இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தம்.. தலைவர்கள் வரவேற்பு!

India, Pakistan Agree to Ceasefire | இந்தியா - பாகிஸ்தான் இடையே கடும் மோதல் நிலவி வந்த நிலையில், அது இரு நாடுகளுக்கும் இடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது உலக அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தம்.. தலைவர்கள் வரவேற்பு!

கோப்பு புகைப்படம்

Updated On: 

10 May 2025 22:15 PM

சென்னை, மே 10 : இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை (India – Pakistan Ceasefire) அறிவித்துள்ள நிலையில், தலைவர்கள் அதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்தியாவுக்கு பாகிஸ்தானுக்கும் இடையே போர் உருவானால் அது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என உலக நாடுகள் கருத்து தெரிவித்து வந்த நிலையில், இந்தியா – பாகிஸ்தானின்  இந்த முடிவு உலக நாடுகள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில், இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தம் குறித்து உலக தலைவர்கள் என்ன கூறியுள்ளனர் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானை கடுமையாக தாக்கிய இந்தியா

ஏப்ரல் 22, 2025 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலை தொடர்ந்து, இந்திய அரசு பாகிஸ்தான் மீது கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அதனை தொடர்ந்து ஆபரேஷன் சிந்தூரை கையில் எடுத்த இந்தியா, பாகிஸ்தான் பயங்கரவாதிகள் முகாம்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தியது. இதில் 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானும் பதில் தாக்குதல் நடத்தி வந்த நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் நிலவி வந்தது. இந்த நிலையில் இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் ஒப்பந்தம் அமலுக்கு வந்துள்ளது.

இந்தியா – பாகிஸ்தான் போர் ஒப்பந்தம் – உலக தலைவர்கள் வரவேற்பு

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் ஒப்பந்தம் முடிவாகியுள்ள நிலையில், உலக தலைவர்கள் அதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

போர் நிறுத்தம் வரவேற்கத்தக்கது. அமைதி நிலவட்டும். எல்லைகளை பாதுகாத்த ராணுவ வீரர்களுக்கு வீர வணக்கம் என பதிவிட்டுள்ளார்.

அமெரிக்க வெளியுறவு செயலாளர்

இந்தியா மற்றும் பாகிஸ்தான் உடனடியாக சண்டை நிறுத்தத்தை ஒப்புக்கொண்டுள்ளன. நடுநிலையான இடத்தில் பல்வேறு பிரச்னைகள் குறித்து பேச்சுவார்த்தைகளை தொடங்குவார்கள். இதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

ஜம்மு & காஷ்மீர் முதலமைச்சர்

மோதல் நிறுத்தப்பட்டு இருப்பதை நான் வரவேற்கிறேன். இது 2-3 நாட்களுக்கு முன்பாக நடைபெற்று இருந்தால் நாங்கள் இழந்த உயிர்கள் போயிருக்காது. சேதம் எங்கு ஏற்பட்டுள்ளது என்பதை மதிப்பிட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்குவது ஜம்மு மற்றும் காஷ்மீர் அரசின் பொறுப்பாகும் என்று கூறியுள்ளார்.

Related Stories
India-Pakistan Ceasefire Violated: சண்டை நிறுத்தத்தை மீறி துப்பாக்கிச் சூடு.. எல்லை பாதுகாப்பு படை எஸ்ஐ வீரமரணம்..!
India-Pakistan Ceasefire Violated: சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறியது உண்மை.. வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி விளக்கம்!
India Pakistan Ceasefire Violation: மீண்டும் ஸ்ரீநகரில் வெடிசத்தங்கள்..! பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவித்த ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர்!
Bollywood supports India: ஆபரேஷன் சிந்தூருக்கு ஆதரவு.. ஆமிர் கான், சைஃப் அலி கானை கொண்டாடும் இந்தியர்கள்!
போர் ஒப்பந்தத்தை மீறிய பாகிஸ்தான்.. காஷ்மீரில் அத்துமீறி தாக்குதல் நடத்த முயற்சி!
பாகிஸ்தானின் வதந்தி பரப்பும் நடவடிக்கைகளை இந்தியா வெற்றிகரமாக முறியடித்தது – இந்திய ராணுவம்!