குருவாயூர் கோவில் குளத்தில் கால் நனைத்த பிக்பாஸ் பிரபலத்தால் சர்ச்சை… புனிதத்தை மீட்டெடுக்க பரிகார பூஜைகள் ஏற்பாடு
Guruvayur temple : கேரளாவில் உள்ள புகழ்பெற்ற புனிதத்தலமான குருவாயூர் கோவில் குளத்தில் யூடியூபர், கால் நனைத்து ரீல்ஸ் வீடியோ பகிர்ந்தார். இந்த நிலையில் இதற்கு எதிர்ப்புகள் எழுந்த நிலையில், குளத்தின் புனிதத் தன்மையை மீட்டெடுக்க பரிகார பூஜைகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குருவாயூர் கோவில் குளத்தில் கால் நனைத்த யூடியூபர்
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், யூடியூபர் ஜாஸ்மின் ஜாஃபர் தனது கால்களை கோயிலின் குளக்தில் கால்களை கழுவுவது போல ரீல்ஸ் வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் (Instagram) பகிர்ந்திருந்தார். இதனால் இந்த கோவிலின் புனித தன்மை கெட்டுவிட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதனையடுத்து கோவில் குளத்தின் புனிதத் தன்மை மீட்டெடுக்க பரிகாரம் செய்யப்படும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் ஆகஸ்ட் 26, 2025 அன்று பரிகாரம் செய்யப்படுவதாகவும் பரிகாரம் முடிவடையும் வரை பக்கர்கள் சாமி தரிசன் செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நாடு முழுதவும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
குருவாயூர் கோவிலில் ரீல்ஸ் எடுத்த யூடியூபரால் சர்ச்சை
கேரளா மாநிலத்தில் உள்ள மிகவும் புகழ்பெற்ற புனிதத்தலமான குருவாயூர் கோவிலில் பிரபல யூடியூபரும் பிக்பாஸ் போட்டியாளருமான ஜாஸ்மின் ஜாஃபர் வந்திருந்தார். அப்போது அவர் கோவிலின் குளத்தில் கால் நனைப்பது போல ரீல்ஸ் வீடியோ எடுத்திருந்தார். இதனை அவர் தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார். இந்த நிலையில் அவர் ஹிந்து இல்லை என்பதால் அவரது செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதனையடுத்து ஜாஸ்மீன் ஜாஃபர் தனது சமூக வலைதளப் பக்கங்களில் இருந்து அந்த வீடியோவை நீக்கினார். மேலும் தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டு பதிவிட்டிருந்தார்.
இதையும் படிக்க : தேர்வு எழுத சென்ற பெண்.. அழுத குழந்தை.. தாய்ப்பால் கொடுத்த பெண் காவலர்!
இருப்பினும் கோவில் குளத்தின் புனிதத் தன்மை கெட்டுவிட்டதாக பலரும் கோவில் நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தினர். இதனையடுத்து கோவில் குளத்தின் புனிதத் தன்மையை மீட்டெடுப்பதற்காக ஆகஸ்ட் 26, 2025 அன்று காலை முதல் மாலை 5 மணி வரை பரிகார பூஜைகள் நடைபெறும் என்றும், அதுவரை பக்தர்கள் பங்கேற்க அனுமதி மறுக்கப்படுவதாகவும் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
6 நாட்கள் நடைபறும் பரிகார பூஜைகள்
இதுகுறித்து கோவில் அதிகாரிகள் தெரிவித்ததாவது, கோவிலில் இதற்கான பூஜைகள் தொடர்ந்து ஆறு நாட்கள் நடைபெறும். இதில் 18 வகையான பூஜைகள் நடைபெறும். இதனால் பூஜைகள் நடைபெறும் குறிப்பிட்ட நேரத்தில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் கோவிலின் தேவஸ்தான நிர்வாகி அருண்குமார், இது தொடர்பாக கோவில், ஜாஸ்மின் கோவிலின் புனிதத்தை பால்படுத்தியதாகவும், கோவில் வளாகத்தில் விதிகளை மீறி போட்டோ மற்றும் வீடியோ எடுத்ததாகவும் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். இதன் பேரில் விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதையும் படிக்க : மும்பையில் விநாயகரச் சதுர்த்தி கொண்டாட்டம்…ரூ.474 கோடிக்கு இன்சூரன்ஸ் பாதுகாப்பு
ஜாஸ்மின் ஜாஃபர் கடந்த ஆறு நாட்களுக்கு முன் இந்த வீடியோவை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் அவரது செயலுக்கு தொடர்ந்து எதிர்ப்புகள் வரவே உடனடியாக அந்த வீடியோவை நீக்கினார். பின்னர், கோவில் கட்டுப்பாடுகள் குறித்து தனக்கு தெரியாது எனவும் மன்னிப்பு கேட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.