Harsh Goenka’s Viral Toast: தொழிலதிபர் ஹர்ஷ் கோயங்காவின் டோஸ்ட்டில் பிரபலத்தின் முகம்.. சமூக வலைதள பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவு!

Harsh Goenka Social Media Post: இந்திய தொழிலதிபர் ஹர்ஷ் கோயங்கா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட டோஸ்ட் புகைப்படம் வைரலாகி வருகிறது. டோஸ்டின் வடிவம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் முகத்தை ஒத்திருப்பதாக பலரும் கூறுகின்றனர். இது டிரம்ப் மீதான நகைச்சுவையான கிண்டலாக பார்க்கப்படுகிறது.

Harsh Goenkas Viral Toast: தொழிலதிபர் ஹர்ஷ் கோயங்காவின் டோஸ்ட்டில் பிரபலத்தின் முகம்.. சமூக வலைதள பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவு!

தொழிலதிபர் ஹர்ஷ் கோயங்கா

Published: 

18 Aug 2025 16:01 PM

டெல்லி, ஆகஸ்ட் 18: இந்திய தொழிலதிபர் ஹர்ஷ் கோயங்கா (Harsh Goenka) தனது எக்ஸ் பக்கத்தில் அடிக்கடி நகைச்சுவையான பதிவுகளால் தனது ஃபாலோவர்களை மகிழ்விப்பார். ஆனால், அவரது சமீபத்திய காலை உணவு பற்றிய புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. முன்னதாக, இந்திய தொழிலதிபர் ஹர்ஷ் கோயங்காவும், ஹார்மெயி நிறுவனர் சபீர் பாட்டியாவும் இந்தியா குறித்து தேசபக்தி, விமர்சனம் மற்றும் வெளிநாடுவாழ் இந்தியர்களின் பங்கு குறித்து சமூக வலைதளங்களில் விவாதம் நடத்தினர். அதனை தொடர்ந்து, ஹர்ஷ் கோயங்கா தற்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (Donald Trump) கிண்டல் செய்யும் விதமாக ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

ALSO READ: ரஷ்ய விவகாரம் – உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை

என்ன பதிவிட்டிருந்தார் ஹர்ஷ் கோயங்கா..?


இந்திய தொழிலதிபர் ஹர்ஷ் கோயங்கா தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், “நான் ஒரு டோஸ்ட் சாப்பிட்டு கொண்டிருந்தேன். எனக்கு அப்போது அந்த டோஸ்டில் மாயத்தோற்றம் வர ஆரம்பித்தது. நீங்களும் அவரை பார்க்கிறீர்களா..?” என பதிவிட்டிருந்தார். அந்த பதிவோடு இணைக்கப்பட்ட ஒரு படத்தில் டோஸ்ட்டின் பழுப்பு நிறம் மற்றும் துண்டிக்கப்பட்ட விளிம்புகள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் முகத்தை போல் இருந்தது.

ஆதரவு தெரிவித்த பயனர்கள்:

இதற்கிடையில் சமூக ஊடக பயனர்கள் சிலரும் பதிவுக்கு கீழ் கிண்டல் செய்தனர். அதில், “டிரம்ப் கட்டணத்தை மேலும் அதிகரிப்பதற்கு முன்பு அதை சாப்பிட்டு முடித்துவிடுங்கள்” என்று நக்கலாக கூறினார். மற்றொருவர், “இந்த சிற்றுண்டி உங்கள் வயிற்றில் 30 சதவீத வரியை விதிக்கும்” என்று எழுதினார்.

ALSO READ: அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி.. டிரம்புடன் முக்கிய மீட்டிங்? என்ன மேட்டர்? 

வரி உயர்வு:


2025 ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெயை இந்தியா வாங்குவதை மேற்கோள் காட்டி, இந்திய இறக்குமதிகள் மீது கூடுதலாக 25 சதவீத வரியை டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். அப்போது, இந்திய ஏற்றுமதிகள் மீது அமெரிக்க வரிகளை விதிக்க முடியும் என்றாலும் அது நாட்டின் இறையாண்மையை பாதிக்காது. அதிக வரிகள் சிறந்த மாற்று வழிகளை தேடுவதற்கான இந்தியாவின் உறுதியை வலுப்படுத்தும் மற்றும் தன்னிறைவுக்கான பாதையை விரைவுபடுத்தும் என்று ஹர்ஷ் கோயங்கா ட்வீட் செய்தார்.