முதல் நீர் விமான சோதனையில் வெற்றி பெற்ற இந்தியா!

India Succeeded Its First Water Plane Test | இந்தியா தொழில்நுட்ப வளர்ச்சியில் நாளுக்கு நாள் முன்னேறி சென்றுக்கொண்டு இருக்கிறது. அந்த வகையில், இந்தியா உத்தரகாண்டில் நடத்திய முதல் நீர் விமான சோதனையில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

முதல் நீர் விமான சோதனையில் வெற்றி பெற்ற இந்தியா!

உத்தரகாண்டில் நடத்தப்பட்ட நீர் விமான சோதனை

Updated On: 

10 Apr 2026 07:11 AM

 IST

டேராடூன், ஏப்ரல் 10 : இந்தியா (India) தொழில்நுட்ப வளர்ச்சியில் (Technology Development) நாளுக்கு நாள் முன்னேறி வருகிறது அந்த வகையில், இந்தியா நடத்திய தனது முதல் நீர் விமான சோதனையில் (First Water Plane Test) வெற்றி பெற்றுள்ளது.  அதாவது, உத்தரகாண்ட் (Uttarakhand) மாநிலம், ரிஷிகேஷ் பகுதியில் கங்கா தடுப்பணை அமைந்துள்ளது. இந்த பகுதியில் உள்ள பசு லோக் என்ற இடத்தில் டி ஹாவிலாண்ட் கனடா டி.எச்.சி- 6 டிவின் ஓட்டர் ரக நீர் மூழ்கி விமானம் வெற்றிகரமாக சோதனை ஓட்டத்தை நிறைவு பெற்றது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

முதல் நீர் விமான சோதனையில் வெற்றி பெற்ற இந்தியா

சோதனை ஓட்டத்தில் பயன்படுத்தப்பட்ட அந்த விமானம், நீரில் இயங்கும் விமானமாக மாற்றப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்தியா இத்தகைய நீர் விமான சோதனையை மேற்கொண்டது இதுவே முதல் முறை ஆகும். இந்த சோதனையை அவானி சிங் தலைமையிலான ஸ்கை ஹாப் ஏவியேஷன் நிறுவனம் மேற்கொண்டது. மொத்தம் 19 இருக்கைகளை கொண்ட சற்று சிறிய ரக விமானமான இது தரையிலும், வானத்திலும் இயக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதையும் படிங்க : ஓடும் ரயிலில் குழந்தை பெற்றெடுத்த பெண்.. கேரளத்தில் சுவாரஸ்ய சம்பவம்!

வணிக ரீதியான நீர் விமான சேவையை தொடங்க அடுத்தக்கட்ட திட்டம்

இந்த நீர் விமான சோதனை வெற்றி பெற்றதன் மூலம், இந்தியாவில் சுற்றுலா தலங்களான அந்தமான், லட்சத்தீவு, தேரி ஏரி போன்ற தொலைதூர பகுதிகளுக்கு எளிதான போக்குவரத்து சேவைகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் உடான் திட்டத்தின் கீழ், இந்த வகையான நீர் விமான சேவைகளை வணிக ரீதியாக தொடங்குவதற்கான அடுத்தக்கட்ட பணிகளையும் இந்த நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

இதையும் படிங்க : பக்தியை வெளிப்படுத்திய அனந்த் அம்பானி.. பழமையான கோவிலுக்கு ரூ. 12 கோடி நன்கொடை!

இந்தியா தனது இந்த முதல் நீர் விமான சோதனை முயற்சியில் வெற்றி பெற்றுள்ளது வளர்ச்சி பாதையில் இந்தியா மேலும் முன்னோக்கி செல்வதை உறுதி செய்யும் விதமாக அமைந்துள்ளது.

Follow Us
தங்கம் வாங்குவதற்கு இது சிறந்த நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
ஆர்தமெஸ் 2 எடுத்த முதல் படத்தை பகிர்ந்த நாசா
புதிய கப்பல் வழித்தடம் - முடிவுக்கு வரும் எரிபொருள் பற்றாக்குறை
கேஸ் சிலிண்டருக்காக 40 நாட்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை - என்ன நடக்கிறது?