மோர்டெல் படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக்...
பருக்கள் இல்லா சருமம் பெற வேம்பு மஞ்சள் சோப்பு தயாரிப்பது எப்படி?
பருக்கள் இல்லா சருமம் பெற வேம்பு மஞ்சள் சோப்பு தயாரிப்பது எப்படி?...
மதுரை சித்திரை திருவிழாவுக்கான சிறப்பு ரயில் அறிவிப்பு...
மதுரை சித்திரை திருவிழாவுக்கான சிறப்பு ரயில் அறிவிப்பு......
இறைச்சியை ஃப்ரிட்ஜில் வைக்கிறீர்களா? இந்த பிரச்னைகள் வரலாம்!
இறைச்சியை ஃப்ரிட்ஜில் வைக்கிறீர்களா? இந்த பிரச்னைகள் வரலாம்!...
தமிழகத்தில் 24 மணி நேரமும் கடை திறக்க அனுமதி..? முக்கிய அறிவிப்பு
தமிழகத்தில் 24 மணி நேரமும் கடை திறக்க அனுமதி..? முக்கிய அறிவிப்பு...
வறண்ட சருமத்திற்கு முல்தானி மட்டி நன்மை தருமா..? நிபுணர் ஆலோசனை.!
வறண்ட சருமத்திற்கு முல்தானி மட்டி நன்மை தருமா..? நிபுணர் ஆலோசனை.!...