பயணிகளின் பாதுகாப்பு.. ரயில்களில் வரும் பெரிய மாற்றம்.. ரயில்வே எடுத்த முடிவு!
Indian Railway To Instal CCTV Cameras In Coach : பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, வரும் நாட்களில் அனைத்து ரயில்களிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட உள்ளது. சுமார் 75,000 பயணிகளின் பெட்டிகளில் கதவுகளுக்கு அருகே சிசிடிவி கேமரா பொருத்த ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இந்தியன் ரயில்வே
டெல்லி, ஜூலை 13 : அனைத்து பயணிகளில் ரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமராக்களை நிறுவ ரயில்வே நிர்வாகம் (Indian Railway) முடிவு எடுத்துள்ளது. பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, ரயில்வே நிர்வாகம் இந்த முடிவை எடுக்கிறது. கிட்டதட்ட 74,000 ரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்த ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஒப்புதல் அளித்துள்ளார். அனைத்து ரயில் பெட்டிகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படுவது பயணிகளின் பாதுகாப்பை கணிசமாக மேம்படுத்துவதோடு, கொள்ளை போன்ற சம்பவங்கள் நடைபெறால் தடுக்க உதவும் என ரயில்வே அதிகாரி கூறியுள்ளார். 2025 ஜூலை 12ஆம் தேதி ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், ரயில்வே இணை அமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டு மற்றும் ரயில்வே வாரிய அதிகாரிகள் ஆகியோர் ஆலோசனை நடத்தினர். அப்போது, சிசிடிவி கேமராக்களின் சோதனைகள் மற்றும் என்ஜின்களை ஆய்வு செய்துள்ளனர்.
74,000 ரயில் பெட்டிகளில் சிசிடிவி
அப்போது, 74,000 ரயில் பெட்டிகளிலும், 15,000 லோகோமோடிவ்களிலும் சிசிடிவி மேகராவை பொருத்த ஒப்புதல் அளித்துள்ளார். இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், ஒவ்வொரு ரயில் பெட்டியிலும் நான்கு டோம் வகை சிசிடிவி கேமராக்களை பொருத்தப்படும். ஒவ்வொரு பெட்டியின் நுழைவு வாயிலில் ஒரு சிசிடிவி மேகராவும், ஒவ்வொரு இன்ஜினிலும் ஆறு சிசிடிவ கேமராவும் பொருத்தப்படும். இதில் இன்ஜினின் முன், பின்புறம் மற்றும் இருபுறமும் தலா ஒரு கேமரா இருக்கும். ஒரு லோகோமோட்டிவின் ஒவ்வொரு கேபிலும் (முன் மற்றும் பின்புறம்) ஒரு டோம் சிசிடிவி கேமரா பொருத்தப்படும்” என கூறினார்.
Also Read : முன்பதிவு செய்த டிக்கெட்டின் பெயரை மாற்ற முடியுமா? ஆன்லைனில் எப்படி மாற்றுவது?
மணிக்கு 100 கிமீ வேகத்திற்கும் அதிகமான வேகத்தில் ஓடும் ரயில்களிலும், குறைந்த வெளிச்சத்திலும் இயங்கும் ரயில்களிலும் உயர்தர காட்சிகள் கிடைப்பதை உறுதி செய்யுமாறு ரயில்வே அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். சிசிடிவி கேமராக்களில் ஏஐ பயன்பாடு குறித்து ஆய்வு செய்யவும் உத்தரவிட்டார்.
ரயில்வே எடுத்த முடிவு
பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதே ரயில் பெட்டிகளின் பொதுவான இயக்கப் பகுதிகளில் கேமராக்களை பொருத்துவதன் நோக்கமாகும் என அவர் தெரிவித்தார். அதே வேளையில், குற்றவாளிகளை அடையாளம் காண இந்த கேமராக்கள் உதவும் என தெரிவித்தார்.
Also Read : ரயில் பயணம் திருப்திகரமாக இல்லையா? கட்டணத்தை திரும்ப பெறலாம் – எப்படி தெரியுமா?
இந்திய ரயில்வேயின் நவீனமயமாக்கல் முயற்சிகள், பாதுகாப்பான, மற்றும் பயணிகளுக்கு ஏற்ற பயண அனுபவத்தை வழங்கும் என அதிகாரி கூறினார். இந்திய ரயில்வே துறையை நவீனப்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. பல்வேறு அதிவேக ரயில்களையும் அறிமுகப்படுத்தியும், ரயில் நிலையங்களை நவீனப்படுத்தியும் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.