வங்கியில் துப்பாக்கி உடன் நுழைந்த கும்பல்.. ரூ.50 லட்சத்தை கொள்ளை அடித்ததால் பரபரப்பு!

Gujarat SBI Bank Heist | குஜராத் மாநிலம், சூரத் மாவட்டம், வரச்சா பகுதியில் துப்பாக்கி முணையில் நுழைந்த குப்மல் ஒன்று வங்கி ஊழியர்களை மிரட்டி ரூ.50 லட்சம் பணத்தை கொள்ளை அடித்துச் சென்றுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வங்கியில் துப்பாக்கி உடன் நுழைந்த கும்பல்.. ரூ.50 லட்சத்தை கொள்ளை அடித்ததால் பரபரப்பு!

வங்கியில் கொள்ளை அடித்த கும்பல்

Updated On: 

28 Apr 2026 23:04 PM

 IST

சூரத், எப்ரல் 28 : குஜராத் (Gujarat) மாநிலம், சூரத்தின் (Surat) வரச்சா பகுதியில் பட்டப்பகலில் நடைபெற்ற வங்கி கொள்ளை சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பகல் நேரத்தில் வங்கிக்குள் துப்பாக்கியுடன் புகுந்த கொள்ளை கும்பல் ஒன்று ரூ.50 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளது. இந்த நிலையில், குஜராத்தில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

குஜராத் வங்கியில் பட்டப்பகலில் துப்பாக்கி முணையில் கொள்ளை

குஜராத் மாநிலம், சூரத் மாவட்டத்தில் உள்ள வரச்சாவில் எஸ்பிஐ வங்கியின் கிளை ஒன்று அமைந்துள்ளது. இந்த வங்கியில் துப்பாக்கியுடன் நுழைந்த கும்பல் ஒன்று வங்கியில் இருந்த ஊழியர்களை மிரட்டி ரூ.50 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளது. இந்த கொள்ளை சம்பசம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : எமனாக மாறிய தர்பூசணி பழம்? மும்பையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியான சோகம்.. பின்னணி என்ன!

கொள்ளை சம்பவம் நடைபெற்றது எப்படி?

வங்கியில் இருந்த ஊழியர்களை துப்பாக்கி முணையில் மிரட்டி பணய கைதிகளாக பிடித்துள்ளனர். பின்னர், அவர்கள் கருவூலத்தில் இருந்து சுமார் 50 லட்சம் ரூபாயை கொள்ளை அடித்துச் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதனை தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற உள்ளூர் காவல்துறையினர் மற்றும் உயர் அதிகாரிகள் அடங்கிய குழு, உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளது.

இதையும் படிங்க : ரயில் பாதையில் வெடிவிபத்து.. சதி நடத்த திட்டமா? பரபரப்பில் பஞ்சாப்!

குற்றவாளிகளை வலைவீசி தேடும் போலீஸ்

இந்த குழுவினர் வங்கியை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை பிடிக்கும் தீவிர பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். நகரம் முழுவதும் சோதனை சாவடிகளை அமைத்துள்ள போலீசார், வங்கி ஊழியர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

பட்டப்பகலில் துப்பாக்கியுடன் வங்கிக்குள் புகுந்த கும்பல் வங்கியில் இருந்த ரூ.50 லட்சம் பணத்தை கொள்ளை அடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி
ஹிமாச்சல் பிரதேசத்தின் மலைப்பகுதிகளை பாதுகாக்கும் உள்ளூர் தெய்வம்..
காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா 9வது இடம்..