கல்யாண விருந்தில் களேபரம்.. சிக்கன் 65 தராததால் ஆத்திரம்.. இளைஞர் படுகொலை!

Karnataka Crime News : கர்நாடகாவில் திருமண விருந்தில் சிக்கன் 65 கூடுதலாக தராததால் ஏற்பட்ட பிரச்னையில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தின்போது, அனைவரும் மதுபோதையில் இருந்துள்ளதாக போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.

கல்யாண விருந்தில் களேபரம்.. சிக்கன் 65 தராததால் ஆத்திரம்.. இளைஞர் படுகொலை!

கொலை செய்யப்பட்ட நபர்

Updated On: 

15 Jul 2025 10:17 AM

கர்நாடக, ஜூலை 15 :  கர்நாடாவில் நடந்த  திருமண விழாவில் சிக்கன் 65 தராததால், இளைஞர் ஒருவர் கொலை (Karnataka Murder) செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிக்கன் 65 கேட்டதால், ஏற்பட்ட தகராறில், இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. கர்நாடகாவின் பெலகாவி மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. யாரகட்டி தாலுகாவைச் சேர்ந்த வினோத் மலலெட்டி. இவர் 2025 ஜூலை 13ஆம் தேதி தனது நண்பர் அபிஷேக் கொப்பாட்டின் திருமண கொண்டாட்டத்திற்கு சென்றிருக்கிறார். அபிஷேக்கின் பண்ணை வீட்டில் இரவு விருந்து அளிக்கப்பட்டது. அப்போது, இந்த விருந்தில் வினோத் அமர்ந்திருந்தார். அப்போது, உணவு பரிமாறும் நபரான விட்டல் என்பவரிடம் சிக்கன் 65 வினோத் கேட்டதாக தெரிகிறது. இதனை அடுத்து, விட்டலும், வினோத்திற்கு சிக்கன் 65 வைத்துள்ளதாக தெரிகிறது. அதன்பிறகு, மீண்டும் சிக்கன் 65 கேட்டிருக்கிறார்.

சிக்கன் 65 தராததால் ஆத்திரம்

தனக்கு குறைவாக வைத்ததாகவும், மேலும் சிக்கன் 65 வைக்க வேண்டும் என வினோத் கூறியிருக்கிறார். ஆனால், இதற்கு விட்டல் ஏற்கனவே வைத்து விட்டதாக கூறியிருக்கிறார். இதனால், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் நீடித்த நிலையில், ஆத்திரததில் விட்டல், வெங்காயம் நறுக்கப் பயன்படுத்தப்படும் கத்தியால் வினோத்தை குத்தி உள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் வினோத் சரிந்தார்.

Also Read : பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை செய்த கொடூர தந்தை.. அதிர்ச்சி சம்பவம்!

இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் கிடந்த வினோத்தின்  உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

இளைஞர் படுகொலை

இதுகுறித்து பேசிய பெலகாவி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பீமாசங்கர் குலேட், “சிக்கன் 65 கூடுதலாக கேட்டதால் ஏற்பட்ட பிரச்னை கொலையில் முடிந்துள்ளது. கொலை நடந்தபோது அனைவரும் குடிபோதையில் இருந்தனர். குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டார்” என கூறினார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக, 2025 மே மாதத்தில் கேரளாவில் ஹோட்டலில் பரோட்டா விற்று தீர்ந்துவிட்டதாக கூறியதால், ஹோட்டல் உரிமையாளரை இரண்டு பேர் தாக்கினர். அதைத் தொடர்ந்து , 2025 ஜூலை மாதத்தில் பெங்களூருவில் கூடுதல் கப் காஃபி கேட்டதால், கடை உரிமையாளரை கும்பல் சரமாரியாக தாக்கி உள்ளார்.

Also Read : கடனாக கொடுத்த ரூ.2,000 பணத்தை திருப்பி கேட்டதால் ஆத்திரம்.. இளைஞர் குத்தி படுகொலை!

நான்கு பேர் கொண்ட கும்பல் ஏற்கனவே காஃபி வாங்கி குடித்துள்ளனர். பின்னர், கூடுதலாக மற்றொரு கப் காஃபி கேட்டுள்ளனர். இதனால், ஏற்பட்ட பிரச்னையில் காஃபி கடை உரிமையாளரை தாக்கியது தெரியவந்துள்ளது.