30% குறைந்த கட்டணத்தில் மத்திய அரசின் ‘பாரத் டாக்ஸி’.. ஓலா, உபருக்கு மாற்று வந்தாச்சு!!

‘பாரத் டாக்சி’ சேவை வெற்றிகரமாக செயல்பட்டால், இந்தியாவின் ரைடு-ஹெய்லிங் துறையில் ஒரு முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது. பயணிகளுக்கு மலிவு கட்டணம், ஓட்டுநர்களுக்கு நியாயமான வருமானம் என்ற இரு நோக்கங்களையும் ஒருங்கிணைக்கும் இந்த முயற்சி, ஓலா - உபர் ஆதிக்கத்திற்கு உண்மையான சவாலாக அமையுமா என்பதே தற்போது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

30% குறைந்த கட்டணத்தில் மத்திய அரசின் ‘பாரத் டாக்ஸி’.. ஓலா, உபருக்கு மாற்று வந்தாச்சு!!

மாதிரிப் புகைப்படம்

Updated On: 

05 Feb 2026 13:39 PM

 IST

டெல்லி, பிப்ரவரி 05: ஓலா, உபர் போன்ற தனியார் டாக்சி சேவைகளுக்கு மாற்றாக, மத்திய அரசு ஆதரவுடன் ‘பாரத் டாக்சி’ (Bharat Taxi) என்ற புதிய பயண சேவை இன்று நாடு முழுவதும் அதிகாரப்பூர்வமாக அறிமுகமாகிறது. இந்த சேவையின் தொடக்க விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்று, செயலியை தொடங்கி வைக்கிறார். ‘பாரத் டாக்சி’ சேவை, ஓட்டுநர்களுக்கானது – ஓட்டுநர்களால் இயக்கப்படுவது என்ற அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தனியார் நிறுவனங்கள் வசூலிக்கும் அதிக கமிஷன் கட்டணங்களிலிருந்து ஓட்டுநர்கள் விடுபட முடியும். ஓட்டுநர்களின் வருமானம் நேரடியாக அவர்களிடமே செல்லும் வகையில்,  இந்த சேவை செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: வரதட்சணை கேட்டு குடும்பத்துடன் கொடுமை செய்த கணவன்.. இளம் பெண் தற்கொலை.. சோக சம்பவம்!

30% வரை குறைந்த கட்டணம்:

இந்த சேவையின் முக்கிய அம்சமாக, பயணக் கட்டணம் ஓலா – உபர் சேவைகளை விட 30 சதவீதம் வரை குறைவாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது. கமிஷன் இல்லாத அல்லது மிகக் குறைந்த கட்டண அமைப்பு காரணமாக, பயணிகளுக்கும் ஓட்டுநர்களுக்கும் இருவருக்கும் நன்மை கிடைக்கும் வகையில் கட்டண நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஒரே செயலியில் கார், ஆட்டோ, பைக்:

‘பாரத் டாக்சி’ செயலி மூலம், கார், ஆட்டோ, பைக் டாக்சி போன்ற பல்வேறு வகை பயணங்களை முன்பதிவு செய்ய முடியும். மெட்ரோ நகரங்கள் மட்டுமின்றி, படிப்படியாக தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களின் நகரங்கள் மற்றும் மாவட்டங்களிலும் இந்த சேவை விரிவுபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு ஆதரவு – பாதுகாப்பு உறுதி:

மத்திய அரசின் ஆதரவுடன் தொடங்கப்படுவதால், பயணிகளின் பாதுகாப்பு மற்றும் ஓட்டுநர்களின் நலன் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என கூறப்படுகிறது. பயண விவரங்களை பகிரும் வசதி, அவசர உதவி, நேரடி கண்காணிப்பு போன்ற அம்சங்கள் செயலியில் இடம்பெறும்.

ஏன் ‘பாரத் டாக்சி’ முக்கியம்?

தற்போது, ஓலா மற்றும் உபர் போன்ற தனியார் செயலிகளில், அதிக கமிஷன் திடீர் கட்டண உயர்வு (Surge Pricing) ஓட்டுநர்களின் வருமான குறைவு போன்ற புகார்கள் தொடர்ந்து எழுந்து வருகின்றன. இந்நிலையில், மத்திய அரசு ஆதரவுடன், குறைந்த கட்டணத்தில், ஓட்டுநர்களின் வருமானத்தை பாதுகாக்கும் சேவையாக ‘பாரத் டாக்சி’ அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: அதிகாலையில் ஷாக்.. அதிர்ந்த பூமி.. ஜம்மு காஷ்மீரில் பதிவான நிலநடுக்கம்!

‘பாரத் டாக்சி’ சேவை வெற்றிகரமாக செயல்பட்டால், இந்தியாவின் ரைடு-ஹெய்லிங் துறையில் ஒரு முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது. பயணிகளுக்கு மலிவு கட்டணம், ஓட்டுநர்களுக்கு நியாயமான வருமானம் என்ற இரு நோக்கங்களையும் ஒருங்கிணைக்கும் இந்த முயற்சி, ஓலா – உபர் ஆதிக்கத்திற்கு உண்மையான சவாலாக அமையுமா என்பதே தற்போது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

‘ஒரு கோடி ரூபாய் சம்பாதிப்பவரின் வாழ்க்கைக்கே மதிப்பு இல்லை’.. தொழிலதிபர் வேதனை!!
‘மார்கோ’ பட இயக்குநருடன் பெரும் பட்ஜெட் படத்தில் நடிக்க தயாராகும் பாலகிருஷ்ணா!
புகழ்பெற்ற தெலுங்கு இயக்குநருடன் இணையும் நடிகர் கார்த்தி..
உலகின் ஆபத்து நிறைந்த சவாலான விமான நிலையங்கள்