Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

வெள்ளத்தால் தத்தளிக்கும் வடகிழக்கு மாநிலங்கள்.. 30-ஐ தாண்டிய பலி எண்ணிக்கை.. மீட்பு பணிகள் தீவிரம்!

Northeast Floods : வடகிழக்கு மாநிலங்களில் பெய்த கனமழையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது. அசாம், சிக்கிம், அருணாச்சல பிரசேதம் ஆகிய மாநிலங்களில் கனமழையால் 34 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், மணிப்பூர் மாநிலம் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகிறது.

வெள்ளத்தால் தத்தளிக்கும் வடகிழக்கு மாநிலங்கள்.. 30-ஐ தாண்டிய பலி எண்ணிக்கை.. மீட்பு பணிகள் தீவிரம்!
கனமழையால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு மாநிலங்கள்Image Source: PTI
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 02 Jun 2025 10:05 AM IST

அசாம்,  ஜூன் 02 :  வடகிழக்கு மாநிலங்களில்  இரண்டு நாட்கள்  தொடர்ந்து பெய்த கனமழையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.  நிலச்சரிவு, வெள்ளம் காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் தொடர்ந்து மீட்பு பணிகளும் நடந்து வருகிறது. 2025 மே 24ஆம் தேதி கேளராவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. அடுத்த சில நாட்களில் தென் மாநிலங்கள் முழுவதும் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இந்த பருவமழையின் தாக்கதால் டெல்லி, மும்பை, கேரளா மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் பலத்த மழை பெய்தது. குறிப்பபாக, வடகிழக்கு மாநிலங்களில் இரண்டு நாட்கள் தொடர்ந்து பலத்த மழை பெய்தது ஒட்டுமொத்த மாநிலங்களும் ஸ்தம்பித்தது.

34 ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை

நியூஸ் 18 தகவலின்படி,  தொடர் மழையால் வடகிழக்கு மாநிலங்களில்  உயிரிழந்தோர் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது. குறிப்பாக, அசாம், மணிப்பூர், திரிபுரா, சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்தது. இதனால், பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து துண்டிக்கப்பட்டு, பொதுமக்களின் இயல்பை வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

அசாம் மாநிலத்தில் 67 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பெய்தது. அசாமில் தொடர் கனமழையால், பிரம்மபுத்திர உள்ளிட்ட 10 முக்கிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், பல இடங்களில் வெள்ளப்பெருக்கும், நிலச்சரிவு ஏற்பட்டது. அசாமில் 19 மாவட்டங்களில் 764 கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

இதனால் 3.6 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது அவர்கள் அனைவரும் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மீட்பு பணிகள் நடந்து வருகிறது. அசாமில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

காம்ரூப் மாவட்டத்தில் நிலச்சரிவில் சிக்க 5 பேரும், வெள்ளம் தொடர்பான விபத்துகளில் சிக்கி 3 பேரும் உயிரிழந்துள்ளனர். மணிப்பூரிலும் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் 19,811 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நிலச்சரிவுகளால் 3,365 வீடுகள் சேதம் அடைந்துள்ளன.

நிவாரணம் அறிவிப்பு


வடக்கு சிக்கிமில் 1,200க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் சிக்கித் தவித்து வருகின்றனர். மேகாலயாவில் 10 மாவட்டங்கள் திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ளன. திரிபுராவில் 10,000க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். அருணாச்சல பிரதேசத்தில் நிலச்சரிவில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர்.

அருணாச்சல பிரசேதத்தில் நிலச்சரிவில் சிக்கி 9 பேர் உயிரிழந்த நிலையில், அவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது. இதற்கிடையில், அசாம், சிக்கிம் மற்றும் அருணாச்சலப் பிரதேச முதலமைச்சர்களுடனும், மணிப்பூர் ஆளுநருடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அப்போது, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனைத்து உதவிகளையும் செய்வதாக அவர் உறுதியளித்தார்.