லிவ் இன் பார்ட்னரை கொலை செய்து இரும்பு பெட்டியில் வைத்து எரித்த நபர்.. உ.பியில் பகீர் சம்பவம்!

UP Man Killed Live In Partner | உத்தர பிரதேசத்தில் உள்ள ஜான்சி பகுதியில், ராம் சிங் என்பவர் தனது லிவ் இன் பார்ட்னரை கொலை செய்து அவரின் உடல் பாகங்களை இரும்பு பெட்டியில் வைத்து எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லிவ் இன் பார்ட்னரை கொலை செய்து இரும்பு பெட்டியில் வைத்து எரித்த நபர்.. உ.பியில் பகீர் சம்பவம்!

இடது பக்கத்தில் இருப்பவர் கொலை செய்யப்பட்ட பெண் வலது பக்கத்தில் இருப்பவர் கொலை செய்த நபர்

Published: 

19 Jan 2026 13:09 PM

 IST

ஜான்சி, ஜனவாரி 19 : உத்தர பிரதேச (UP – Uttar Pradesh) மாநிலம், ஜான்சி பகுதியில் லிவ் இன் பார்ட்னரை (Live In Partner) கொலை செய்த நபர், அவரை இரும்பு பெட்டியில் வைத்து எரித்த சமபவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லிவ் இன் பார்ட்னரை இரும்பு பெட்டியில் வைத்து எரித்த அவர், அது வெளியே தெரியாமல் இருக்க அந்த பெட்டியை தனது இரண்டாவது மனைவி வீட்டுக்கு அனுப்பி வைக்க முயற்சி செய்துள்ளார். அப்போது தான் அந்த நபர் கையும், களவுமாக சிக்கியுள்ளார். இது தொடர்பாக போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பல பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த கொடூர சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

லிவ் இன் பார்ட்னரை கொலை செய்த நபர்

ராம் சிங் பரிஹார் என்பவர் இரண்டு மனைவிகளுடன் வசித்து வந்துள்ளார். இது தவிர அவர் வேறு ஒரு பெண்ணுடன் லிவ் இன் உறவில் இருந்துள்ளார். இந்த நிலையில், அந்த பெண்ணை கொலை செய்த ராம் சிங் அவரது உடல் பாகங்களை இரும்பு பெட்டியில் வைத்து எரித்துள்ளார். பிறகு உடலை எரித்த சாம்பலை சாக்கு மூட்டையில் போட்டு அருகில் உள்ள ஏரியில் வீசியுள்ளார். இந்த நிலையில், கொலை செய்த பெண்ணின் உடல் பாகங்களை இரும்பு பெட்டியில் போட்டு தனது இரண்டாவது மனைவி கீதா வீட்டுற்கு அனுப்ப முயற்சி செய்தபோது கையும், களவுமாக சிக்கியுள்ளார்.

இதையும் படிங்க : பட்டத்தின் மாஞ்சா நூல் கழுத்தை அறுத்து சிறுவன் பரிதாப பலி.. குஜராத்தில் சோக சம்பவம்!

டிரக் ஓட்டுநர் சந்தேகத்தால் வெளிவந்த உண்மை

தான் திட்டமிட்டபடியே அந்த இரும்பு பெட்டியை தனது இரண்டாவது மனைவியின் வீட்டுக்கு அனுப்புவதற்கான பணிகளை செய்துள்ளார். அதாவது ஜனவரி 16, 2026 அன்று தனது இரண்டாவது மனைவியின் மகனை வரவழைத்து ஒரு டிரக் வாகனத்தை புக் செய்து அதில் அந்த இரும்பு பெட்டியை ஏற்றி அனுப்பியுள்ளார். ஆனால், அந்த பெட்டியில் ஏதோ மர்மம் இருப்பதாக அந்த டிரக் டிரைவர் கணித்துள்ளார்.

இதையும் படிங்க : ஏர் இந்தியா விமான விபத்து.. விமானியை விசாரணைக்கு அழைத்த AAIB.. எதிர்க்கும் FIP.. ஏன்?

உடனடியாக அவர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த பெட்டியை சோதனை செய்தபோது அதில் மனித உடல் பாகங்கள், எலும்புகள் மற்றும் சாம்பல் இருந்ததை கண்டு கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். இது தொடர்பாக போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்ட நிலையில், தனது லிவ் இன் பார்டனர் தன்னிடம் அதிக பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்ததாகவும், இதற்கு முன்பு பல லட்சம் பணம் கொடுத்துள்ளதாகவும், தொடர்ந்து பணம் கேட்டதால் கொலை செய்தேன் என்று பகீர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஆதார் அட்டைதாரர்களே.. இந்தத் தவறுகள் உங்கள் வங்கிக் கணக்கை காலி செய்துவிடும்.. அரசு எச்சரிக்கை!!
ரூ.1 லட்சத்தில் மின்சார ஜீப்…100 கி.மீட்டர் பயணம்..பீகார் இளைஞரின் புதுமை!
"பாட்டி.. மொத்த சமோசாவும் காலி".. ராணுவ வீரர்களின் செயலால் நெகிழ்ந்த நெட்டிசன்கள்!!
‘கழுத்தை அறுத்த சீன மாஞ்சா கயிறு’.. உயிர்தப்பிய மதபோதகர்..