தண்ணீர் என நினைத்து ஆசிட் ஊற்றி சமைத்த பெண்.. மருத்துவமனையில் உயிருக்கு போராடும் குடும்பம்!
Midnapore Acid Food Poisoning | மேற்கு வங்கத்தில் வெள்ளி பட்டரைக்கு பயன்படுத்தப்படும் ஆசிட் வீட்டில் வைக்கப்பட்டு இருந்த நிலையில் அதனை தண்ணீர் என நினைத்து பெண் ஒருவர் சமைத்துள்ளார். அந்த உணவை சாப்பிட்ட 6 பேர் தற்போது மருத்துவமனையில் உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கின்றனர்.

மாதிரி புகைப்படம்
மிட்னாபூர், நவம்பர் 26 : மேற்கு வங்க (West Bengal) மாநிலம், மிட்னாபூர் மாவட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தண்ணீர் என நினைத்து ஆசிட் கொண்டு சமைக்கப்பட்ட உணவை சாப்பிட்ட நிலையில், உடல்நல குறைபாடு ஏற்பட்டு அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்த உணவை சாப்பிட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 6 பேரில் மூன்று பேர் பெரியவர்கள் என்பதும், மூன்று பேர் குழந்தைகள் என்பது தெரிய வந்துள்ளது.
தண்ணீர் என நினைத்து ஆசிட் ஊற்றி சமைத்ததால் வந்த சிக்கல்
சாந்து என்ற நபரின் வீட்டில் தான் ஒந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அவர் வெள்ளி நகைகளை செய்யும் தொழில் செய்து வருகிறார். பொதுவாக வெள்ளி பட்டரைகளில் சில ஆசிட்கள் பயன்படுத்தப்படும். அவ்வாறு வெள்ளி பட்டரைக்காக வைக்கப்பட்டு இருந்த அசிட்டை எடுத்து அந்த வீட்டில் சமையல் செய்த பெண் தண்ணீர் என நினைத்து சமைத்துள்ளார். வழக்கமாக தண்ணீர் வைக்கப்படும் பாத்திரத்தில் அந்த ஆசிட் வைக்கப்பட்டு இருந்த நிலையில் அதனை தண்ணீர் என நினைத்து அந்த பெண் சமையலில் பயன்படுத்தியுள்ளார்.
இதையும் படிங்க : அயோத்தி ராமர் கோவிலில் காவிக்கொடி ஏற்றினார் பிரதமர் மோடி!
மதிய உணவுக்கு பிறகு ஏற்பட்ட உடல் உபாதைகள்
அந்த குடுமப்த்தில் இருந்த 6 பேர் ஆசிட் கலந்து செய்யப்பட்ட அந்த மதிய உணவை சாப்பிட்டுள்ளனர். அதற்கு பிறகு அவர்களுக்கு உடல் உபாதைகள் ஏற்பட தொடங்கியுள்ளது. வயிறு வலி, வாய்ந்தி, மயக்கம் உள்ளிட்ட பிரச்னைகளை அவர்கள் எதிர்க்கொண்ட நிலையில், உடனடியாக அருகில் உள்ள கடால் மருத்துவமனையில் அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு மருத்துவர்கள அவர்களுக்கு அவசர சிகிச்சை வழங்கியுள்ளனர்.
இதையும் படிங்க : கும்மிருட்டாக மாறப்போகும் இந்தியா.. வேகமாக வரும் எரிமலை சாம்பல்.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
உயர் சிகிச்சைக்காக கொல்கத்த அனுப்பி வைக்கப்பட்ட குடும்பத்தினர்
இந்த நிலையில் இந்த பிரச்னையின் தீவிரத்தை உணர்ந்த மருத்துவர்கள் அவர்கள் ஆறு பேரையும் உயர் சிகிச்சைக்காக கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர்களின் உடல்நிலை எப்படி உள்ளது என்பது குறித்த எந்த வித தகவலும் வெளி வராமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.