என்ன பார்த்தா சிரிக்கிற.. கடை உரிமையாளர்களை கத்தியால் சரமாரியாக தாக்கிய நபர்.. ஷாக் சம்பவம்!
Man Attacked Shop Owners Brutally | மும்பையில் சகோதரர்கள் இருவர் கடை நடத்தில் வரும் நிலையில், அவர்கள் சிரித்து பேசிக்கொண்டு இருந்தபோது கடைக்கு வந்த நபர் ஒருவர் தன்னை குறித்து தான் பேசுகிறார்கள் என நினைத்து அவர்களை கத்தியால் வெட்டியுள்ளார்.

தாக்குதல் நடத்திய நபர்
மும்பை, மே 01 : மராட்டிய (Maharashtra) மாநிலம், மும்பை (Mumbai) நகரில், அக்ரிபாத் என்ற பகுதியில் பேபி கார்டன் என்ற இடத்தில் சகோதரர்கள் இருவர் இணைந்து கடை ஒன்றை நடத்தி வந்துள்ளனர். இந்த நிலையில், சகோதரர்கள் இருவரும் கடைடியின் முன்பு நின்றுக்கொண்டு உரையாடிக்கொண்டு இருந்துள்ளனர். அவர்கள் இருவரும் சத்தமாக பேசிக்கொண்டும், சிரித்துக்கொண்டும் இருந்துள்ளனர். இதனை தவறாக புரிந்துக்கொண்ட வாடிக்கையாளர் ஒருவர் சகோதரர்களை கத்தியால் வெட்டிய அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
சிரித்து பேசியதை தவறாக புரிந்துக்கொண்ட நபர்
அதாவது, சகோதரர்கள் இருவரும் பேசிக்கொண்டு இருந்த நிலையில், பிரோஸ் மன்சூரி என்ற நபர் கடைக்கு வந்துள்ளார். அப்போதும் சகோதரர்கள் பேச்சை நிறுத்தாமல், சிரித்தபடி உரையாடிக்கொண்டு இருந்துள்ளனர். இதனை கண்ட பிரோஸ், சகோதரர்கள் இருவரும் தன்னை பார்த்து தான் சிரிக்கின்றனர் என்று தவறாக புரிந்துக்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க : “பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு இனி எதிர்காலம் இல்லை!”.. பசுமைப் புரட்சியை நோக்கி நிதின் கட்கரி அதிரடி!!
கத்தியை எடுத்து சரமாரி தாக்குதல் நடத்திய பிரோஸ்
சகோதரர்கள் சிரித்து பேசியதை தவறாக புரிந்துக்கொண்ட பிரோஸ் ஒரு கட்டத்தில் ஆத்திரத்தின் உச்சிக்கு சென்றுள்ளார். இந்த நிலையில், தனது பையில் இருந்த பெரிய கத்தியை எடுத்து சகோதரர்களை அவர் சரமாரியாக தாக்க தொடங்கியுள்ளார். இதில் சகோதரர்களுக்கு கை, கால், உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க : தேர்தலுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படுமா? பெட்ரோலியத்துறை அமைச்சகம் விளக்கம்
குற்றவாளியை கைது செய்த போலீசார்
கத்தியால் வெட்டப்பட்டு பலத்த காயமடைந்து வலியால் துடித்த சகோதரர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து பொதுமக்களின் அளித்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்ட போலீசார், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
வழக்குப்பதிவு செய்து விசாரணை
பின்னர் ஒருசில மணி நேரங்களிலேயே பிரோஸை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்ற போலீசார், இந்த விவகாரம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.