Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பாம்புக்கடி மரணத்தில் இந்தியா முதலிடம்.. 58,000 இறப்புகள் ஆண்டுதோறும் ஏற்படுவதாக வெளியான தகவல்..

Snakebite Death: ஆண்டுதோறும் இந்தியாவில் பாம்புக்கடியால் 58,000 பேர் உயிரிழப்பதாக அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், உலகளாவிய பாம்பு கடி இறப்புகளில் கிட்டத்தட்ட 50 சதவீதம் இந்தியாவில் பதிவாகியுள்ளதாகவும் இதன் காரணமாக பாம்புக்கடி தலைநகரமாக இந்தியா கருதப்படுவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாம்புக்கடி மரணத்தில் இந்தியா முதலிடம்.. 58,000 இறப்புகள் ஆண்டுதோறும் ஏற்படுவதாக வெளியான தகவல்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Updated On: 12 Jun 2025 11:30 AM

பாம்புக்கடியால் ஏற்படும் மரணம்: உலக அளவில் பாம்பு கடியால் (Snake Bite)ஏற்படும் இறப்புகளில் இந்தியா முதலிடம் வகிப்பதாக சமீபத்தில் வெளியான அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. அதிக பாம்பு எண்ணிக்கை, பரந்த கிராமப்புற மக்கள் தொகை மற்றும் பாரம்பரிய மருத்துவ முறைகளை நம்பி இருப்பதே இதற்கான காரணம் என உலகளாவிய அறிக்கை தெரிவிக்கிறது. இந்தியாவில் ஆண்டுதோறும் 58 ஆயிரம் இறப்புகள் பாம்பு கடியால் பதிவாகியுள்ளதாக டைம் டு பைட் என்வெனமிங் கேட்டலைஸிங் ஆப் க்ளோபல் ரெஸ்பான்ஸ் டு ஸ்நேக் பைட் என்வெனமிங் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதோட தரமான மருத்துவம் கிடைப்பதில் சிக்கல் இருப்பதாகவும், குறிப்பாக ஏழை மற்றும் பழங்குடியின சமூகங்களுக்கிடையே இந்த தாக்கம் கடுமையாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பாம்புக்கடியால் மரணங்கள் ஏற்பட இதுவே காரணம்:

டைம் டு பைட் என்வெனமிங் கேட்டலைஸிங் ஆப் க்ளோபல் ரெஸ்பான்ஸ் டு ஸ்நேக் பைட் என்வெனமிங் என்ற அறிக்கையில் பாரம்பரிய மருத்துவத்தின் மீதான நம்பிக்கை காரணமாக பாம்பு கடி சிகிச்சையில் தாமதம் ஏற்படுவதாகவும், அதோடு சில உள்நாட்டு ஆன்ட்டி வேணம் எனப்படும் விஷ எதிர்ப்பு உற்பத்தியாளர்களிடையே தரக்கட்டுப்பாடு கடைப்பிடிக்காததும் இதற்கான மருத்துவ செலவுகளும் முக்கிய காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் ஜெனிவாவில் நடைபெற்ற 78வது உலக சுகாதார மாநாட்டில் பாம்பு கடியை எதிர்த்து போராடும் குழுவின் மூலோபய பிரிவான க்ளோபல் ஸ்நேக் பைட் டாஸ்க் ஃபோர்ஸ் இந்த அறிக்கையை வெளியிடப்பட்டுள்ளது. முக்கியமாக பாம்பு கடியால் ஏற்படும் இறப்புகள் மற்றும் அதற்கான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் வகையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 2030 ஆம் ஆண்டுக்குள் பாம்பு கடியால் ஏற்படும் இறப்புகள் மற்றும் அதன் பாதிப்புகளை பாதியாக குறைக்கும் வகையில் உலக சுகாதார அமைப்பு இலக்கை வைத்துள்ளதாகவும், அதனை கண்காணிக்க இந்த அறிக்கை உதவுவதாகும் குறிப்பிடப்பட்டுள்ளது. உலக நாடுகள் இதற்கான நடவடிக்கைகளை விரைவுப்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்திய நாட்டில் இதற்கான முன்னேற்றங்கள் இருந்தாலும் அதற்கான சவால்களும் கடுமையாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல் முன்னணி பொது சுகாதார மருத்துவரும் அறிக்கையின் ஆசிரியர்களில் ஒருவருமான டாக்டர் யோகேஷ் ஜெயின் இது தொடர்பாக பேசுகையில், பாம்பு கடி தொடர்பான மரணங்களை தடுக்க இந்தியா இன்னும் முழு வீச்சில் இறங்கவில்லை எனவும், இதற்கு சுகாதார அமைப்புகளும் ஒரு காரணம் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் மருத்துவர்களுக்கு இதனை கையாள்வதற்கான போதிய அனுபவம் இல்லை எனவும் இதற்கான கருவிகள் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். இது ஒரு பக்கம் இருக்க ஏழை எளிய மக்களுக்கு பாம்பு கடி தொடர்பான சிகிச்சை கிடைப்பதில் சிக்கல் இருப்பதாகவும், இதன் காரணமாக அவர்கள் பாரம்பரிய முறை சிகிச்சை அணுகக் கூடிய சூழலுக்கு தள்ளப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

பாம்ப்புக்கடி மரணத்தின் தலைநகராக இந்தியா:

சத்தீஸ்கரில் ஜன் ஸ்வஸ்த்ய சஹ்யோக் என்ற சமூக சுகாதார திட்டத்தை நிறுவி நடத்திவரும் டாக்டர் யோகேஷ் ஜெயின் பாம்பு கடியால் மக்கள் மருத்துவமனைக்கு வந்தாலும் அவர்களுக்கு கிடைக்க கூடிய பாலிவேலண்ட் 35 வகையான விஷயங்களில் ஒரு சிலவற்றை மட்டுமே உள்ளடக்கியதாக இருக்கிறது என்றும் அது சுமார் 80 சதவீத வழக்குகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார். உலகளாவிய பாம்பு கடி இறப்புகளில் கிட்டத்தட்ட 50 சதவீதம் இந்தியாவில் பதிவாகியுள்ளதாகவும், இதன் காரணமாக உலகின் பாம்பு கடி தலைநகரமாக இந்தியா கருதப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.