கொரோனா தடுப்பூசியால் மாரடைப்பு அதிகரிக்கிறதா? – ஐஎம்சிஆர் விளக்கம்

Covid 19 Vaccine: கொரோனா தடுப்பூசி செலுத்திய பின்னர் வயதானவர்களிடையே மாரடைப்பு அதிகரித்து வருவதாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு ஐசிஎம்ஆர் மற்றும் எய்ம்ஸ் விளக்கம் அளித்துள்ளன. விரிவான ஆய்வுகளின் படி, தடுப்பூசி மற்றும் மாரடைப்பு இடையே எவ்வித தொடர்பும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசியால் மாரடைப்பு அதிகரிக்கிறதா? - ஐஎம்சிஆர் விளக்கம்

கொரோனா தடுப்பூசி

Updated On: 

02 Jul 2025 18:18 PM

இந்தியா, ஜூலை 2: கொரோனா (Covid 19) தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களிடையே தொடர்ச்சியாக மாரடைப்பால் மரணம் அதிகரித்து வருவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு ஐசிஎம்ஆர் (Indian Council of Medical Research) மற்றும் எய்ம்ஸ் மருத்துவமனை ஆகியவை விளக்கம் அளித்துள்ளது. கடந்த 2020 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் உலக அளவில் மிகப்பெரிய தொற்று நோயாக கொரோனா உருவெடுத்தது. ஏராளமான உயிர்கள் இதனால் பலியாகின. கொரோனா உருமாற்றம் அடைந்து தொடர்ந்து பரவி வந்தாலும் அந்த இரண்டு ஆண்டுகளில் இருந்த வீரியம் இப்போது இல்லை என சொல்லப்படுகிறது. இப்படியான நிலையில் கொரோனாவுக்கு இந்தியாவில் கோவிஷீல்ட் மற்றும் கோவாக்ஸின் ஆகிய தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது. இவர்களில் சிலருக்கு பக்கவிளைவுகள் ஏற்பட்டு உயிரிழப்பு நிகழ்ந்ததாகவும் கூறப்பட்டது. ஆனால் பெரும்பாலானோர் இணை நோய்கள் காரணமாக உயிரிழந்ததாகவும் விளக்கமளிக்கப்பட்டிருந்தது.

இப்படியான நிலையில் கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தில் ஒரே மாதத்தில் 20 இளைஞர்கள் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். இந்த விஷயத்தை அரசு தீவிரமாக எடுத்துக் கொள்வதாகவும், இது கொரோனா தடுப்பூசிகளால் நிகழ்ந்த பக்க விளைவா என்பதை கண்டறிய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்திருந்தார். இந்நிலையில் இளம் வயதினரிடையே அதிகரித்து வரும் கொரோனா மரணங்கள் குறித்து ஐசிஎம்ஆர் மற்றும் எய்ம்ஸ் மருத்துவமனை ஆகியவை விளக்கம் அளித்துள்ளது.

கொடுக்கப்பட்டுள்ள விளக்கம்

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் எய்ம்ஸ் நடத்திய விரிவான ஆய்வுகளை சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் மேற்கோள் காட்டி இந்த பதிவுகளை வெளியிட்டுள்ளது. அதன்படி மாரடைப்பால் ஏற்படும் திடீர் மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பிற்கும், கொரோனா தடுப்பூசிக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஐசிஎம்ஆர் மற்றும் தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் ஆகியவற்றின் ஆய்வுகள் இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகள் பாதுகாப்பானவை என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

கவும் அரிதாக மட்டுமே கடுமையான பக்க விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் கண்டறியப்பட்டுள்ளது. ஒருவரின் மரபியல், வாழ்க்கை முறை, முன்பே இருக்கும் உடல் நல பாதிப்புகள் மற்றும் கொரோனாவுக்கு பிந்தைய சிக்கல்கள் உள்ளிட்ட காரணிகளால் திடீர் மாரடைப்பு ஏற்படக்கூடும் என்று அந்த அறிக்கையில் தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது. இந்த மரணங்களுடன் தடுப்பூசியை இணைப்பது தவறானது என சொல்லப்பட்டிருக்கிறது.