மும்பையில் விநாயகரச் சதுர்த்தி கொண்டாட்டம்…ரூ.474 கோடிக்கு இன்சூரன்ஸ் பாதுகாப்பு

Ganesh Chaturthi: இந்தியாவில் குறிப்பாக வட மாநிலங்களில் விநாயகர் சதுர்த்தி ஒருவாரம் முதல் 10 நாள் நிகழ்வாக வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள ஒரு பகுதியில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்துக்கு ரூ.474 கோடிக்கு இன்சூரன்ஸ் செய்யப்பட்டிருக்கிறது.

மும்பையில் விநாயகரச் சதுர்த்தி கொண்டாட்டம்...ரூ.474 கோடிக்கு இன்சூரன்ஸ் பாதுகாப்பு

விநாயகர் சிலை

Updated On: 

21 Aug 2025 16:30 PM

இந்தியாவில் விநாயகர் சதுர்த்தி (Ganesh Chaturthi)ஆகஸ்ட் 21, 2025 அன்று புதன் கிழமை கொண்டாடப்படவிருக்கிறது. இந்த நிகழ்வு ஒரு வாரம் முதல் 10 நாட்கள் நிகழ்வாக நடைபெறும். குறிப்பாக வட இந்தியாவில் இந்த நிகழ்வு வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இதன் ஒரு பகுதியாக மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையில் கிங்ஸ் சர்க்கிள் ஜிஎஸ்பி சேவா மண்டலம் மிகவும் செழிப்பான கணேஷ மண்டலமாக அறியப்படுகிறது. இந்த நிலையில் அப்பகுதி விநாயகர் சதுர்த்தியை முன்னி்டடு ரூ.474.46 கோடி மதிப்பில் காப்பீடு பெறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ரூ.400 கோடி காப்பீடு பெறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த காப்பீடு அப்பகுதியில் நடைபெறும் ஒட்டுமொத்த நிகழ்வையும் பாதுகாப்பதற்காக எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

கணேஷ மண்டலம் என்றால் என்ன?

இந்தியாவின் ஒவ்வொரு ஆண்டும் குறிப்பாக மகாராஷ்டிரா, மும்பை போன்ற இடங்களில் விநாயகர் சதுர்த்தி, மிகப்பெரிய திருவிழாவாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த விழாவில் பக்தர்கள் ஒன்று கூடி விநாயகர் சிலைையை நிறுவி ஒருவாரம் அல்லது 10 நாட்கள் வரை வழிபாடு நடத்துவர். மேலும் சிறப்பு நிகழ்ச்சிகளும் நடைபெறும். இப்படி இவர்கள் குழுவாக இணைந்து நடத்தும் அமைப்பே கணேஷ மண்டலமாக அழைக்கப்படுகிறது. இதில் மும்பையில் உள்ள கிங்ஸ் சர்க்கிள் ஜிஎஸ்பி சேவா மண்டலம் மிகவும் செழிப்பான கணேஷ மண்டலமாக பிரபலமாகியிருக்கிறது.

இதையும் படிக்க : ஆத்தாடி.. திருப்பதி ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்கம் வழங்கிய பக்தர்!

கணேஷ மண்டலத்திற்கு காப்பீடு யாருக்கு பலன் கிடைக்கும்?

இந்த கணேஷ் மண்டலத்திற்கான காப்பீடை நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம் ரூ.474.46 கோடி மதிப்பில் வழங்கியுள்ளது. இதில் தங்கம், வெள்ளி என விலைமதிப்புள்ள பொருட்கள் மட்டுமல்லாமல், தீ விபத்து, நிலநடுக்கும் உள்ளிட்டவற்றால் ஏற்படும் அபாயம், தனிப்பட்ட விபத்து காப்பீடு, ஆகியவை அடங்கும்.

இதில் ரூ. 375 கோடி நிகழ்வில் பங்கேற்கும் தன்னார்வலர்கள், பூசாரிகள், சமையல் கலைஞர்கள், உதவியாளர்கள், பாதுகாப்பு பணியாளர்கள் ஆகியோருக்கான தனிப்பட்ட விபத்து காப்பீடாக வழங்கப்படுகிறது. மேலும் ரூ.30 கோடி காப்பீடுகள், மைதானங்கள் மற்றும் பக்தர்களுக்காக வழங்கப்படுகிறது. மதொடர்ந்து ரூ.47.3 கோடிக்கான காப்பீடு தீ விபத்து போன்ற எதிர்பாராத நிகழ்வுகளுக்காக வழங்கப்படும்.  இந்த ஆண்டு நகைகளுக்கான காப்பீடு ரூ. 67 கோடியாக நிர்ணியக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : புலிகள் நிறைந்த நடுக்காட்டுப் பகுதியில் சிக்கிய சுற்றுலாப் பயணிகள் – திகில் சம்பவம்!

இங்கு ஜிஎஸ்பி சேவா மண்டலத்தில் 5 நாள் விழாவாக ஆகஸ்ட் 27 முதல் ஆகஸ்ட் 31, 2025 வரை நடைபெறவுள்ளது. இந்த முறை பக்தர்களுக்கு தண்ணீர், உணவு என கூடுதல் வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த தனியார் அமைப்புகள் பங்கேற்களவுள்ளதாகவும் கூறப்படுகிறது.