Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

சத்தீஸ்கர் துப்பாக்கிச்சூடு: 28 மாவோயிஸ்டுகள் பலி.. நடந்தது என்ன?

Chhattisgarh Naxal Encounter: சத்தீஸ்கரின் நாராயணபூர் காட்டில் நடந்த ஆபரேஷன் ககர் எனும் பெரிய எதிர்கொள்ளலில் 28 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். முக்கிய மாவோயிஸ்ட் தலைவர் நம்பால் கேசவராவும் கொல்லப்பட்டார். இந்த மோதலில் ஒரு ராணுவ வீரர் உயிரிழந்தார், இருவர் காயமடைந்தனர். இந்த நிகழ்வு மாவோயிஸ்ட் இயக்கத்திற்கு பெரும் அடியாக அமைந்துள்ளது.

சத்தீஸ்கர் துப்பாக்கிச்சூடு: 28 மாவோயிஸ்டுகள் பலி.. நடந்தது என்ன?
ஆபரேஷன் காகர் நடவடிக்கையில் 28 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலைImage Source: social media
sivasankari-bose
Sivasankari Bose | Published: 21 May 2025 12:21 PM

சத்தீஸ்கர் மே 21: சத்தீஸ்கரின் நாராயண்பூர் மாவட்டத்தில் (Narayanpur district of Chhattisgarh) பாதுகாப்புப் படையினர் (Security forces) மேற்கொண்ட ‘ஆபரேஷன் காகர்’ (Operation Kagar) என்ற அதிரடி நடவடிக்கையில் 28 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இது மாவோயிஸ்டுகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட மிக முக்கியமான மற்றும் வெற்றிகரமான நடவடிக்கையாகும். ஆபரேஷன் ககர் தீவிரம் அதிகரித்து, சத்தீஸ்கர் நாராயணபூர் காட்டில் பெரிய என்-கௌண்டர் நடந்தது. 2025 மே 21 புதன்கிழமை நடந்த மோதலில் 28 மாவோயிஸ்டுகள் பலியாகியதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒரு ராணுவ வீரர் உயிரிழந்த நிலையில் இருவருக்கு காயங்கள் ஏற்பட்டன. முக்கிய மாவோயிஸ்டுதலைவர் நம்பால் கேசவராவும் (பசவராஜு) உள்பட பலர் உயிரிழந்தனர். அவர் சிறீகாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மற்றும் கட்சியின் மையக் குழு செயலாளர் என தெரிகிறது. இந்த மரணம் கட்சிக்கு பெரிய சிதைவை ஏற்படுத்தியுள்ளது.

ஆபரேஷன் காகர் – பின்னணி

சத்தீஸ்கரின் பஸ்தர் பிராந்தியத்தில், குறிப்பாக நாராயண்பூர் மற்றும் பிஜப்பூர் மாவட்டங்களில் மாவோயிஸ்டுகளின் நடமாட்டம் அதிகமாக இருந்தது. இதனால் அப்பகுதிகளில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதிலும், பொதுமக்களின் பாதுகாப்பிலும் சவால்கள் இருந்து வந்தன. மாவோயிஸ்டுகளின் அச்சுறுத்தலை ஒடுக்கவும், அப்பகுதிகளில் அமைதியை நிலைநாட்டவும் மத்திய மற்றும் மாநிலப் பாதுகாப்புப் படைகள் இணைந்து இந்த ‘ஆபரேஷன் காகர்’ நடவடிக்கையை தொடங்கின.

என்கவுன்டர் விவரங்கள்

நாராயண்பூர் வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், பாதுகாப்புப் படையினர் அப்பகுதியை சுற்றி வளைத்தனர். இருதரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இந்த என்கவுன்டரில் 28 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதில் சில முக்கிய மாவோயிஸ்டு தலைவர்களும் அடங்குவர் என்று பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர். என்கவுன்டர் நடந்த பகுதியிலிருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. சில பாதுகாப்புப் படை வீரர்களுக்கும் காயம் ஏற்பட்டது.

அதிகாரிகளின் கருத்து

இந்த என்கவுன்டர் குறித்து சத்தீஸ்கர் காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், “மாவோயிஸ்ட் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான எங்களின் உறுதியான நடவடிக்கையின் ஒரு பகுதியே இது. ஆபரேஷன் காகர் ஒரு பெரிய வெற்றி. அப்பகுதிகளில் அமைதியையும், பாதுகாப்பையும் நிலைநாட்ட நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம்” என்றார்.

சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் எதிர்ப்பு நடவடிக்கைகள்

சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் தொடர்ந்து தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. புதிய பாதுகாப்பு முகாம்களை அமைப்பது, மாவோயிஸ்ட் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவது மற்றும் மாவோயிஸ்டுகளை சரணடைய ஊக்குவிப்பது போன்ற பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த என்கவுன்டர், மாவோயிஸ்ட் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஒரு திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது.

இந்த வெற்றிகரமான நடவடிக்கை நாராயண்பூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அமைதியை நிலைநாட்ட உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கோடை வெயிலில் குளிர்ச்சி தரும் பானங்கள்.. அழகையும் பராமரிக்கும்!
கோடை வெயிலில் குளிர்ச்சி தரும் பானங்கள்.. அழகையும் பராமரிக்கும்!...
தக் லைஃப் படத்திலிருந்து வெளியானது சுகர் பேபி லிரிக்கள் வீடியோ!
தக் லைஃப் படத்திலிருந்து வெளியானது சுகர் பேபி லிரிக்கள் வீடியோ!...
லண்டனில் இளநீர் விற்பனை செய்யும் இங்கிலாந்தவர் - வைரல் வீடியோ!
லண்டனில் இளநீர் விற்பனை செய்யும் இங்கிலாந்தவர் - வைரல் வீடியோ!...
துபாயில் மர்மமாக மறைந்த நிறுவனம் - பணத்தை இழந்த இந்தியர்கள்
துபாயில் மர்மமாக மறைந்த நிறுவனம் - பணத்தை இழந்த இந்தியர்கள்...
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி எப்போது அறிவிக்கப்படும்?
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி எப்போது அறிவிக்கப்படும்?...
மோகன்லாலின் ஹிருதயப்பூர்வம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ
மோகன்லாலின் ஹிருதயப்பூர்வம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ...
Weak Password-களை இனி கூகுளே மாற்றிவிடும் - எப்படி தெரியுமா?
Weak Password-களை இனி கூகுளே மாற்றிவிடும் - எப்படி தெரியுமா?...
சந்திர மங்கள யோகம்.. இந்த 6 ராசிக்கு செல்வம் பெருகும்
சந்திர மங்கள யோகம்.. இந்த 6 ராசிக்கு செல்வம் பெருகும்...
பாகிஸ்தானுக்கு உளவு பார்ந்த இந்திய பெண் - வாட்ஸ்அப் சாட் வெளியீடு
பாகிஸ்தானுக்கு உளவு பார்ந்த இந்திய பெண் - வாட்ஸ்அப் சாட் வெளியீடு...
அடையாறு ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்! மாற்றாக இலவச வீடு..!
அடையாறு ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்! மாற்றாக இலவச வீடு..!...
தீராத நோயும் தீரும்..ஏரல் சேர்மன் அருணாச்சலம் கோயிலின் சிறப்புகள்
தீராத நோயும் தீரும்..ஏரல் சேர்மன் அருணாச்சலம் கோயிலின் சிறப்புகள்...