மாநிலங்களுக்கு வணிக சிலிண்டர் ஒதுக்கீட்டை 50% ஆக உயர்த்திய மத்திய அரசு.. ஹோட்டல், டீ கடைகளுக்கு குட் நியூஸ்!!

Commercial LPG allocation raises: இந்நிலையில், மாநிலங்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த 20% ஒதுக்கீட்டுடன், தற்போது கூடுதலாக 20% வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. சில குறிப்பிட்ட நிபந்தனைகளை நிறைவேற்றும் மாநிலங்களுக்கு மேலும் 10% வரை வழங்கப்படலாம். ஒட்டுமொத்தமாக 50% வரை எல்பிஜி சிலிண்டர் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களுக்கு வணிக சிலிண்டர் ஒதுக்கீட்டை 50% ஆக உயர்த்திய மத்திய அரசு..  ஹோட்டல், டீ கடைகளுக்கு குட் நியூஸ்!!

கோப்புப் புகைப்படம்

Updated On: 

21 Mar 2026 21:56 PM

 IST

உணவகங்கள், தாபாக்கள் மற்றும் கேன்டீன்களின் நலனைக் கருத்தில் கொண்டு, வணிக ரீதியிலான எல்பிஜி (Commercial LPG) சிலிண்டர்களுக்கான மாநில ஒதுக்கீட்டை 50 சதவீதம் வரை உயர்த்தி மத்திய அரசு சனிக்கிழமை உத்தரவிட்டுள்ளது. மேற்கு ஆசியாவில் நிலவும் போர் சூழல் காரணமாக, ‘ஹார்முஸ் ஜலசந்தி’ (Strait of Hormuz) வழியாக வரும் எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டது. இதனால் இந்தியாவில் எல்பிஜி (LPG) சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டது. வீடுகளுக்கான சமையல் எரிவாயு விநியோகத்தைப் பாதிப்பின்றி வழங்க, வணிக மற்றும் தொழில்முறை சிலிண்டர் விநியோகத்தில் அரசு முன்னதாகக் கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. இது சிறிய மற்றும் நடுத்தர உணவகங்களை கடுமையாகப் பாதித்தது.

மேலும் படிக்க: இயற்கை எரிவாயு பெறும் வீடுகளுக்கு சிலிண்டர் கிடையாது… மத்திய அரசு அதிரடி உத்தரவு!

50 சதவீதம் வரை உயர்வு:

இந்நிலையில், மாநிலங்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த 20% ஒதுக்கீட்டுடன், தற்போது கூடுதலாக 20% வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. சில குறிப்பிட்ட நிபந்தனைகளை நிறைவேற்றும் மாநிலங்களுக்கு மேலும் 10% வரை வழங்கப்படலாம். ஒட்டுமொத்தமாக 50% வரை எல்பிஜி சிலிண்டர் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த கூடுதல் ஒதுக்கீடு குறிப்பாக உணவகங்கள், ஹோட்டல்கள் மற்றும் தாபாக்களுக்கு முன்னுரிமை அளித்து வழங்கப்படும். மேலும், புலம்பெயர் தொழிலாளர்கள் பயன்படுத்தும் 5 கிலோ சிலிண்டர்களுக்கும் இது பொருந்தும்.

50% எல்பிஜி சிலிண்டர் ஒதுக்கீடு:

வணிக ரீதியிலான எல்பிஜி சிலிண்டர் தேவைப்படும் நிறுவனங்கள் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களிடம் (IOC, BPCL, HPCL) கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். எதிர்காலத்தில் எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாட்டைத் தவிர்க்க, வணிகப் பயன்பாட்டாளர்கள் குழாய் மூலம் வரும் இயற்கை எரிவாயு (Piped Natural Gas – PNG) இணைப்புக்கு விண்ணப்பிப்பதை அரசு கட்டாயமாக்கியுள்ளது. பிஎன்ஜி வசதி உள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் அந்த இணைப்பிற்கு விண்ணப்பித்த பின்னரே, அவர்களுக்கு இந்த 50% ஒதுக்கீட்டின் கீழ் எல்பிஜி சிலிண்டர்கள் வழங்கப்படும் என பெட்ரோலிய அமைச்சகச் செயலாளர் நீரஜ் மிட்டல் தெரிவித்துள்ளார்.

எரிவாயு உற்பத்தி அதிகரிப்பு:

அதேசமயம், உள்நாட்டு எரிவாயு உற்பத்தியை அரசு 40 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இது நாட்டின் ஒட்டுமொத்தத் தேவையில் 16 சதவீதத்தைப் பூர்த்தி செய்கிறது. கடந்த சில வாரங்களில் மட்டும் சுமார் 1.25 லட்சம் புதிய இயற்கை எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. சுமார் 5,600 நுகர்வோர் ஏற்கனவே எல்பிஜியில் (LPG) இருந்து பிஎன்ஜி-க்கு (PNG) மாறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: கிராமப்புறங்களில் கேஸ் சிலிண்டர் முன்பதிவு காலம் 45 நாட்களாக உயர்வு – மத்திய அரசு நடவடிக்கை

இந்த நடவடிக்கையின் மூலம், உணவகத் தொழில் செய்பவர்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளதுடன், எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்ய நுகர்வோரை பிஎன்ஜி நோக்கி நகர்த்தவும் அரசு திட்டமிட்டுள்ளது.

Follow Us
வங்கி லாக்கரில் வைக்கப்படும் நகைகளுக்கு பாதுகாப்பு இல்லையா? உண்மை என்ன?
ஹார்முஸ் கடல் பகுதியில் சிக்கிய இந்திய கேப்டன் பயணித்த கப்பல் - குடும்பத்தினர் கவலை
போர் பதற்றம் - வெறிச்சோடி காணப்படும் துபாய் நகரங்கள்
இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு என்பது உண்மையா? மத்திய அரசு விளக்கம்